பட்டத்து அரசன்..!
இந்தப்படம் வழமையான பந்த பாசத்தைச் சொல்லும் படம் என்றாலும் புதுமையான சில விடயங்கள் படத்திற்குள் புகுத்தப்பட்டிருந்தது ஆச்சரியம். குறிப்பாக ஒரு குடும்பமே கபடி விளையாட்டுப்போட்டிக்கு தயாராவதும், விளையாடுவதும் அதில் வெற்றி பெறுவதும் இதுவரை எந்தப்படத்திலும் பார்க்கவில்லை.
எதிர்பார்க்காமலே ஒரு சிறப்பான, உண்மையான கதையாக இந்தப்படக்கதை அமைந்து இருந்தது..! படத்தின் இறுதியில், தஞ்சையில் ஒரு குடும்பம், ஊருடன் தங்களது கௌரவத்தை நிலைநாட்ட கபடி விளையாடியது என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்தக்கதை உருவாக்கப்பட்டது எனக்காட்டப்பட்டிருந்தது.
படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள். சில இடங்களில் தொலைக்காட்சி நாடகம் மாதிரியிருந்தாலும் படம் போரடிக்காமல் சிறப்பாக இருந்தது. அதர்வா, ராஜ்கிரண், ராதிகா மற்றும் அனைவரது நடிப்பும் தரமாக இருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக