இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காயங்கள் தரும் நம்பிக்கை..!

படம்
  உலகப் போக்கில்  எல்லா தொழிலிலும் வியாபார எண்ணங்களை நுழைப்பதால், சந்தேகம் எங்கும் வியாபித்தே வருகின்றது..! எவரையும், எப்பொருட்களையும் நம்ப முடியாத அளவிற்கு காலம், மாறிவிட்டது. பணத்திற்கு மதிப்பு அளிப்பதால் மனித தன்மைகளும், அசூரநிலைக்குச் செல்கின்றன..! யாருடனும் அன்பாக பழகப்பயம்  வருகின்றது. மக்களுக்கு சேவைசெய்யும் தொழிலில் இருப்பவர்களே தொழிலறம் அற்று செயற்படுவது வேதனைக்கு உரியது. பணம் தேவை தான். அதற்காக, உறவுகளையும், நட்புக்களையும் உதறும் நவீன நுன்சமூகங்கள் மீது வெறுப்பும், வேதனையும் கொப்பளிக்கின்றது. எமது நாட்டில் மாத்திரம் தான் இப்படி நடக்கின்றது   என்பது அல்ல..! உலகின் பெரும்பாலான நாடுகளே இவ்வாறு தான் இருக்கின்றது. நாலு பேர் நல்லாக இருப்பதால், நாட்டிலுள்ள அனைவரும் நல்லாக இருப்பதாகக்காட்டிக்கொள்ளவே அருகே இருக்கும் பெரிய நாடுகளே விரும்புகின்றன..! சந்திரனையும், சூரியனையும் ஆராயும் எண்ணம் கொண்டவர்கள் முதலில் தம்மையும், தமது நாட்டிலுள்ள அடிமட்ட மனிதர்களையும் முதலில் ஆராய வேண்டும். முன்னேற்றம் என்பது படம் காட்டுவதில் அல்ல..! நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதர்களும் நிறைவாகவும், நிம்மதியாக

இடமாற்றம்..!

படம்
  ஆரம்ப காலத்தில் நிரந்தரப் பணிப்பாளர் என்ற பதவியை எதிர்த்த நான், இறுதியில் நிரந்தரப் பணிப்பாளராக வந்துவிட்டேன்..! விரும்பி நடந்ததோ அல்லது விதியின் வசத்தால் நடந்ததோ நாமறியோம்.   ஆனால் நடந்துவிட்டது..! தொடர் தோல்விகளும், கஷ்டங்களும் பல காலம் என்னைச் சூழ்ந்ததால், வந்த ஞானம், வாழ்க்கையில் எது நடந்தாலும் ஏற்கும் பக்குவம் எனக்கு எப்பவோ வந்துவிட்டது..! எனது மரணத்தைக் கூட என்னால் ஏற்க முடியும். எனக்கு ஏதாவது கடமை இருந்தால் தான், இந்தப்பூமியில் இருக்க வேண்டிய நிலைவரும். அப்படியான கடமைகள் இல்லையாயின் இங்கு இருக்கவேண்டிய அவசியம் கிடையாது..! இந்தமனநிலைக்கு வந்து நீண்டகாலமாகிவிட்டது..!   இன்று காலை வழமைபோல், அலுவலக மின்னஞ்சல் பெட்டியைப் பார்த்தேன். அதில்   ஒரு   அஞ்சல்   என்னைக் கவலைகொள்ள வைத்தது..! ஒவ்வொரு நாளும் எனது மனதில் ஒரு உறுத்தல் ஏற்படுகின்றது..! அது, நான் திருகோணமலையில் இருந்து இடமாற்றம் பெற்றது யாரையும் தண்டிக்கும் நோக்கத்துடன் கூடியது அல்ல. அங்கு தொடர்ந்து இருந்தால் எனது குணத்திற்கும், கோபத்திற்கும் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடும் என்ற முன்னெச்சரிக்கை தான்..! ஆனால் ஆச்சரிய

