என் ஜிப்ஃகள்..!
நான் கடந்த 3 வருட கஷ்டமான காலத்தை இனிமையாகக் கடத்தவும்,
உலகைப் படிக்கவும், என் பிள்ளைகள் கூட உலகைப்பற்றி அறியவும் தொடங்கியதே
என் ஜிப்புக்கள்..!
அனிமேசன் என்னும் துடிக்கும் படங்களுக்குரிய நுட்பத்தை, சிறு எழுத்துப் படம் போல் மாற்றிப் பயன்படுத்த முயற்சித்தேன். அவற்றிற்கு ஊடாக எழுத்துக்களையும், சில படங்களையும் நுழைத்து ஏதாவது கருத்தை புதுவடிவத்தில் படைக்க நினைத்த தருணத்தில், ஏறக்குறைய 600 ஐத்தாண்டி விட்டேன்.
அன்று முதல் எனது கணினி, அதுவும் 10 வருடத்திற்கு மேல் பயன்பட்ட கணினி, பாடையில் போய்விட்டது..! எனது முயற்சி விழலுக்கு இறைத்த நீர் என்று கணினிக்கே தெரிந்துவிட்டது போலும்..! ஆனால் என்னால் அதனைக் கைவிட முடியவில்லை. கணினி கைவிட்டாலும், நான் எப்படியாவது அதனைத் தொடர நினைத்தேன். எனது வலிகளைக் கடத்தும் ஒரு கருவியாகவும், தகவல் பகிர்வு ஊடகமாகவும் பாவிக்கத் தொடங்கினேன்.
தடைகள் பல வந்தாலும், ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்களை அதற்காகவே ஒதுக்கினேன். பல குடும்பச் சிக்கல்களைத் தந்தாலும், இதனை விட்டுவிட மனமில்லை. தோல்வி வந்தாலும் பரவாயில்லை. நினைத்ததை அடைய வேண்டும் என்ற உணர்வு மட்டும் தொடர்ந்து இருந்தது.
இறைவனின் கிருபையாலும், இயற்கையின் அனுசரணையாலும் 1000ஐக் கடந்துள்ள நிலையில், 31-12-2022 உடன் ஜிப்ஃபுக்காக எழுதுவதை மட்டும் நிறுத்திக்கொள்கின்றேன்.
ஜிப்ஃபுக்கு மட்டுமே விடுதலை..!
எனக்கும், எனது தேடலுக்கும் இன்னும் தொடர்கதை தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக