வெந்து தணிந்தது காடு..!

 


 

கௌதம் வாசுதேவ மேனனின் படங்களின் பெயர் எப்பவுமே ஒரு கவிதை நாயத்தைக் கொண்டிருக்கும். அந்த வகையிலே இந்தப்படத்தின் பெயரும் எல்லோரையும் கவரக்கூடியதாக இருந்தது. ஆனால் படத்தில் உள்ள விடயங்கள் எத்தனையோ படங்களில் பார்த்த ரௌடிகளின் போட்டியும், அதற்குள் சிக்கித் தவிக்கும் ஒரு அழகான காதலும், ஹீரோ எந்தப்பாதையில் செல்வது என்பது தெரியாமல் துப்பாக்கியைத்தூக்கி  ஜன்னலின் மேல் வைத்துவிட்டுச் செல்வதும் எல்லோரும் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததும், எனக்கும்  வேடிக்கையாக இருந்தது.

சிம்பு உடல் ரீதியாக ரொம்ப இளைத்துள்ளார். ஒரு மாதிரிச் சரிந்து சரிந்து நடப்பது வித்தியாசமாக இருந்தது. ஆனால் கதை சிறப்பாக இல்லை. முன்பு கௌதம் மேனன் படம் என்றால் ஒரு ஈர்ப்பு இருக்கும். இதில் அப்படியான உணர்வு ஏற்பட மறுக்கும் அளவுக்கு, திரைக்கதை சுவாரசியம் குறைவாக இருந்தது.

ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு ஒரு வலுவான உணர்வை ஏற்படுத்தினாலும் படத்தில் ஏதோ ஒரு ஒட்டாத  சில தன்மைகளால், பல முயற்சிகள் வீணாகிப்போயுள்ளதாகத் தோன்றியது.

கதாநாயகியாக நடித்த  சித்தி இட்னானி (Siddhi Idnani) பார்க்க மிக அழகாகவும், காதல் காட்சிகள் கவிதையாக இருக்க மிகத்துணையாகவும் இருந்துள்ளார்.  தாயாக நடித்த ரதிகாவும் வழமைபோல் நடிப்பை வழங்கினார்.

இந்தப்படத்தை வேல் நிறுவனம்  சார்பாக ஐசரி கணேஸ் தயாரித்து இருந்தார். அத்துடன் படம் வெற்றிபெற்றதாகவும் அறிவித்து இருந்தார்.

மலையாள ரௌடிக்கும்பலுக்கும், தமிழ் ரௌடிக்கும்பலுக்கும் இடையேயுள்ள போட்டியை களமாக வைத்து, கதை எழுதப்பட்டாலும்,  சிம்புவை ஒரு கடவுள் மாதிரி காட்டியது சிம்பு ரசிகர்களுக்குப் பிடித்து இருக்கலாம். பொதுவாகப் பார்க்கும் போது ஏற்க முடியாமல் இருந்தது. தமிழ் மற்றும் மலையாளக்கலப்பினரான கௌதம் மேனனுக்குத் தான் இந்தக்கதை எழுத இயல்பான உரிமையுண்டு..!

படத்தில் “ மல்லிப்பூ..” பாடல் கேட்க மிக இனிமையாக இருந்தது.  ஒட்டுமொத்தக்கலைஞர்களின், நடிப்பு ஒளிப்பதிவு மற்றும் ஏனைய தொழில்நுட்பங்களும் பரவாயில்லை ரகம். ஆனால்  மேனனிடம் அதிகம் எதிர்பார்த்தால், சரக்கு இல்லை என்பதை,  பிடிப்பை ஏற்படுத்தாத திரைக்கதையால் உணர்த்திவிட்டார்..!

 


ஆ.கெ.கோகிலன்

23-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!