சினம்

படம்
  நடிகர் அருண்குமார் என்ற அருண் விஜய் நடித்த திரைப்படம் சினம். தற்போதுள்ள முன்னனி நடிகர்களுடன் இருக்கவேண்டியவர் காலம் அவரை கனகாலம் கவனிக்காமல் மறைத்துவிட்டது..! 1995இல் நடிப்பில் இறங்கியவர் ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகே ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது, இவர் தெரிவு செய்யும் படங்கள் ரசிக்கக்கூடியவையாக இருக்கின்றன.   ஜி.என்.ஆர். குமாரவேலனின் சினமும் ரசிக்கவும், உணர்வுகளைத் தூண்டவும் கூடிய ஒரு கதைக்களம் தான். காதல் திருமணம் செய்து, மனைவி குழந்தையுடன் தனியே வசித்துவருகின்றார் ஹீரோ.   கண்டிப்பும் நேர்மையும் கொண்ட பொலிஸ் அதிகாரியாக இருக்கும் ஹீரோ, வழமைபோல் பிழைகளைத் தட்டிக்கேட்கின்றார்..! இந்த சமயத்தில் அவரது மேலதிகாரியின் வெறுப்புக்கு உள்ளாகி, கோபம் கொண்டு அவரைத் தாக்கி, வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார். இதற்கு முன்னர், மனைவியின் தங்கையினது நிச்சயதார்த்த நிகழ்வுக்குச் சென்று, மனைவிக்கும், அவரது குடும்பத்திற்குமான நீண்டகாலப் பிரிவுத்துயரை நீக்க முயல, சூழல் செய்த சதியால், ஹீரோவின் மனைவி, காடையர்களின் காமப்பசிக்கு தீனியாகியதுடன், உயிரையும் இழக்க, வெகுண்டு எழுந்த ஹ

வெந்து தணிந்தது காடு..!

படம்
    கௌதம் வாசுதேவ மேனனின் படங்களின் பெயர் எப்பவுமே ஒரு கவிதை நாயத்தைக் கொண்டிருக்கும். அந்த வகையிலே இந்தப்படத்தின் பெயரும் எல்லோரையும் கவரக்கூடியதாக இருந்தது. ஆனால் படத்தில் உள்ள விடயங்கள் எத்தனையோ படங்களில் பார்த்த ரௌடிகளின் போட்டியும், அதற்குள் சிக்கித் தவிக்கும் ஒரு அழகான காதலும், ஹீரோ எந்தப்பாதையில் செல்வது என்பது தெரியாமல் துப்பாக்கியைத்தூக்கி   ஜன்னலின் மேல் வைத்துவிட்டுச் செல்வதும் எல்லோரும் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததும், எனக்கும்   வேடிக்கையாக இருந்தது. சிம்பு உடல் ரீதியாக ரொம்ப இளைத்துள்ளார். ஒரு மாதிரிச் சரிந்து சரிந்து நடப்பது வித்தியாசமாக இருந்தது. ஆனால் கதை சிறப்பாக இல்லை. முன்பு கௌதம் மேனன் படம் என்றால் ஒரு ஈர்ப்பு இருக்கும். இதில் அப்படியான உணர்வு ஏற்பட மறுக்கும் அளவுக்கு, திரைக்கதை சுவாரசியம் குறைவாக இருந்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு ஒரு வலுவான உணர்வை ஏற்படுத்தினாலும் படத்தில் ஏதோ ஒரு ஒட்டாத   சில தன்மைகளால், பல முயற்சிகள் வீணாகிப்போயுள்ளதாகத் தோன்றியது. கதாநாயகியாக நடித்த   சித்தி இட்னானி (Siddhi Idnani) பார்க்க மிக அழகாகவும், காதல் காட்சிகள் க

பாயும் ஒளி நீ எனக்கு..!

