தலைகீழ் புகையிரதம் (Suspension Monorail)

 


உலகில் நாம் அறியாத பல விடயங்கள் இருக்கின்றன. எலன் மஸ்க் கொண்டுவரவிருந்த ஹைப்பர் லூப் (Hyper Loop) தொடர்பாக அறிந்திருந்தேன்.  ஆனால் ஜேர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் தலைகீழ் புகையிரதம் பற்றி இன்று தான் அறிந்தேன்..!  அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் சிறிய அளவில் அறிமுகப்படுத்தி பின்னர்  விட்டுவிட்டார்கள்.  

18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே (1826) பொதுப்போக்குவரத்து வசதியாக ஜேர்மனியில்  உள்ள  மிகப்பிரபலமான சனநெரிசல் கூடிய  வூப்பர் வலேயில் (Wupper Valley) இப்புகையிரத சேவை தொடங்கப்பட்டு,  நடைபெற்றுவருகின்றது. இன்றுவரையும் மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றார்கள். கேபிள் கார்களினைப் போல், பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட பாலம் போன்ற ஒரு அமைப்பில் இந்தப் புகையிரதம் தொங்கியபடி செல்லும்.

சனநெருக்கமான இடங்களில் வழமையான பாதைகளைப் பயன்படுத்தாமல்  ஆறுகள் அல்லது ஒடுங்கிய நதிகள் செல்லும்  பாதைகளின் மேல் இந்தப்புகையிரதம் செல்லக்கூடிய வகையில், புகையிரதத் தொங்கு பாதை அமைக்கப்பட்டிருக்கினறது. இதனால் போக்குவரத்து இடை யூறுகள் ஏற்படுவது  குறைவு. விரைவாக அந்தப்பகுதிகளில் பயணம் செய்ய முடியும்.  அநேக இடங்களில் குறும்தூரங்களிற்கே,  அதிகபட்சம்  16 கிலோ மீற்றருக்கு குறைவான தூரங்களிற்கே இவை பயன்படுகின்றது. இவற்றுக்கான போக்குவரத்துப் பாதை அமைப்பது என்பது அதிக செலவை எடுக்கும் என்று நினைக்கின்றேன். அத்துடன் உயரமான கட்டடங்களிலேயே ஏற அல்லது இறங்க முடியும். அதற்கும் அதிக செலவாகும். பார்ப்பதற்கு, வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும் எல்லா நாடுகளும் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் குறைவு.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!