பிக்பொஸ் வின்னர்..

 

இன்று (22-01-2023) விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள். வெற்றியாளர் யார் என்று தேர்வு செய்யும் நேரம்..? நிறைய நம்பிக்கை இருந்தது. நிதானமாக விளையாடிய விக்ரமன் வெல்வாரென்று..! அதேநேரம் சம அளவான வெற்றிவாய்ப்பு அசீமிற்கும், சிவினுக்கும் இருந்தது.

இறுதியில் அறம் வெல்லும் என்று அரசியல் பேசிய விக்ரமனை விட, கோபத்துடனும், பதட்டத்துடனும் இருந்தாலும், உண்மையாகவும், தன்னம்பிக்கையோடும் இருந்தார் என்பதற்காக அவர்  வெற்றிபெற்றுள்ளார்.  அசீம் கிடைக்கும் வெற்றிப்பணத்தில் அரைவாசியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்து, மக்களிடமே பேரம் பேசியுள்ளார். அதனை மக்களும் ஏற்றுக்கொண்டு வெற்றிபெறச் செய்துள்ளார்கள்.  உண்மையில் அந்த வாக்கைக் காப்பாற்றுவாரா என்று எனக்குச் சந்தேகம் இருக்கின்றது.  எத்தனையோ  முறை கோபப்படக்கூடாது என்று சொன்னாலும் கெட்டாரா..!  

அறத்தை நம்புபவர்களை பெரும்பாலான மக்கள் நம்புவது கிடையாது..! அவர்களை பழசுகள் என்ற மாதிரி ஒதுக்கிவிடுவார்கள்.  இது தான் உண்மையான மக்களின் நிலை.  கோபமாகப் பேசினால் என்ன, ரவுடியாக இருந்தால் என்ன, அசிங்கமான வார்த்தைகள் பேசினால் என்ன மக்கள் அதனை வரவேற்பதும், அதனைக்கொண்டாடுவதும் தான் நமது சமூதாயத்தின் சாபக்கேடு..!நல்ல சமூகம் வளர நல்ல கொள்கைகளும், அறமும், அதனை நிலைநாட்டுவதற்கான முயற்சியும் வேண்டும்.  என்ன செய்தாலும் மக்கள், இலகுவாக ஏமாறக்கூடிய சூழலே சமூகத்தில்  அதிகம் உண்டு..!

ரஜினி சொல்லும் வாக்கியம் ஞாபகம் வருகின்றது. “கெட்டவர்களை இறைவன் தூக்கி விடுவார். இறுதியில் கையைவிட்டுவிடுவார். ஆனால் நல்லவர்களை தூக்கிவிடார். ஆனால் இறுதியில் கைவிடார்..” இப்படியான ஒரு எண்ணம் தான் அறத்தை நிலைநாட்டும் அறம் வெல்லும் கொள்கைகொண்ட விக்ரமனுக்கு இங்கு நிகழ்ந்ததாக எடுத்துக்கொண்டு,  நானும் அடங்கிவிட்டேன். 

பாவம் சிவினும் எதிர்பார்த்து ஏமாந்தார்..! எல்லாம் நன்மைக்கே..! எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று அசீம் சொன்னது தான் ஞாபகத்திற்கு வந்தது..!


 


 


 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!