காய்ச்சலுடன் மாய்ச்சல்..!
கடந்த வெள்ளி முதல் இன்றைய வெள்ளி வரை நடந்த விடயங்கள் யாவும் மயக்கத்துடன் நடந்த மாதிரியே இருக்கின்றன. போனவாரம், தங்கை வந்து சென்ற பின்னர், பிள்ளைகளுக்கு இருந்த வைரஸ் காய்ச்சல் என்னையும் விடவில்லை. வைத்துச் செய்தது. வாய்க்கச்சல் போகவே பல நாட்கள் எடுத்தது.
இடையில் வருடம் தொடங்கியதால் வேலைக்குப் போனதுடன், அம்மாவின் 7ம் திருவெம்பா பூசையும் வந்ததால் அம்மா, தம்பி மற்றும் அவர் பிள்ளையை ஏற்றிக்கொண்டு, மாசியப்பிட்டி கண்ணகையம்மன் கோவில் பூசைகளைச் சிறப்பாச் செய்து, வீடுவந்து, பிரசாதங்களை கொடுத்து, பின்னர் வேலைக்குச் சென்று வழமையான பணியைச் செய்ததுடன், Academic Syndicate இற்கான பணியழைப்பு முதலே வந்ததால், கொழும்பு செல்லத் தேவையான வேலைகளைச் செய்து, தயார்நிலையில் இருந்தேன்.
சூடுதண்ணீர் குளியலுடன் காலைக்கடனைத் தொடங்கி, ரெயிலில் கொழும்பு போய், தம்பி வீட்டில் நின்று, அழைத்த கூட்டத்திலும் கலந்து, எனது வரவைப் பதிந்து, குளிர் வசதியுள்ள பஸ்ஸில் இன்று காலை வீடுவந்து சேர்ந்தேன். இந்த காய்ச்சலுடனான அலைச்சல் சனியின் கடைக்கூறு என்று சொல்லும் மாச்சலா எனத்தோன்றுகின்றது.
எனக்கு காய்ச்சலுடன் மாச்சல் இப்படியிருக்க, தங்கையும் இதே நாட்களில் கம்பஹாவில் இருந்து, கட்டுநாயக்கா போய் அங்கிருந்து விமானம் மூலம் டுபாய் சென்று, அடுத்த விமானம் மூலம் அமெரிக்கா போய், அங்கிருந்து இன்னோர் உள்ளூர் விமானம் மூலம் வன்கூவர் சென்றார். நான் அலைந்த காலப்பகுதிகளில், அவளும், கணவரும் பிள்ளையும், அலைந்தனர்.
இன்றோடு மாச்சல் ஓய்ந்தால் சரி..! அவ்வாறு இல்லாமல்,தொடர்ந்தால் கஷ்டம் தான். பார்ப்போம் சனியின் திருவிளையாட்டை..!
கருத்துகள்
கருத்துரையிடுக