படம்
    பாரதியின் வரியை எடுத்து வைத்துக்கொண்டு, காதலையும், கடும் கோபத்தையும் வெளிப்படுத்தும், ஒளிகுறையும் போது குருடாகும் ஒருவனின் பழிவாங்கும் கதை தான் இந்தப்படத்தில் இருக்கின்றது. இருந்தாலும் படம் போரடிக்காமல் செல்வதாக எனக்குப்பட்டது. பொதுவாக எனக்கு நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் மிகவும் பிடிக்கும். ஓவர் அக்சன்   (Over Action) என்று பலர் சொன்னாலும் அவரது படம் என்றால் எப்படியும் பார்த்து இருப்பேன். இல்லை என்றால் பார்ப்பேன். இந்தியாவில் இருந்த காலத்தில் அவரது படங்களைத் தேடி அலைந்து பார்த்து ரசித்த அனுபவம் இன்றுவரை மனதில் ஒரு மகிழ்வான தருணமாகப் பதிந்துள்ளது. அவருக்குப் பிறகு, அவரது மகன் பிரபுவின் படங்களும் பிடிக்கும்.   பிரபு நாயகனாக நடித்த எல்லாப்படங்களும் பார்த்துள்ளேன். தற்போது, அவரது மகன் விக்ரம் பிரபுவின் படங்களும் பிடிக்கும். இவருடைய அனைத்துப் படங்களும் பார்த்துள்ளேன். அந்த வகையில் இன்று இந்தப்படத்தைப் பார்த்தேன்.   படம் திரில்லாகவும், ஒரு காதல் கவிதை போன்றும் சென்றது. கடைசியில், வில்லனையும், அவனது கூட்டத்தையும் பொறிவைத்துப் பிடித்தது பழைய பல படங்களை நினைவிற்கு கொண்டுவந்தது. ஒரு

அந்தியேட்டிச் சாப்பாடு..!

படம்
  இன்று எனது நிறுவன ஊழியர் ஒருவருடைய உறவினர் இறந்ததை முன்னிட்டு, அந்தியேட்டிக்கு அழைப்பிதழ் தந்தமையால், அதற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை முற்கூட்டியே செய்திருந்தேன்.   அதன்படி எமது நிறுவனத்தைச் சேர்ந்த சில ஆண்கள் போகத்தயாராக இருந்தோம்.   ஆனால்   சில பெண் ஊழியர்கள், கோரிக்கையாக ஏன் பெண்களான எங்களை கூட்டிச்செல்ல கேட்கவில்லை என்றார்கள்..! நான், “முற்கூட்டியே ஒழுங்கு செய்தபடியால் என்னால் ஏற்பாட்டை மாற்ற முடியாது” என்றேன். இப்படியான சந்தர்ப்பங்களில் முற்கூட்டியே கேட்டால் நிச்சயம் பெண்களுக்கும் இடம் கொடுக்கலாம் என்று சொல்லி, இம்முறை என்னால் மாற்றம் செய்யமுடியாது என்று சொல்லியதுடன், நான், யார் யாரை கூட்டிச்செல்ல   இருந்தேனோ அவர்கள் பற்றியும், ஏன் அவர்களைக் கூட்டிச்செல்கின்றேன் என்பது பற்றியும் சொன்னேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு, தமது கஷ்டத்தைக்காட்டி உதவியாக அந்த ஊழியர்களிடம் கேட்க, அவர்களே விட்டுக்கொடுத்து, குறித்த பெண் ஊழியர்கள், என்னுடன் வர உதவினார்கள். பின்னர் விட்டுக்கொடுத்த ஆண்கள், தமது மோட்டார் வண்டியில் வந்து அந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள். நானும் திட்டமிட்ட வகையில் எமது ஆண், பெண

கல்வி வழிகாட்டி..!

