சின்னக்கொள்ளுப்பாட்டியின் அந்தியேட்டி..!

 

 


இரு வாரங்களுக்கு முன்னரே கீரிமலைக்கு செல்லவும், அடுத்த நாள் அந்தியேட்டிச் சடங்கில் கலந்து கொள்ளவும் என இரு நாட்கள் சனி ஞாயிறு நின்று வேலைசெய்துவிட்டு, மாற்றுலீவு (Lieu Leave) எடுக்கத்திட்டம் போட, நடந்தது வேறுமாதிரி..!

நாம் நினைப்பது ஒன்று..! ஆனால் நடப்பது வேறு வேறு..!

விடுமுறையை யாழில் கழிக்க முடியாமல் கொழும்பு சென்று, பரீட்சைப்பணிப்பாளர் நேர்முகத்தேர்வை முடித்து, அங்கிருந்து வீடுவந்து சேர  அதிகாலை 4.00 மணியாகிவிட்டது. பின்னர் உறங்கி எழ காலை 10.00மணி. அதற்கு இடையில் எழும்பி உணவு, தேநீர் போன்றவற்றை எடுத்துவிட்டு, சில அலுவலக வேலைகளையும் செய்து முடிக்க, எல்லாம் சரியாக இருந்தது.

பின்னர் குளித்து வெளிக்கிட்டு, நிகழ்வுக்குப் போக காலை 11.30 ஆகிவிட்டது.

அங்கே சில சிறிய வேலைகளுக்கு உதவி, அவர்கள் சொன்னபடி கல்வெட்டை வாசித்தேன்.  எனக்கு என்று சில வேலைகளை ஒதுக்கி வைத்திருப்பார்கள் போலும்..!

கல்வெட்டை என்னைத் தனியாக வாசிக்கச்சொன்னார்கள். அப்படி வாசித்து இருந்தால் நன்றாக இருக்காது எனநினைத்து, பலரை அதற்குள் இணைத்தேன்.

குறிப்பாக வீட்டில் பரீட்சை முடிவு வந்தபின்னர், மீண்டும் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்த மகளை கூப்பிட்டு, பஞ்ச புராணங்களைப் பாடச்சொன்னேன். மக்கள் முன்வர முதலில் தயங்கி,  அழுகையுடன் வந்தார். அவரை அனைவரும் தேற்றினார்கள். பின்னர் தன்னை மனரீதியில் தயார்படுத்தி, புராணங்களை அழகாகப் பாடினார்..! அத்துடன் ஒரு கட்டுரையையும் வாசித்தாள்..! சமூகத்திற்குப் பயப்பட்ட பிள்ளையை, அங்கே முன்னுக்கு கொண்டுவந்தது எனக்கு தனிப்பட்ட ரீதியில் மிகவும் சந்தோசமாக இருந்தது.

 பின்னர் மதிய உணவை முடித்துக்கொண்டு, சுவிஸ் நாட்டில் இருந்து வந்த அப்பாவின் ஒன்றைவிட்ட துரைத் தம்பியையும், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரி ஆகியோரை அழைத்துக்கொண்டு, அம்மா வீடு சென்று, எனது அம்மாவைப் பார்க்க அவர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்தது சற்று மகிழ்வாக இருந்தது.

பின்னர் அவர்களை அவர்களது வீட்டில் இறக்கிவிட்டு மாலை 6.00 வரை உறங்கிப் பின்னர் தேநீர் மற்றும் பலகாரங்களை உண்டு, மீண்டும் உறவினர் வீடு சென்று, அவர்களின் தூரவுள்ள இருப்பிடப்பயணத்திற்கு வழியனுப்பி வைத்துவிட்டு இரவுணவை எடுத்தேன்.

அந்தியேட்டியை நிம்மதியாக வீட்டிலுள்ளவர்களோடு கலந்து சிறப்பிக்க நினைக்க, நடந்தது வெறுமாதிரி..!

 

ஆ.கெ.கோகிலன்

06-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!