இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலியுக முடிவு..!

படம்
 

பிஜி..

படம்
 

இறைவனின் நியாயம்..!

படம்
 

மரண தேவதை..!

படம்
 

புதுவருட முதல் வேலைநாள்..!

படம்
 

ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

படம்
 

பாதாம் பருப்பு (Almond)

படம்
  இலங்கையில் தற்போது  பாதாம் பருப்பின் விலை  கிலோ ஏறக்குறைய 6000.00 இற்கு விற்பனையாகின்றது..!  இதனைத் தவிர்த்து, இதேமாதிரியான சத்தினைப் பெற முந்திரிப்பருப்பை பாவிக்கலாம். வெளிநாடுகளில் இருந்து எமது உறவுகள் வரும்போது, அங்கு மலிவாக இருக்கும் பாதாம் பருப்புக்களையும் கொண்டுவருகின்றார்கள். எமது பிள்ளைகளும் அவற்றை உண்டுவிட்டு இங்கேயும் வாங்க வேண்டும் என்பார்கள். ஆனால் தற்போதைய நாட்டுநிலைமையில் அவற்றிற்கு செலவு செய்வது வீண். பொதுவாக நாம் இருக்கும் பிரதேசத்தில் என்ன உணவுகள் மலிவாக இருக்கின்றதோ அல்லது விளைகின்றதோ அவற்றையே நாம் அதிகம் உண்ணவேண்டும். அதுவே எமக்கு ஆரோக்கியமாகும். அதேபோல் வெளிநாட்டிற்குச் சென்ற எமது உறவுகள், எமது உணவுப்பொருட்களை அங்கே எடுக்காமல் அங்குள்ள உணவுப்பொருட்களை உண்டு பழகுவதே ஆரோக்கியமானது. மாறிச்செயற்படுவது ஆபத்தானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இச்செயற்பாடு நன்மையானதாகும்.   இலங்கையில் பாதாம் விளையவில்லை என்றாலும் எமது தாய் நாடான இந்தியாவில் குறிப்பாக ஜம்மு, காஷ்மீர்,   மகாராஷ்டிரா போன்ற பிரதேசங்களில் பாதாம் விளைகின்றன..! ஆகவே அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே வி

புரூஸ் லீ..!

படம்
 

தலைகீழ் புகையிரதம் (Suspension Monorail)

படம்
  உலகில் நாம் அறியாத பல விடயங்கள் இருக்கின்றன. எலன் மஸ்க் கொண்டுவரவிருந்த ஹைப்பர் லூப் (Hyper Loop) தொடர்பாக அறிந்திருந்தேன்.  ஆனால் ஜேர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் தலைகீழ் புகையிரதம் பற்றி இன்று தான் அறிந்தேன்..!  அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் சிறிய அளவில் அறிமுகப்படுத்தி பின்னர்  விட்டுவிட்டார்கள்.   18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே (1826) பொதுப்போக்குவரத்து வசதியாக ஜேர்மனியில்  உள்ள  மிகப்பிரபலமான சனநெரிசல் கூடிய  வூப்பர் வலேயில் ( Wupper Valley ) இப்புகையிரத சேவை தொடங்கப்பட்டு,  நடைபெற்றுவருகின்றது. இன்றுவரையும் மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றார்கள். கேபிள் கார்களினைப் போல், பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட பாலம் போன்ற ஒரு அமைப்பில் இந்தப் புகையிரதம் தொங்கியபடி செல்லும். சனநெருக்கமான இடங்களில் வழமையான பாதைகளைப் பயன்படுத்தாமல்  ஆறுகள் அல்லது ஒடுங்கிய நதிகள் செல்லும்  பாதைகளின் மேல் இந்தப்புகையிரதம் செல்லக்கூடிய வகையில், புகையிரதத் தொங்கு பாதை அமைக்கப்பட்டிருக்கினறது. இதனால் போக்குவரத்து இடை யூறுகள் ஏற்படுவது  குறைவு. விரைவாக அந்தப்பகுதிகளில் பயண

மாணவ மனங்கள்..!