படம்
  யாழ் கச்சேரியால் ஒழுங்கு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டிக்கருத்தரங்கு ஒன்று இன்று வேலணையில் உள்ள மத்திய கல்லூரியில்   ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. நாட்டின் தற்போதைய சிக்கலான சூழலால் பலர் நாட்டைவிட்டு ஓடுவதால் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது..! அதுமாத்திரமன்றி, ஏனைய கல்வி நிறுவனங்களும் அவர்களது வழமையான எல்லைகள் தாண்டி, கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், பல கற்கைநெறிகளுக்குரிய கேள்வி குறைந்துள்ளது. மாணவர்கள் உயர் டிப்ளோமாக் கல்விகளைப் படிப்பதைவிட, நேரடியாக பட்டப்படிப்பை வழங்க பல நிறுவனங்கள் காசுக்குத் தயாராக உள்ளன. இப்படியான காரணங்கள் அரசின் இலவசத்திட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளன.   காசு கொடுத்துப் படித்தால் தான், நல்ல படிப்பு என்ற எண்ணம் மக்களிடம் வலுக்கின்றது..! இலவசத்திட்டங்களிலும் தரத்தைப் பற்றிக்கவலைப்படாமல், கடமைக்குச் செய்தால் போதும் என்ற மனநிலையில், அரச உயர் அமைப்புக்கள் இவற்றைக் கருதுவதால் இந்தநிலை வந்துள்ளது. இதைத்தவிர, கருத்தரங்குக்கு வந்த மாணவர்களில் பலருக்கு இப்போது படிப்பதைவிட நேரடியாக வேலைக்குச் சென்றால், இன்னும் சிறப்பாக வாழமுடியும் எ

பிச்சைக்காரன் 2

படம்
    இன்று காலை இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் அன்ரனியின் மகள் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துள்ளார் என்ற செய்தி மனதை என்னவோ செய்தது..!   பருவ வயது பெண் மாள்வது பெற்றோருக்கு எவ்வளவு துன்பகரமானது என்பதை யோசிக்க எனக்கும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் நாளை நமக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் ஒன்று தெரியாது..? இது தான் வாழ்க்கை..! இப்படித்தான் உலகமே இருக்கின்றது. சில வாரங்களுக்கு முன்னர் விஜய் அன்ரனி நடித்து, இயக்கித்    தயாரித்த பிச்சைக்காரன் 2 என்ற படத்தின் டிவிடியை வாங்கி வைத்திருந்தேன். இன்று தான் இந்தசெய்தியைக் கேட்டவுடன் படத்தைப் பார்க்க மனம் எண்ணியது..! அவ்வாறே படத்தைப் பார்த்தேன். முதல் கால்வாசிப்படமும் மிகவும் போராக இருந்தது..!   அதன் பின்னர், மூளைமாற்றச் சிகிச்சை என்ற நவீன மருத்துவப் பாய்ச்சலை வைத்துக் கதை செய்து, கதையின் திசையை மாற்றி, அதற்குள் பாசம், சோகம், வீரம் என்பவற்றை வைத்து, போரடிக்காமல் படத்தைப் பார்க்கலாம் என்ற எண்ணத்தை மிகுதியான, முக்கால் பகுதி கொண்டுவந்தது..! அதுமாத்திரமன்றி கதை, இன்னொரு தட்டில் பயணித்து, ஏழைகளின் உருவாக்கமே பணக்காரர்களால் தான் என்பதை உணர்த

காலநிலை மாற்றம்..!

படம்
    நேற்றுவரை கடும் வெய்யிலால் பயிர்கள் எல்லாம் வாடிக்காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் வேலையால் வீடுவரும் போது கண்டு காலிகளைக் காண கவலையாக இருக்கும். அவை எல்லாம் வாடி வதங்கி இருந்தன. புற்கள் எல்லாம் காய்ந்து சருகாக காற்றில் பறந்தன. ஈரலிப்பு இல்லாத மண்துகள்கள் எங்கும் பறந்து எல்லாவற்றையும் அழுக்காக்கி வைத்திருந்தன.   பல வாழைமரங்கள் காய்ந்தும், முறிந்தும், அழுகியும் விழுந்தன. இவை எல்லாவற்றையும் பார்க்க கவலையாக இருக்கும். என்னால் முடிந்தளவு தண்ணீரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாகப் பாய்ச்சினேன்.   ஒரு பகுதிக்குப் பாய்ச்ச, மற்றப்பகுதி எல்லாம் காய்ந்து நொந்து இருக்கும். என்ன செய்வது இயற்கை   மனம் வைத்தால் தான் இதற்கு தீர்வு உண்டு. இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. அத்துடன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரக்கஷ்டம்,   பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை வாசிகளைக் கூட்டிவிட்டது..! குறிப்பாக மின்கட்டணமும் மிக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் மோட்டர் போட்டுத் தண்ணீர் இறைப்பதால் மின்கட்டணமும் அதிகம் செலுத்தவேண்டி வந்தது. இலாப நட்ட கணக்குப் பார்த்தால், தண்ணீர் இறைப்பதைவிட சும்மா இருப்பது இலாபத்தைத் தரவல்லத

