ஒன்றாகுதல்..!
இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்களின் படைப்பே விநோதமானது..! ஒன்றில்
இருந்து தான் எல்லாம் தோன்றியது என்கின்றார்கள்.
குறிப்பாக கிறிஸ்தவ மதத்திலுள்ள பழைய ஏற்பாட்டில் ஆதாம் முதலில் தோற்றுவிக்கப்பட்டதாகவும்,
அதிலிருந்தே ஏவாள் தோற்றுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் இருவர்களிடமிருந்தே இந்த உலக மானிடர்கள்
எல்லாம் உருவானதாகவும் சொல்லப்படுகின்றது..!
உலகில் அதிக அளவான மக்கள் பின்பற்றப்படும் மதம் என்றால் அது
கிறிஸ்தவம் தான். கிட்டத்தட்ட உலகின் 30 சதவீதம் மக்கள் பின்பற்றும் மதம். அதே போல் 4000 மதங்களை மக்கள் பின்பற்றுகின்றார்கள்..!
இருந்தாலும் 4 மதங்களே 10 சதவீதத்திற்கு மேற்பட்ட சதவீத மக்களால்
பின்பற்றப்படுகின்றன..!
ஒன்றில் தோன்றிய மக்கள் இப்போது 800கோடியாக உலகில் இருக்கின்றார்கள்.
ஜாதி, மொழி, இனம், நாடு, கண்டம் எனப்பிரிந்து பெரும் முரண்பாடுகளுடன் வாழ்கின்றார்கள்..!
ஒரு மனிதனில் இருந்து தோன்றி இந்த அளவுக்கு மனிதர்கள் வந்தபின்னர், அறிவுப்படைகளால் (Knowledge Layers) ஏற்பட்ட முரண்பாடுகள் மனிதர்களை கிட்ட இருந்தாலும் தூர வைத்துள்ளது. சகோதரர்களே ஒற்றுமையுடன் இருக்க முடியாத அறிவுப்படைகள் நம்மில் படிந்துள்ளன..! இதனை அகற்ற நாமே முயலாவிட்டால், இறைவன் அல்லது இயற்கை ஒன்றால் மட்டுமே அதனைச் செய்ய முடியும். உலக உண்மையை உணர நாங்கள் தான் முயற்சிக்க வேண்டும். இங்கு யாரும் யாருக்கும் பகைகிடையாது. எல்லாரும் உறவுகளே..! அறிவுப்படைகளால் இணைய முடியாத அளவுக்கு தூரமாக விலகியிருக்கும் உறவுகளே நாம் எல்லோரும்..! அன்பால் இணைக்க முடிந்தாலும் ஏற்க மறுக்கும் அறிவுப்படைகளை கொண்டவர்களே அதிகம் இருக்கும் இந்தக்கலி காலத்தில்
நாமும் கவனமாக இருப்போம். யாருக்கும் கெடுதல் செய்யாது இருப்போம். இருந்தாலும் ஏனையோரின் தவறுகள், தலையைத் துண்டிக்க வரும்போது காக்க மாத்திரம், குனியப்பழகுவோம்.
நாம் குனிந்தாலும் சரி, கிருஷ்ணனின் தயவால் அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது போல் அமைந்தாலும் சரி புரிந்து பயணிப்போம்.

எல்லாம் ஒன்றே..! புரியும் போது நாம் எல்லாம் மண்ணே..!
கருத்துகள்
கருத்துரையிடுக