நாடோடிகள்..!

 

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து தனது தேவைகளுக்காக பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றான்.  பண்டைய காலத்தில் தனக்கான, நிலையான வீடு, சமூகம் போன்ற அடிப்படையான  தேவைகள் பெறும்வரை மட்டுமே அவ்வாறான வாழ்க்கை முறையிலே இருந்திருக்க வேண்டும். தேவைகளை ஒரே இடத்தில் பெறக்கூடிய சூழல் வந்ததும், அந்த இடத்திலே நிலைத்து வாழத்தொடங்கிவிட்டான். 

ஆனால் இன்று பல சமூகங்கள் அலைந்து திரிந்து வாழ்வது தொடர்கதையாகவும், உலகெங்கும் அவதானிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.  அப்படிப்பட்ட பல சமூகங்களில், இலங்கைத் தமிழர்களும் இருக்கக்கூடிய ஒரு சூழல் இருப்பது தவிர்க்க முடியாதது.  இந்தியாவில்,  நரிக்குறவர்கள் வாழ்க்கை முறை ஏறக்குறைய அலைந்து திரிந்து வாழ்வது தான்..! 

இப்படி பல சமூகங்கள் உலகில் இருந்தாலும் அவர்களின்  ஒரு அடையாளமாக இருக்கக்கூடிய  ரஷ்யாவிலுள்ள  யூரல் மலைப்பிரதேச  (Ural Mountains - North Nomads of Russia) சமூக மக்களின் வாழ்வியல் ஆதிகால மக்களின் வாழ்க்கை முறையை ஒத்திருக்கின்றது..!  

இவர்களின் வாழ்க்கை முறையே ஆச்சரியமானதும் மிகக் கடினமானதாகவும் இருக்கின்றது. ஐரோப்பிய ஆசிய எல்லைப்பகுதியில் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தமக்கள், எக்ஸிமோவர்களின் வாழ்வை ஒத்த ஒரு வாழ்க்கையை வாழுகின்றார்கள்..! 

இவர்கள்,  உலங்கோவ்ஸ் (Ulengovs) என்று சொல்லப்படும், தனித்தன்மை கொண்ட கம்பளி ஆடைகள் பின்னும் வயதான பெண் தலைமைக் குடும்பத்தின் மூலமான கிராமிய வாழ்வியலில் இருப்பவர்கள்..! குளிருக்கும், மழைக்கும், வெயிலுக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய சிறு கொட்டில் போட்டு வாழ்வதும்,  தேவைகளுக்காக இடம் பெயர்ந்து  திரிவதும், மிகவும் கடும் குளிரான பகுதி என்பதால் கம்பளி ஆடை அணிகலன்களை தாமே தயாரிப்பதும் அம்மக்களின்  சாதாரண வாழ்வியல்..!

அவர்களின் நகர்வுகளுக்கு உதவும் வண்டிகளே சில்லுகள் அற்ற வள்ளங்கள் போன்றவை. பனி காலத்தில் பனிக்கட்டியில் வழுக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும். 

இந்த வண்டிகளில், இழுவைக்கு கொம்புள்ள கலைமான்களைச் (Reindeers) சோடியாகவோ அல்லது குழுவாகவோ பயன்படுத்துகின்றார்கள். 


அதுமாத்திரமன்றி, அவற்றினைக் கொன்று  அதன் இறைச்சியை உணவாக எடுக்கின்றார்கள்.  மேலும், அதன் கொம்புகள் மூலம் பல உபயோகப்பொருட்களைச் செய்யவும்  இவர்களால் முடியும்..! காலநிலைகள் மாற அதற்கேற்ப தமது வாழ்வியலிலும் நகர்வுகளையும், மாற்றங்களையும்  செய்கின்றார்கள். 


வீட்டுக்குள்ளே, நடுவில் இரும்பு அடுப்புப்பெட்டியைப் பயன்படுத்தி, உணவைச் சமைக்கின்றார்கள். அத்துடன் குளிருக்கான வெப்பத்தையும் அந்த அடுப்பில் இருந்து பெறுகின்றார்கள்..! 


சில காலம், கடும் குளிர் என்பதால் அவர்களின் கம்பளி உடை, முகத்தைத் தவிர ஏனைய உடலை முற்றாக முடியிருக்கும். 

சில காலம் எங்கும் ஜஸ்ஸாக  இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடுகள் ஏற்படும்..! அந்நேரம் தூரவாக இருக்கும் பனிகளுக்கு நடுவே ஓடும் குளிர் நீரையெடுத்து வந்து, கொட்டிலில் சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள். அதற்கான  பாத்திரங்களையும் வைத்துள்ளனர்.


இந்தமக்களின் வாழ்வியலைப் பார்க்கும் போது தான் புரிகின்றது நாம் இறைவனாலும், இயற்கையாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது..!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!