சர்பத்..!

படம்
  சின்ன வயதில் நான் இருக்கும் போது சுன்னாகம் அல்லது யாழ்ப்பாணம் போனால் ஒரு சர்பத் குடித்தால் தான், ஒரு திருப்தி கிடைக்கும்..!   இந்தியாவில் இருந்த காலத்திலும் அது தொடர்ந்தது. அங்கே, அதனை ரோஸ் மில்க் என்பார்கள். ஏறக்குறைய எங்களுடைய சர்பத் தான் அந்த ரோஸ் மில்க். கோடை காலத்தில் சர்பத் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். தற்போது மாரிகாலம் தொடங்கினாலும் கோடைகாலம் போல் வெய்யில் வாட்டுவதால் மக்களின் கூட்டம் சர்பத் கடைகளில் அதிகமாக இருக்கின்றது. நேற்று நானும், மனைவியும் சாவகச்சேரியால் வரும்போது, வெய்யில் தாகத்திற்கு சர்பத் பருகினோம். அதனைப் பிள்ளைகளுக்கும் சொன்னோம். இன்று மனைவியின் பிறந்த நாள். வழமைபோல், கேக்கையும், ரோல்ஸையும் உண்டு, அயலுக்கும் உறவுக்கும் கொடுக்க வெளிக்கிட, மூத்தவள் சர்பத் வேண்டும் என்று கேட்க, வேண்டாவெறுப்பாக இருந்த இளையவளையும், கூட்டிக்கொண்டு, உறவுகள் வீட்டிற்கும், வரும்போது சாப்பாட்டையும் வாங்கிக்கொண்டு, சர்பத்தையும் வாங்கி அருந்தினோம். இரவாக இருந்தாலும் இனிமையாக இருந்தது. 50 வயதுக்கு மேல் இனிப்புக்களைத் தின்பது, உடலுக்கு கேடு என்று நினைத்தாலும் சூழல் கொஞ்சமாவது உண்ணச்ச

கடவுச்சீட்டு..!

படம்
  உலக்பொருளாதாரக் கொள்கையும், உலகமயமாக்கலின் இறுதிநிலையும் புரியும்போது, மீண்டும் வேதாளம் முருங்கைமரத்தில் ஏறிய நிலையே, எனகக்குத் தோன்றுகின்றது. ஊரோடு ஒத்தோடு என்பது போல் நானும் சில காரியங்களை, எனக்காக இல்லாவிட்டாலும், குடும்ப உறவுகளுக்காகச் செய்துதான் ஆகவேண்டும். அந்தவகையில் கடவுச்சீட்டு எடுக்க, கையொப்பம் இட நானும், மனைவியும் சாவகச்சேரி போனோம். போகும் போது வழிவிடு பிள்ளையாரின் அனுக்கிரகத்தாலும், சாவகச்சேரி DS Office   அலுவலகர் ஒருவரின் உதவியாலும் போன வேலை மிக விரைவாக முடிந்துவிட்டது..! எனது மனைவி ஒரு சித்திரப்பாட ஆசிரியர் என்பதால் கலைகளில் ஆர்வம் அதிகம். அது எனக்கும் இருக்கின்றது..! சாவகச்சேரி றிபேர்க்கல்லூரிக்கு (Drieberg College) பின்னால் இருக்கின்ற ஓவியக்கூடத்திற்கு சென்றேன். அங்குள்ள ஓவியங்களையும், அவர்களது சேவைகளையும் பார்க்கும் போது, மனம் மகிழ்ந்தது.   எமது நண்பர்கள் பலரின் ஓவியங்கள் அங்கே கட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அனைத்தையும் பார்த்து, ரசித்து, கைபேசிக்குள்ளும் கொஞ்சம் அடக்கிக்கொண்டும் வந்தோம். அங்கு இருந்த சமயம், அந்த ஓவியக்கூடத்தை நடாத்தும் எமது தாயை ஒத்த வயதான, ஆனால்

