பாதாம் பருப்பு (Almond)

 


இலங்கையில் தற்போது  பாதாம் பருப்பின் விலை  கிலோ ஏறக்குறைய 6000.00 இற்கு விற்பனையாகின்றது..! இதனைத் தவிர்த்து, இதேமாதிரியான சத்தினைப் பெற முந்திரிப்பருப்பை பாவிக்கலாம்.

வெளிநாடுகளில் இருந்து எமது உறவுகள் வரும்போது, அங்கு மலிவாக இருக்கும் பாதாம் பருப்புக்களையும் கொண்டுவருகின்றார்கள். எமது பிள்ளைகளும் அவற்றை உண்டுவிட்டு இங்கேயும் வாங்க வேண்டும் என்பார்கள். ஆனால் தற்போதைய நாட்டுநிலைமையில் அவற்றிற்கு செலவு செய்வது வீண்.

பொதுவாக நாம் இருக்கும் பிரதேசத்தில் என்ன உணவுகள் மலிவாக இருக்கின்றதோ அல்லது விளைகின்றதோ அவற்றையே நாம் அதிகம் உண்ணவேண்டும். அதுவே எமக்கு ஆரோக்கியமாகும். அதேபோல் வெளிநாட்டிற்குச் சென்ற எமது உறவுகள், எமது உணவுப்பொருட்களை அங்கே எடுக்காமல் அங்குள்ள உணவுப்பொருட்களை உண்டு பழகுவதே ஆரோக்கியமானது. மாறிச்செயற்படுவது ஆபத்தானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இச்செயற்பாடு நன்மையானதாகும்.

 இலங்கையில் பாதாம் விளையவில்லை என்றாலும் எமது தாய் நாடான இந்தியாவில் குறிப்பாக ஜம்மு, காஷ்மீர்,  மகாராஷ்டிரா போன்ற பிரதேசங்களில் பாதாம் விளைகின்றன..! ஆகவே அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே விளையும் பாதாமை அதிகம் சாப்பிடலாம்.


இங்கே பாதாம் மரங்கள் காட்டப்பட்டுள்ளன.


மேலேயுள்ள படத்தில் பாதாம் மர ப் பூக்கள் காட்டப்பட்டுள்ளன.



மரத்தில் பாதாம் காய்கள் காணப்படுகின்றன.

முற்றிய பாதாம் மரக்காய்கள்.


மேலே காட்டப்பட்ட படத்தில் பாதாம் பழம் இருக்கின்றது. அதனுள் பாதாம் பருப்பும் இருக்கின்றது..!

மரத்திலிருந்து பாதாம் பருப்புக்கள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை பிரித்தே  தூய்மையான பாதாம் பருப்புக்கள் கிடைக்கின்றன.

பாதாம் பழத்தில் இருந்து பிரிக்கப்பட்ட பாதாம் பருப்புக்கள்.

பாதாம் விதையை நட்டு பாதாம் கன்று உருவாக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது.


பாதாம் பருப்பில் இருந்து பெறப்பட்ட பாதாம் பால் மேலே காட்டப்பட்டுள்ளது.

பாதம் பாலில் இருந்து  எடுக்கப்பட்ட பாதாம் எண்ணெய் மேலே காட்டப்பட்டுள்ளது.

பாதாம் பருப்பில்  பல சத்துக்கள் இருந்தாலும் அதிகம் கொழுப்பு இருக்கின்றது..! 




















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!