பயிற்சிப் பட்டதாரி ஆசிரியர்கள்..

 


இந்த வாரம் எமது நிறுவனத்திற்கு ஒரு Intern பயிற்சிக்காக யாழ் பல்கலைக்கழக Master of Education  செய்யும் பட்டதாரி ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு எமது நிறுவனம் தொடர்பான பல விபரங்களை எமது நிறுவன ஊழியர்கள் வழங்கினார்கள். 

இன்று அவர்களுக்கு கடைசி நாள். என்னிடம் பணிப்பாளர் என்ற வகையில் Intern Log இல் கையொப்பமிடக்கேட்டார்கள். அப்போது அவர்களுடன்  கதைக்கும் போது சில விடயங்களை அவர்களுடன் பகிர்வது சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது.

அதனால் மதியத்திற்கு பிறகு ஒரு அரை மணி நேரம் அவர்களுடன் செலவிட்டேன். எல்லோரும் அனுபவம் வாய்ந்த சம வயதைக்கொண்ட பல ஆசிரியர்கள் இருந்ததால்  அவர்களுடன் யதார்த்த இயல்புடன் Brain Storming செய்வதற்காக நமது கல்வியல் நடைமுறைகளைப்பற்றியும், எமது நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பாகவும் சில விபரங்களைப் பகிர்ந்து கொண்டேன். அவர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்ததுடன், சில நல்ல ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 


எமது நிறுவனத்தின் சேவைகளை அவர்களுடைய பாடசாலை மாணவர்களிடம் கொண்டுசெல்லக் கேட்டுக்கொண்டேன். அதற்கு தமது முழு ஒத்துழைப்பையும் தருவதாகச் சொன்னார்கள்.  பல்கலைக்கழக அனுமதியைத் தவறவிட்டவர்களுக்கு இலவசமாகப் படிக்கக்கூடிய வாய்ப்பு மற்றும் தொழில் செய்துகொண்டு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் வாய்ப்புக்கள் இங்கு உண்டு என்பதை அறிந்துகொண்டார்கள். கல்வி, வாழ்கைக்கு உதவவேண்டும். அதுவே பெருவியாபாரம் ஆனால் எதிர்காலம் அழிவில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!