கடவுச்சீட்டு..!

 



உலக்பொருளாதாரக் கொள்கையும், உலகமயமாக்கலின் இறுதிநிலையும் புரியும்போது, மீண்டும் வேதாளம் முருங்கைமரத்தில் ஏறிய நிலையே, எனகக்குத் தோன்றுகின்றது. ஊரோடு ஒத்தோடு என்பது போல் நானும் சில காரியங்களை, எனக்காக இல்லாவிட்டாலும், குடும்ப உறவுகளுக்காகச் செய்துதான் ஆகவேண்டும். அந்தவகையில் கடவுச்சீட்டு எடுக்க, கையொப்பம் இட நானும், மனைவியும் சாவகச்சேரி போனோம். போகும் போது வழிவிடு பிள்ளையாரின் அனுக்கிரகத்தாலும், சாவகச்சேரி DS Office  அலுவலகர் ஒருவரின் உதவியாலும் போன வேலை மிக விரைவாக முடிந்துவிட்டது..! எனது மனைவி ஒரு சித்திரப்பாட ஆசிரியர் என்பதால் கலைகளில் ஆர்வம் அதிகம். அது எனக்கும் இருக்கின்றது..! சாவகச்சேரி றிபேர்க்கல்லூரிக்கு (Drieberg College) பின்னால் இருக்கின்ற ஓவியக்கூடத்திற்கு சென்றேன். அங்குள்ள ஓவியங்களையும், அவர்களது சேவைகளையும் பார்க்கும் போது, மனம் மகிழ்ந்தது.  எமது நண்பர்கள் பலரின் ஓவியங்கள் அங்கே கட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அனைத்தையும் பார்த்து, ரசித்து, கைபேசிக்குள்ளும் கொஞ்சம் அடக்கிக்கொண்டும் வந்தோம். அங்கு இருந்த சமயம், அந்த ஓவியக்கூடத்தை நடாத்தும் எமது தாயை ஒத்த வயதான, ஆனால் துடிப்பாகச் செயலாற்றும் பெண்மணியைச் சந்தித்தோம். அமெரிக்கா சிக்காகோவில்  (Chicago) 60 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர், தனது முதுமையைப் பயனுள்ள வகையில், சில காலம் இங்கே கழிப்பதை எண்ணும் போது மனம் மிகவும் மகிழ்ந்தது.  அதுமாத்திரமன்றி, இந்தவயதிலும், விடமுயற்சியுடன் ஓவியங்கள் வரைவதைப் பார்க்கும்போது, எனக்குள் இருக்கும் ஆசைகள் துளிர்விட்டன..! நானும் சிறுவயதில் ஓவியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவன். எனக்குப் பரிசு கிடைப்பது என்றால் அது ஓவியம் என்ற ஒன்றுக்கு மட்டும் தான்..! எனது குடும்பத்தினரும் அவ்வாறே..!

அந்தப்பெண்மணி, ஓவியர் மாத்திரமல்ல..!, அவர் ஒரு எழுத்தாளர். அது மாத்திரமன்றி, ஒரு சிறந்த சமூகசேவையாளர்.  ஆங்கிலேயர் வருகையை ஒட்டிய காலத்தில் இருந்தே, உயர் பதவிகளையும், கிறிஸ்தவ மதப்போதகர்களாகவும் இருந்த, அவரது மூதாதையர்களை சிறப்பிக்கவும், கௌரவிக்கவும் அவர் தயங்கவில்லை.

நானும், மனைவியும், அந்த  வயதான பெண்மணியும் உடுவில் மகளிர் கல்லூரியில் படித்தவர்கள் என்ற ரீதியில் ஒரு தொடர்பு இருக்கின்றது. எனக்குத் தெரிந்த திருகோணமலை நட்புக்களின் உறவினர்..! மேலும், அவர்களின் சேவையே எனது வயதான கால குறிக்கோளாகவும் இருப்பது ஆச்சரியமாக இருந்தது..! 

அந்த இனிமையான அனுபவத்துடன், மதியம் இருவரும் சுவையான ஐஸ்கிறீம் சர்பத் மற்றும்  ரோல்ஸ் என்பவற்றையும் வயிற்க்கு எடுத்ததால், நிரம்பிய  வயிற்றுடன், நிறைவான நித்திரைக்கு சென்று, மீண்டும்  மதிய உணவிற்கே விழித்து  வந்தேன்.

இன்றைய பொழுதுகள் நிறைவாக கழிந்ததற்கு இறைவனுக்கு நன்றி.

 

ஆ.கெ.கோகிலன்

14-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!