துறவியாகும் சிறுமி..!

 

9-Year-Old Daughter Of Gujarat Diamond Trader Gives Up Life Of Luxury, Becomes Monk

மனித வாழ்வியலில் பல்வேறுபட்ட வளர்ச்சிகள் மூலமே இந்த நிலைக்கு உலக மக்கள் வந்துள்ளார்கள். பரிணாம வளர்ச்சி என்றும் சொல்லலாம். இனி, மனிதன் மறுதலையான நிலையில் பயணப்படலாம்.  

விலங்கிலிருந்து பல நல்ல குணங்களைப்பெற்று நல்ல மனிதனாக இருப்பவன், மீண்டும் உலகத்தின் போக்கைக் கண்டு வெறுப்புற்று, நல்ல குணங்களை அகற்றி அல்லது விடுத்து மீண்டும் மிருகமாக மாறும் காலத்தில் நாம் இருப்பது கவலையாக இருக்கின்றது.


இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த வைரவியாபாரியின் 9 வயது மகள் துறவறம் மேற்கொள்வது என்பது ஆச்சரியமானது. மனிதர்கள் நவீன வாழ்க்கை முறைகளால் விலங்காக, அந்த 9 வயதுச்சிறுமி கடவுளாவது, உண்மையிலே  எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. நல்லது இப்படியான நிகழ்வுகள் தொடரட்டும்.


ஆனால், குறித்த சிறுமியின் முடிவாகவே அது இருக்க வேண்டும். வேறுயாரினது வற்புறுத்தலில் நடந்தால் அது தவறானது. 9 வயது பிள்ளைக்கு இன்னமும் உலகைப்புரிந்து கொள்வதற்கான காலம் போதுமா என்பது எனது கேள்வி.


அப்பிள்ளை 600km ஆன்மீகப் பாத யாத்திரை சென்றுவந்ததாகவும், பல மொழிகள் தெரிவதாகவும், வாழ்க்கையை நன்கு புரிந்ததாகவும் சொல்கின்றார்கள். அது உண்மையென்றால், அந்தச்சிறுமியை நாம் பாராட்டலாம். எதிர்காலத்தில் நல்ல மார்க்கங்களில் எமது குழந்தைகள் செல்வதற்கான வழிகளும் விரிவடையும்.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!