குழப்பம்
நான் வழிமைபோல் வேலைமுடிந்து மகளை கூட்டிச்செல்வதாக இருந்தேன்.
அந்நேரம் ஒரு தொலைபேசி அழைப்பு. அதில் மகள், அப்பா இன்று வேளைக்கு வகுப்பு முடிந்துவிட்டது.
நான் போகின்றேன். நீங்கள் ஆறுதலாக வாருங்கள் என்றாள். நானும் சரி என்று, வேலையை முடித்து
வெளிக்கிட ஆயத்தமாக, இன்னொரு போன் கோல் வந்தது. அதிலும் மகளே அப்பா பஸ் போய்விட்டது.
நீங்கள் வருவீங்களா என்றாள்..? நான் 5 நிமிடங்களில்
வருகின்றேன் என்று சொல்விட்டு, உடனேயே வெளிக்கிட்டேன். எப்போதும் அவசரப்பட்டு பயணிக்கும்
போது தடைகள் கூட வரும். அது இன்றும் நடந்தது.
இருந்தாலும் சொன்ன நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து, பார்க்கும் போது மகளைக் காணவில்லை..!
அடுத்த பஸ்ஸில் போய்விட்டாள் என நினைத்துக்கொண்டு
நானும் வீடுவந்து சேர்ந்துவிட்டேன். அரைமணிநேரத்திற்குப்பின்னர்
ஒரு அழைப்பு வந்தது. அப்பா எப்ப வாறீங்கள் நான் உங்களைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றேன்
என்றாள்..? எங்கே நிற்கின்றாய் என்றேன்..?
ரியூட்டரி வாசலில் என்றாள். உடனே நான் கடுமையாகப் பேசி விட்டேன். உடனே வரும் பஸ்ஸில்
வா என்றேன். காசு இல்லை என்று அழுதாள். எனக்கு கோபம் கூடிவிட்டது. ஏன் காசு வைத்திருக்கவில்லை..?
என்று ஏசி எப்படியாவது உடனே வா என்றேன்.
மனைவிக்கும் வீட்டிலுள்ள மற்றையவர்களுக்கும்
கோபத்தில் பேசத்தொடங்கிவிட்டேன். நான் சரியான வழிமுறைகளைத் தெரியப்படுத்தி வைத்திருந்தேன்.
அதனைப் பின்பற்றாததால் இந்தச் சிக்கல் வந்துள்ளது. இவ்வாறு கோபத்துடன் இருக்கும் போது,
பிளம்பர் வந்தார். அத்துடன் வேறு தெரிந்த ஒரு பெண்ணும் வந்திருந்தார். போதாதற்கு
இன்னோரு வயது முதிர்ந்த கனடா தம்பதியும் வந்தார்கள்..! என்ன செய்வது என்றே புரியவில்லை..?
மகளை நினைக்கக் கவலையாக இருந்தது. உடனே போகவும்
முடியாது. அவளிடம் போனும் இல்லை. மொக்குப் பிள்ளை என்று திட்டியபடி, வந்தவர்களை அனுப்ப
அமைதியாக இருந்தேன். நேரம் போக பதட்டமும் அதிகரித்தது. இருளும் தருணம் பதட்டம் கூட, மகளும் வந்துவிட்டாள்..! மனதிற்குள் சிறு சந்தோசம்.
மகள் வந்துவிட்டாள். இருந்தாலும் திட்டமிடல் குழப்பம் மீது விவாதம் இருந்தது. அனைவரும் போனபிறகு விவாதம் தொடங்கி முடியும்போது,
அனைவருக்கும் தொண்டைத்தண்ணீர் வற்றி, நித்திரையே வந்துவிட்டது..! எம்மை அறியாமலே சின்ன
சின்ன நிகழ்வுகள் கூடத் துன்பமாக மாறுவதைப் பார்க்க காலம் மேல் கரிசனை அதிகரிக்கின்றது..!
இது எவ்வளவு காலத்திற்கு என்று பார்ப்போம்..!
கருத்துகள்
கருத்துரையிடுக