சுடுதண்ணீர் கீற்றர்..!

படம்
    நரம்பு வருத்தம், குளியலுக்கு என்னை குளிர் தண்ணீர் தவிர்த்து சுடுதண்ணீருக்கு மாற்றியது..! பொதுவாக எனக்கு பச்சைத் தண்ணீர் குளியலே பிடிக்கும். வயது போக, பிடித்தாலும் செய்யமுடியாத சூழல் வாய்ப்பது வழமை தான். எனக்கும் அவ்வாறே நிகழ்ந்தது..!    இப்ப இருக்கும் இலத்திரனியல் பொருட்களின் ஆயுட்காலம் என்பது ஒன்று இரண்டு வருடங்கள் தான். அதற்கு   ஒப்பாகப் போன வருடமே குளியலறைச் சுடுதண்ணீர் கீற்றர் பழுதாகிவிட்டது. சிறு பிழை தான்   என்று புரிகின்றது. ஆனால் அதனை திருத்த சரியான ஆள் கிடைக்கவில்லை. ஒருவருடத்திற்கு மேலாக பயன்படுத்த முடியாமல் தவித்தேன். பின்னர் நிரந்தரப் பச்சைத்தண்ணீர் குளியலே தஞ்சம் எனவந்துவிட்டேன்.   நோயும் சிறிது சிறிதாக எனது கட்டுப்பாட்டுக்குள் வந்துகொண்டிருக்கின்றது. இந்தநிலையில் எனது அலுவலக ஊழியர் ஒருவர்   “எனது வீட்டுக்கு முன்பாகவே ஒருவர் இருக்கின்றார், அவரிடம் கேட்டுப்பாருங்கள், அவர் அதனைத் திருத்தக்கூடியவர் ”என்று சொல்லித்தூண்டினார். அதற்கேற்ப, அவரைத்தொடர்பு கொண்டு, திருத்தக்கேட்க சில நாட்களில் ரூபா.1400 உடன் இயங்கப்பண்ணியுள்ளார். பொருளாதார சிக்கலில் பொருட்களின் விலைகள் அதிகமா

மாமன்னன்.!

படம்
  மாரி செல்வராஜ் என்கின்ற   கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களின் வாழ்வியலை காட்டும் அற்புத இயக்குனரின் படைப்புக்களான பரியேறும் பெருமாள்,   கர்ணன் என்ற வரசையில் வந்துள்ள படம் தான் மாமன்னன்..! கொமெடி நடிகர் வடிவேலுவை இப்படியான பாத்திரத்தில் பார்த்திருக்க முடியாது. படத்தை அவ்வளவு தூரம் உயர்த்திப் பிடித்துள்ளார்.   மிகச்சிறப்பான நடிப்பையும், சோகமான ஒரு பாடலையும் பாடி, தான் ஒரு திறமையான கலைஞன் என்பதை நிரூபித்துள்ளார். தமிழக முதல்வரின் மகன் உதயநிதியும் சிறப்பான படங்களாக கொடுத்துவருகின்றார். எல்லா திசைகளில் இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், சனாதனத்தை எதிர்த்தாலும், இந்தப்படத்தில்   உயிர்கள் மேல் காட்டும் அன்பையும், ஆணவத்திற்கு எதிராகக் காட்டும் அதிகோபத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி, தானும் ஒரு கலைஞன் என்பதை உணர்த்தியுள்ளார். என்ன தான் அரசியல் பின்புலம் கொண்டாலும், அடாவடி அரசியல் நடாத்தினார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், நியாயமான கருத்துக்களை விதைப்பது, அவர் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்படுகின்றது..! கீர்த்தி சுரேஸின் பாத்திரமும் ரசிக்க வைக்கின்றது. ஆகமொத்தம் ஒரு தரமான படத்தைப் பார