படம்
  தற்கால மாணவர்களின் மனங்களில், நற்பண்புகளைத் தாண்டி, யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை தான் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கமே பெரிதாக இருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.   ஒரு கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், போட்டி அடிப்படையில், விரும்பிய கற்கைநெறி கிடைத்ததும், மகிழ்ச்சி அடைகின்றார்கள். அதைவிட இன்னும் சிறப்பான ஒரு வாய்ப்பு வரும்போது, கிடைத்ததைவிடுத்து, அடுத்த வாய்ப்புக்குப் போகத்தவிக்கின்றார்கள்..! ஒரு முறைகூடச் சிந்திப்பதில்லை தம்முடைய இவ்வாறான செயற்பாட்டால் சமவயதை ஒத்த எவ்வளவோ அப்பாவி ஏழைமாணவர்கள் பாதிப்படைகின்றார்கள் என்பதை..! தமக்கு பிடித்து இருந்தால், அதுவும் இருப்பதைவிட சிறப்பானதாக எந்தவிதமான  இலவச வாய்ப்புக்களையும், மேலே சொன்னமாதிரியான  மாணவர்கள் வைக்கோல் பட்டறை நாய்கள்  மாதிரி எண்ணம் கொண்டு, அதை அடையவே செயற்படுகின்றார்கள். ஒன்று கிடைத்தால், அதில் கொஞ்சக்காலமாவது நிறைவுடன் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியவில்லை என்றால் என்ன என்று சொல்வது..? பல மாணவர்களுக்கு தங்களின் நடவடிக்கைகளால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை உணரக்கூட முடியவில்லை என

டியர் கொம்றேட் (Dear Comrade)

படம்
  இரு நாட்களாகப் பார்த்து முடித்த படம் தான் இது. படம் யதார்த்தத்திற்கு சற்று அன்னியமாக இருப்பதாகத் தோன்றியது.  இருந்தாலும் படத்தை சுத்தமாகச் சரியில்லை என்ற அளவில் ஒதுக்கவும் முடியவில்லை..!  இந்தப்படத்தில் மனித உணர்வுகள் எப்படியிருக்கும் என்ற ஒரு மாயத் தோற்றத்தை  ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அப்படி உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.  கோபம் கொண்ட இளைஞனின் காதல்,  இலட்சியத்தை தவறவிடும் காதலியின் முடிவை மாற்றுகின்றது.  இது தான் கதை.  அடி தடிக்காட்சிகள் கொஞ்சம் அதிகம். அதனால் உண்மைக்கு அன்னியமாகின்றது.  சில காட்சிகளில்  காதலர்களிடையே காட்டிய நெருக்கம்  சங்கடத்தை  ஏற்படுத்துகின்றது..!  இயற்கைச் சுற்றுலா, இனிமையான  ஒலி, நண்பர்களுடன் கும்மாளம்  போன்றவை தான் மன அழுத்தத்தை போக்கும் காரணிகள் என்று படம் சொல்கின்றது.  விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மற்றும்  ஏனையவர்களின் நடிப்பு நன்றாக இருந்தது. பாடல்கள், இசை, ஒளிப்பதிவு போன்றன  சிறப்பாக இருந்தன.  இயக்குனர்  பரத் கம்மா (Bharat Kamma) படத்தைப் பார்க்கக்கூடிய வகையில் இயக்கியுள்ளார்.  

