அதிசய மாதம்..!

 



இன்று மாதக்கடைசி. எனது நண்பர் ஒருவர் கனடாவில் இருந்து வந்து, என்னைச் சந்திக்க விரும்பினார். எமது வேலைப்பளுச்சூழலில் அவரை நானும் மாலை சந்திக்கலாம் என்று வரச்சொன்னேன். அதற்கு முன்னர் அலுவலகத்தில் இருந்து, அவர் இருக்கும் ஹோட்டலில் சந்திக்க நினைத்தேன். பின்னர், அவரே சொன்னார் “நான் வானுடன் தான் வந்தேன். ஆகவே உமது காரில் வரத்தேவையில்லை. நானே உன்னைத்தேடி வருவதாக..!” பிறகு என்ன..? அவர் வரும் வரை எனது வேலைகளை முடித்துக்கொண்டும், சில வேலைகளை பிற்போட்டுக்கொண்டும் காத்திருந்தேன்.  எனக்குத்தெரியாது..? அவரின் உருவம் எப்படி என்று..? ஏறக்குறைய 40 வருடங்களுக்கு முன்னர் பார்த்தது..? ஆனால் எனது இன்னொரு நண்பர், அவரது படத்தை அனுப்பியிருந்தார்..!  பின்னர், அதன் உதவியால், வரும்போது, அவரை அடையாளப்படுத்த முடிந்தது..! ஏறக்குறைய அப்படியே இருந்தார். தலையில் “டட்டு“ குத்தியிருந்தார். முடியில்லை அல்லது குறைவு..! மற்றும் படி 36 வயது இளைஞர் போலவே இருந்தார். உண்மையில் என்னைவிட வயது அதிகம் அவருக்கு..!

9ஆம் வகுப்பிலே இன்னொரு நண்பரின் உதவியுடன் O/L  எழுதிப்பாஸ் பண்ணி, கொஞ்சநாள் எமக்குத் தெரியாமல் A/L இல் படித்து, முடிக்க முதல் நோர்வே, ஜேர்மனி என சில காலம் வாழ்ந்து, தற்போது கனடாவில் 3 Coffee shops வைத்து 20இற்கு மேற்பட்ட வேலையாட்களையும் வைத்து சிறப்பாக வியாபாரச் சேவையாற்றுவதுடன், தனது மகிழ்ச்சிக்கும் குறைவில்லாமல் வாழ்வை நடாத்திச் செல்கின்றார்..!

அவருடன் கதைத்தது இன்னொரு வித அனுபவத்தை எனக்குத்தந்தது. அடிக்கடி இலங்கை வருவதுடன், தாய்லாந்திற்கும் செல்வார். எம்மையும் வரச்சொல்லி அழைத்தார். பார்ப்போம்..! கால நேரங்கள் சாதகமாக வந்தால் போகலாம். தற்போது அதிக வேலை இருப்பதால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

தனது வாழ்வின் படிப்பினைகளையும், குடும்பம் பற்றிய அவரின் அனுகுமுறையையும், கடின உழைப்பிற்கும், சாதுரிய  உழைப்பிற்கும் கிடைக்கும் பலாபலன்களை வரிசைப்படுத்தினார். முயற்சியும், அதிஸ்டமும் சேர்ந்தால், பின்னர் வெற்றி தானே தேடிவரும் என்பார். நான் நினைக்கவில்லை..! இவர்கள் எல்லாம் திரும்ப வருவார்களா என்று..? ஆனால் ஆச்சரியம் .. வந்தார்கள். சந்தித்தார்கள். இனிவரும் வாழ்க்கைக்கான நம்பிக்கையாகவும் மாறியுள்ளார்கள்..!

 

ஆ.கெ.கோகிலன்

31-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!