டியர் கொம்றேட் (Dear Comrade)

 

இரு நாட்களாகப் பார்த்து முடித்த படம் தான் இது. படம் யதார்த்தத்திற்கு சற்று அன்னியமாக இருப்பதாகத் தோன்றியது.  இருந்தாலும் படத்தை சுத்தமாகச் சரியில்லை என்ற அளவில் ஒதுக்கவும் முடியவில்லை..! 

இந்தப்படத்தில் மனித உணர்வுகள் எப்படியிருக்கும் என்ற ஒரு மாயத் தோற்றத்தை  ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அப்படி உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. 

கோபம் கொண்ட இளைஞனின் காதல், இலட்சியத்தை தவறவிடும் காதலியின் முடிவை மாற்றுகின்றது.  இது தான் கதை.  அடி தடிக்காட்சிகள் கொஞ்சம் அதிகம். அதனால் உண்மைக்கு அன்னியமாகின்றது. 

சில காட்சிகளில்  காதலர்களிடையே காட்டிய நெருக்கம்  சங்கடத்தை  ஏற்படுத்துகின்றது..! 

இயற்கைச் சுற்றுலா, இனிமையான  ஒலி, நண்பர்களுடன் கும்மாளம்  போன்றவை தான் மன அழுத்தத்தை போக்கும் காரணிகள் என்று படம் சொல்கின்றது. 

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மற்றும்  ஏனையவர்களின் நடிப்பு நன்றாக இருந்தது. பாடல்கள், இசை, ஒளிப்பதிவு போன்றன  சிறப்பாக இருந்தன.  இயக்குனர்  பரத் கம்மா (Bharat Kamma) படத்தைப் பார்க்கக்கூடிய வகையில் இயக்கியுள்ளார்.


 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!