நலன்புரிச்சங்கப் பிரியாவிடை

படம்
  ஒருவித வழமையில் இருக்கும் ஒரு சமூகத்தை இன்னொரு வழிக்கு மாற்றுவது என்பது மிகக்கடினமான காரியம்.  எமது  யாழ் சமூகம் எவ்வளவு கல்வித்தரம் இருந்தாலும் போட்டியும் பொறாமையும்  அவற்றுடன் கூட வருவது  என்பது மிகவும் துயரமான விடயம்..! எமது சமூதாயத்தைப்போன்றே எமது நிறுவனங்களிலுள்ள சமூக மாதிரிகளின் எண்ணமும் செயற்பாடும் இருக்கின்றது என்பது நிதர்சனம். தவறுகள் விடுவது மனித இயல்பு தான். வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஒருவர் விடுகின்றார் என்றால் அவர் இன்னமும் கற்கத்தொடங்கவில்லை என்று அர்த்தம். உண்மையில் கற்றல் இருப்பின் விடும் தவறுகள் நிச்சயம் குறையும்.  பூ ரணமனிதனாகும் வாய்ப்பு கூடும்.   நான் இந்த மாதிரித் தான் என்னைச் செதுக்கினேன். இருந்தாலும் இன்னும் நிறையச் செதுக்க இடமுண்டு என்பதையும் அறிவேன். அதற்கான முயற்சியையும் எடுக்கின்றேன்.   2014ம் ஆண்டு நான் நலன்புரிச்சங்க தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சில சம்பவங்கள் நடந்தன.   அதனால் பல சிக்கல்கள் நிறுவனத்தில் ஏற்பட்டன. அந்த சமயத்தில்,   ஒரு சில ஊழியர்கள் எமது நிறுவனத்தை விட்டு இடம் மாற்றம் பெற்றுச் செல்லும்போது, பிரியாவிடை செய்யமுடியாத சூழல் இருந

பிக்பொஸ் வின்னர்..

படம்
  இன்று (22-01-2023) விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள். வெற்றியாளர் யார் என்று தேர்வு செய்யும் நேரம்..? நிறைய நம்பிக்கை இருந்தது. நிதானமாக விளையாடிய விக்ரமன் வெல்வாரென்று..! அதேநேரம் சம அளவான வெற்றிவாய்ப்பு அசீமிற்கும், சிவினுக்கும் இருந்தது. இறுதியில் அறம் வெல்லும் என்று அரசியல் பேசிய விக்ரமனை விட, கோபத்துடனும், பதட்டத்துடனும் இருந்தாலும், உண்மையாகவும், தன்னம்பிக்கையோடும் இருந்தார் என்பதற்காக அவர்  வெற்றிபெற்றுள்ளார்.  அசீம் கிடைக்கும் வெற்றிப்பணத்தில் அரைவாசியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்து, மக்களிடமே பேரம் பேசியுள்ளார். அதனை மக்களும் ஏற்றுக்கொண்டு வெற்றிபெறச் செய்துள்ளார்கள்.  உண்மையில் அந்த வாக்கைக் காப்பாற்றுவாரா என்று எனக்குச் சந்தேகம் இருக்கின்றது.  எத்தனையோ  முறை கோபப்படக்கூடாது என்று சொன்னாலும் கெட்டாரா..!   அறத்தை நம்புபவர்களை பெரும்பாலான மக்கள் நம்புவது கிடையாது..! அவர்களை பழசுகள் என்ற மாதிரி ஒதுக்கிவிடுவார்கள்.  இது தான் உண்மையான மக்களின் நிலை.  கோபமாகப் பேசினால் என்ன, ரவுடியாக இருந்தால் என்ன, அசிங்கமான வார்த்தைகள் பேசினால

பட்டத்து அரசன்..!

படம்
  இந்தப்படம் வழமையான பந்த பாசத்தைச் சொல்லும் படம் என்றாலும் புதுமையான சில விடயங்கள் படத்திற்குள் புகுத்தப்பட்டிருந்தது ஆச்சரியம்.  குறிப்பாக ஒரு குடும்பமே கபடி விளையாட்டுப்போட்டிக்கு தயாராவதும், விளையாடுவதும் அதில் வெற்றி பெறுவதும் இதுவரை எந்தப்படத்திலும் பார்க்கவில்லை.  எதிர்பார்க்காமலே ஒரு சிறப்பான, உண்மையான கதையாக இந்தப்படக்கதை அமைந்து இருந்தது..! படத்தின் இறுதியில், தஞ்சையில் ஒரு குடும்பம்,  ஊருடன் தங்களது கௌரவத்தை நிலைநாட்ட கபடி விளையாடியது என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்தக்கதை உருவாக்கப்பட்டது எனக்காட்டப்பட்டிருந்தது.  படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள். சில இடங்களில் தொலைக்காட்சி நாடகம் மாதிரியிருந்தாலும் படம் போரடிக்காமல் சிறப்பாக இருந்தது.  அதர்வா, ராஜ்கிரண், ராதிகா மற்றும் அனைவரது நடிப்பும் தரமாக இருந்தது. இயக்குனர் A. சற்குணம்,  வழமையான கதை என்றாலும் சில புதுமையான காட்சியமைப்பினால், படம் பார்க்கக்கூடியதாகவும், ஒரு நம்பிக்கையைத் தரக்கூடியதாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. படத்தைத் தயாரித்த லைக்காவிற்கு இது ஒரு வர்த்தகரீதியில் வெற்றியான படமே

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்..