சுத்தல்..!

படம்
  இன்று காலை, யாரில் முழித்தேனோ தெரியவில்லை, ஒரே பிரச்சனைகளாக வந்துகொண்டிருக்கின்றன. அலுவலக ஊழியர்களின் எல்லா விதமான பிரச்சனைகளையும் என்னிடம் தெரிவிக்கும்போது, அதற்கு தீர்வை அளிக்கக்கூடிய திறனுடன் நான் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் சில சமயம் நானே பிரச்சனைகளுடன் வருவேன். அங்கும் பிரச்சனைகள் வர இரண்டும் சேர்ந்து பெரும் பிரச்சனைகளாக வர, சூழலே போர்களமாகும். சூழ இருப்பவர்களும் சங்கடப்பட நேரிடும். இன்றும் சூழல், என்னைக் கத்தவைத்துவிட்டது. நான் யாரையும் ஏசக்கூடாது என்று நினைத்து, மிக அமைதியாக இருப்பது வழக்கம். அதையும் தாண்டி சில நிகழ்வுகள் என்மேல் பழிகளாக வரும்போது, கோபம் சத்தமாக வெளியேறுகின்றது..! அதனால் தற்போது கூட்டங்களே வைக்க மனம் வருவதில்லை..! யாரையும் ஏமாற்றும் எண்ணத்தில், இந்தத் தொழிலில் இருப்பது ஒருவருக்கும் அழகல்ல. கல்வித் தொழில் என்பது சமூகத்தில் நீதி நியாயங்களை நிலைநிறுத்துவதற்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கல்விக்குரிய மரியாதையும் கிடைக்கும். கல்வியாளர்கள், ஏமாற்றுப் பேர்வழிகளாக, வியாபாரிகள் போல் இருந்தால், எதிர்க்காலம் ஏமாற்றம்

அமெரிக்கன் கோனர்..!

படம்
    பல நாட்களுக்கு முன்னரே எமது நிறுவனத்தில் படித்த பழைய மாணவி ஒருவர், எமது தற்போதைய மாணவர்களுக்கான ஒரு செயலமர்வுக்கு அனுமதி கேட்டார். அதனைத் துறைத்தலைவரிடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்யச்சொன்னேன். கால ஓட்டம், விரைவாக அந்த நாளைக்கொண்டுவந்தது..! திட்டமிடல்களில் சிறு குழப்பங்கள் இருந்தாலும், நாட்டுநிலமைகளையும், பொருளாதார நிலைமைகளையும், திருவிழாக்காலங்களையும் காரணம் காட்டி, இயன்றளவு சங்கடங்கள் இல்லாமல் செயலமர்வை நடாத்தி முடித்தோம்..! செயலமர்வுக்கு முன்னர் என்னை சந்திக்க, அரை மணித்தியால நேரம் ஒதுக்கித்தர முதலே அனுமதி கேட்டார்கள். நானும் கொடுத்தேன். சரியாக நானும், அவர்களும் குறித்த நேரத்தில் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.   வந்தவர்கள் எல்லோரும் அமெரிக்கா நாட்டுத் தூதரகத்துடன் தொடர்புபட்டவர்கள்.   எமக்கும், எமது மாணவர்களுக்கும் இலவசமாக கருத்தரங்குகள் செய்ய விரும்பியவர்கள். இருந்தாலும், அவர்கள் எமக்குச் செய்வது நன்மை செய்வது போன்ற ஒரு தீமை என்பதை எத்தனைபேர்கள் புரிவார்களோ தெரியாது. பல இலவசங்களுக்குப் பின்னால், பல வணிகங்களும், வஞ்சகங்களும், வாழ்க்கை அழிப்புக்களும் இருப்பது

மன்னிப்பு..!

