கோ கார்டிங்

 

நாகரீக வளர்ச்சிகள் மனிதனை உறுதியற்ற நிலைக்கு கொண்டு செல்லுகின்றன. தரையில் இருக்கும் உறுதி, உயரமான ஒரு கோபுரத்தில் இருக்கும் போது ஏற்படுவதில்லை. மாறாகப் பயம் பிடிக்கும். கால்களில் உதறல் எடுக்கும்.

இதைப்போல் தான் நவீனங்களைப் பின்பற்றும்போதும் ஏற்படுகின்றன..!  அவற்றால் நன்மைகள், புதிய அனுபவங்கள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், தேவையையும், சூழலையும் கருத்தில் கொண்டே இவற்றில் இறங்க வேண்டும்.


இந்தக்கருத்தியலுக்கு உட்பட்டதாக, பல விடயங்களைப் பார்க்கத்தோன்றுகின்றது. அதில் ஒன்று இந்தக் ஓட்டக்கார் (go kart racing).

இதனை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்துகின்றார்கள்.   எமது நிறுவனம் அரச உயர்கல்வி வளாகம் என்ற வகையில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச வாய்ப்பு என்ற ஒரு சலுகை  நால்வருக்கு தரப்பட்டுள்ளது..!  அவர்களில் இரு மாணவர்களும், இரு ஊழியர்களும் இருக்க வேண்டும்.  எனக்குப் புரிகின்றது “இதன் நோக்கம் இலவச விளம்பரம் தான்..!“என்று.


உலகமயமாதலின் விளைவு, உலகில் எல்லாவற்றிற்கும் போட்டிபோட வேண்டும். போடக்கூடிய வசதி வாய்ப்புகள் இல்லை என்றால் அதற்குப்போகக் கூடாது. அது மாயவலை. தவிர்த்து, தனித்து  நிலைத்து இருந்து, இருப்பதை வைத்து நிறைவாக வாழவேண்டும். இல்லை என்றால் அதோ கதி தான்..!




 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!