படம்
 

நியூரல் லிங்..!

படம்
 

யாஸ்மினா அலி..!

படம்
 

கோ கார்டிங்

படம்
  நாகரீக வளர்ச்சிகள் மனிதனை உறுதியற்ற நிலைக்கு கொண்டு செல்லுகின்றன. தரையில் இருக்கும் உறுதி, உயரமான ஒரு கோபுரத்தில் இருக்கும் போது ஏற்படுவதில்லை. மாறாகப் பயம் பிடிக்கும். கால்களில் உதறல் எடுக்கும். இதைப்போல் தான் நவீனங்களைப் பின்பற்றும்போதும் ஏற்படுகின்றன..!  அவற்றால் நன்மைகள், புதிய அனுபவங்கள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், தேவையையும், சூழலையும் கருத்தில் கொண்டே இவற்றில் இறங்க வேண்டும். இந்தக்கருத்தியலுக்கு உட்பட்டதாக, பல விடயங்களைப் பார்க்கத்தோன்றுகின்றது. அதில் ஒன்று இந்தக் ஓட்டக்கார் (go kart racing) . இதனை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்துகின்றார்கள்.    எமது நிறுவனம் அரச உயர்கல்வி வளாகம் என்ற வகையில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச வாய்ப்பு என்ற ஒரு சலுகை    நால்வருக்கு தரப்பட்டுள்ளது..!   அவர்களில்  இரு மாணவர்களும், இரு ஊழியர்களும் இருக்க வேண்டும்.   எனக்குப் புரிகின்றது “ இதன் நோக்கம் இலவச விளம்பரம் தான்..!“என்று. உலகமயமாதலின் விளைவு, உலகில் எல்லாவற்றிற்கும் போட்டிபோட வேண்டும். போடக்கூடிய வசதி வாய்ப்புகள் இல்லை என்றால் அதற்குப்போகக் கூடாது. அது மாயவலை. தவிர்த்து, தனித்து  நில

துறவியாகும் சிறுமி..!

படம்
  9-Year-Old Daughter Of Gujarat Diamond Trader Gives Up Life Of Luxury, Becomes Monk மனித வாழ்வியலில் பல்வேறுபட்ட வளர்ச்சிகள் மூலமே இந்த நிலைக்கு உலக மக்கள் வந்துள்ளார்கள். பரிணாம வளர்ச்சி என்றும் சொல்லலாம். இனி, மனிதன் மறுதலையான நிலையில் பயணப்படலாம்.   விலங்கிலிருந்து பல நல்ல குணங்களைப்பெற்று நல்ல மனிதனாக இருப்பவன், மீண்டும் உலகத்தின் போக்கைக் கண்டு வெறுப்புற்று, நல்ல குணங்களை அகற்றி அல்லது விடுத்து மீண்டும் மிருகமாக மாறும் காலத்தில் நாம் இருப்பது கவலையாக இருக்கின்றது. இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த வைரவியாபாரியின் 9 வயது மகள் துறவறம் மேற்கொள்வது என்பது ஆச்சரியமானது. மனிதர்கள் நவீன வாழ்க்கை முறைகளால் விலங்காக, அந்த 9 வயதுச்சிறுமி கடவுளாவது, உண்மையிலே  எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. நல்லது இப்படியான நிகழ்வுகள் தொடரட்டும். ஆனால், குறித்த சிறுமியின் முடிவாகவே அது இருக்க வேண்டும். வேறுயாரினது வற்புறுத்தலில் நடந்தால் அது தவறானது. 9 வயது பிள்ளைக்கு இன்னமும் உலகைப்புரிந்து கொள்வதற்கான காலம் போதுமா என்பது எனது கேள்வி. அப்பிள்ளை 600km ஆன்மீகப் பாத யாத்திரை சென்ற