படம்
    இதனை நான் நீண்டகாலம் என் வாழ்வில் பயன்படுத்தியுள்ளேன். பல கெடுதல்கள் செய்தவர்களை, மன்னித்து,   அவர்கள் செய்த அநாகரிகச் செயல்களை மறக்கவும் முனைந்துள்ளேன்..! பலர் இதனை எனது பலவீனம் எனக்கருதினாலும், நான் இதனை எனது பலமாகவே மாற்றிவந்துள்ளேன். எனது வாழ்க்கைப் பயணத்தை அவதானித்தால், யாரையும் எனக்குப் போட்டியாகவோ அல்லது எதிரியாகவோ கருதுவது கிடையாது. இறைவன், இப்படியான நபர்கள் ஊடாக என்னைச் சோதிப்பதாக நினைத்துக்கொள்வேன். இதனால் என்னுடன், எதிராக நின்றவர்கள் காலப்போக்கில் என்னுடன் இணைந்து செயற்படுவார்கள். இது நாள் வரை இப்படியான அனுகுமுறையில் சென்றதால், சிலர் தாம் செய்வது சரி என்ற எண்ணத்தில் மேலும் மேலும் தேவையில்லாத விடயங்களில் தலையிட்டு, பிரச்சனைகளை   மேலும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளனர். காலமும், சூழ்நிலைகளும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தாமாகவே வலைகளில் சிக்கி, தாமாகவே அவதிப்படுபவர்களைக் காணும் போது மிகக்கவலையாகவே இருக்கின்றது.   இன்று நிலைமைகள் மாறி, பல முரண்பாடுகள் சேர்ந்து, சிலருக்கு எதிராகத்   திரண்டுவரும்போது என்னால் ஒன்றும் செய்யமுடியாது..! தவறான பாதையில் வீறுநடைபோட்டால்,

குடும்பம் ஒரு கோவில்..!

படம்
    ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தும், அந்தக்குடும்பத்தை கலையாமல் காப்பது என்றால் தந்தை அல்லது தாயே காரணமாக இருக்க முடியும். சில இடங்களில் விதிவிலக்கான சூழல் அமையும். தந்தையும், தாயும் அவ்வாறான நிலையில் இல்லை என்றால், பிள்ளைகள் தான் அதனைச் செய்ய வேண்டும். எனக்கும் அவ்வாறான சூழலே வாய்த்திருக்கின்றது. தந்தை உயிருடனே இல்லை. தாயார் இருந்தாலும், முதுமை மற்றும் வைராக்கியம் போன்ற காரணங்களால், அவரைக் குறையும் சொல்ல முடியாது. மாறாக நிறையும் சொல்ல முடியாது..! இந்த நிலையில் வரும் சிக்கலைச் சமாளிப்பதே பெரும் மனவலியாக அமைகின்றது. அலுவலகத்திலும் பல சிக்கல்கள், அவிழ்படாமல் தொடர்ந்து, நிலைமாறாமல் இருக்கின்றன..! இவற்றிற்கு நடுவே எனது குடும்பத்தினரின் கோரிக்கைக்கும் முகம்கொடுக்க வேண்டியது  எனது தவிர்க்க முடியாத கடமை. எனது குடும்பத்தினர், எனது இயல்பை ஓரளவிற்காவது அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன். இல்லை என்றால் என்ன செய்ய முடியும்..? திரும்பத் திரும்பச் சொல்லித் தெளிய வைக்கலாம். புரியவே தயாரில்லை என்றால் ஒன்றுமே பண்ணமுடியாது. நடப்பதை ஏற்றுக்கொண்டு செல்வதே இலகு.   இன்ற