யானை

 


சில படங்களைப் பார்த்தாலே இயக்குனர் யார் என்பதைக் கண்டுபிடிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு இயக்குனரின் படம் தான் யானை. சிங்கம் என்ற வெற்றிப்படத்தொடரை வழங்கிய இயக்குனர் என்றாலும் அவரது படைப்புக்கள் யாவும் ஒரே மாதிரியான ஒரு ரெம்லேட்டில் இருப்பது ரசிக்க முடியவில்லை.

நல்ல வேளை இந்தப்படத்தில் விக்ரம் அல்லது சூர்யா நடித்திருந்தால் நிச்சயம் தியேட்டரையே கிழித்திருப்பார்கள். அருண்விஜய் நடித்ததால் படம் ஓரளவிற்கு பார்க்க முடிகின்றது. காதல் காட்சிகளை கொஞ்சம் ரசிக்கலாம். ஏனைய காட்சிகள் சும்மா விறு விறுப்பிற்காகப் பார்க்கலாமே தவிர வேறு ஒன்றுமில்லை.  அருண்விஜயின் சகோதரர்களின் பாத்திரப்படைப்புக்கள் ரசிக்க முடியவில்லை. எரிச்சலாக இருந்தது. என்ன செய்வது இயக்குனரின் கதை  அப்படி..?   

என்னைப்பொறுத்தவரை இந்தப்படத்தை ஒரு முறை பார்ப்பதே பெரிய விடயம்.  பொறுமையாக இருந்து பார்த்தால் மொத்தப்படத்தையும் பார்க்கக்கூடிய வகையில் கதையே நம்மை இழுத்துக்கொண்டுபோகும். அந்தளவிற்கு விறு விறுப்பான திரைக்கதை. பாடல்களும் ரசிக்கலாம். கச்சதீவு அந்தோனியார் கோவில் காட்சி நன்றாக இருந்தது. ராமேஸ்வரம் பகுதிகளைப்  படம் அழகாகக்காட்டியிருக்கின்றது.  ஒளிப்பதிவும் சிறப்பு. 

ஹரி, இதே மாதிரியான  கதைகளை விடுத்து, வேறு மாதிரியான படங்கள் எடுக்க வேண்டும். இல்லை சும்மா இருக்க வேண்டும். ஜயா, சாமி, தமிழ், சிங்கம் போன்ற மிகச்சிறப்பான படங்களைத் தந்தவர் இப்படியே கதையில்லாமல் குடும்பத்திற்குள் குதிரையோட்டுவது போரடிக்கின்றது.  முன்பு சேர்ந்த நடிகர்களுடன் மீண்டும் சேர்ந்து, படம் இயக்க வேண்டாம். இது எனது தாழ்மையான வேண்டுகோள். மாறுபட்ட கதை, புதியவர்களுடன் கூட்டணி என்றால் இனிவரும் படங்களைப் பார்க்கலாம். இல்லை என்றால் ஹரி படமே வேண்டாம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!