மின் பிரச்சனைகள்
கடந்த 3 வருடங்களாகத் தேக்கி வைத்த மின்சாரம் தொடர்பான பல
பிரச்சனைகளுக்கு இன்று தான் தீர்வு வந்தது. அவற்றைச் சரிசெய்ய நான் முயன்றாலும் சின்னப்
பிரச்சனை பெரிய பிரச்சனையாகிவிடும்..!
என்ன காரணம் என்று புரிவதில்லை..! உடலில் அல்லது
மனதில் ஏதாவது கோளாறு இருக்கின்றதோ தெரியாது..? ஆனால் பிரச்சனைகள் மட்டும் பெரிதாகிவிடும். அதே நேரம்,
நான் பலமுறை நிபுணர்களை அழைத்தாலும் அவர்களால் வர முடிவதில்லை. அதற்காகப் பல காரணங்கள்
சொல்வார்கள். ஆகவே அழைப்பதையோ அல்லது நானே முயல்வதையோ விட்டுவிட்டேன்.
இன்று என்ன அதிசயமோ தெரியவில்லை..? அழைத்த நிபுணர்
வந்துவிட்டார். பல பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டார். ஏறக்குறைய ரூபா12000.00 செலவுடன்
முக்கிய பிரச்சனைகளைத் தீர்த்தாகிவிட்டது. நாளை தை பிறக்கின்றது. பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று..?
கருத்துகள்
கருத்துரையிடுக