மான் கொம்பு..!

 

ஜோதிடத்தில்  ராசி, நட்சத்திரங்களில் தாக்கத்தால் குற்றம் குறைகள்  ஏதும் ஏற்பட்டால் அதற்கு பல பரிகாரங்கள் இருப்பதாகக் கூறுவார்கள்..! போன பிறப்பில் புண்ணியமான காரியங்கள் செய்திருப்பின் அவை இந்தப்பிறப்பில் பரிகாரம் இல்லாமலே உதவும் என்றும், அப்படி இல்லை என்றால் ஏதாவது பரிகாரங்கள்  செய்யவேண்டும் என்று சொல்வார்கள். எனக்கு என்று சொன்ன ஒரு பரிகாரம் மான் கொம்பைப் பார்த்தல்..!   இன்னொன்றும் சொல்லியுள்ளார்கள். அது, வெள்ளைக்குதிரையை பார்த்தல்..!


மேலும் மகான்களை வழிபடல், தான தருமங்கள் செய்தல் போன்றவற்றையும் சொல்லியுள்ளார்கள். அதிலும், குறிப்பாக முருகன் மற்றும் துர்க்கா வழிபாடு செய்தல் சிறப்பானது என்று கூறியுள்ளார்கள்.

நான் விஞ்ஞானத்துறையைச் சேர்ந்தவன் என்றாலும், எனக்கு இன்னமும் புலப்படாத பல விடயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உண்டு என்பதை நம்புகின்றேன்..!  அதேபோல் புள்ளிவிபரவியல் அடிப்படையில் அலசி ஆய்வுசெய்து,  சொல்லும் சில விடயங்கள் நம்பத்தோன்றுகின்றன. அது பொய்யாக இருந்தால் கூட நேர் எண்ணங்களை ஏற்படுத்துவதால் மனது மகிழ்கின்றது.

அதனால், என்னால் மற்றவர்களுடன் நிறைவாக நடக்க முடிகின்றது. நாளை என்பது நமது கையில் இல்லை என்பது மட்டும் நிச்சயம். அது எந்தக்கொம்பனுக்கும் பொருந்தும். இதனை யாராவது மறுத்து, நாளை என்பது நிலையானது என்று நிரூபித்தால் நான் அதன் பிறகு ஒன்றுமே சொல்லவோ எழுதவோ மாட்டேன். அப்படிச் செய்தவர் பின்னாலே செல்வேன். என்னைப்பொறுத்தவரை, என்ன செய்தாலும், எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் என்ன கிடைக்க வேண்டுமோ அவை மட்டுமே கிடைக்கும். அதேபோல் மறுதலையும் உண்டு..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!