இலத்திரனியல் அடிமைகள்..!
நாய் வளர்க்க முடியாமல், CCTV வாங்க, அது பல பிரச்சனைகளைக் கொடுத்துவருகின்றது..!
வீதியில் போகின்றவர்கள் ஏதாவது பிரச்சனை என்றால், பார்த்துச் சொல்லச் சொல்வார்கள்..!
சொன்னால் வேறு ஒரு சிலர் பிரச்சனைக்கு வருவார்கள்..! சொல்லாவிட்டால் இன்னும் வேறுசிலர்
பிரச்சனைக்கு வருவார்கள்..!
உலகிலுள்ள மக்கள், தற்போது மின்சாரக் குஞ்சுகளாக மாறி வருகின்றார்கள்..!
மின்சாரம் இல்லாமல் நாம் இயங்கமுடியாத அளவிற்கு, அதில் முழுமையாகத் தங்கியுள்ளோம்.
அவ்வாறே ஏனைய இலத்திரனியல் சாதனங்களான தொலைக்காட்சி, மடிக்கணினி, தொலைபேசிகள் எனதொடங்கி,
தற்போது எங்கும் கமெராக்கள் எம்மைப் பார்க்கத் தொடங்கியுள்ளன..! எங்கும் நாம் சிக்கக்கூடிய
இலத்திரனியல் வலையில் மாட்டியுள்ளோம். இதனை இயன்றவரை தவிர்க்க முயற்சித்தாலும் முடியாத
அளவிற்கு சூழல் மாறி வருவது ஆச்சரியமாக இருக்கின்றது.
கோவிலுக்குப்போக நாம் எல்லோரும் வெளிக்கிடும்போது வீட்டைக்காப்பது
எமது CCTV கமெராக்கள் என்றால் தற்போது யாரும் அதனை மறுக்க முடியாது..! அவ்வளவு தேவையாகிவிட்டது.
சில நாட்களுக்கு முன்னர், எமது பகுதியில் மின்தடைப்பட்டு வந்தது. அத்துடன் CCTV இன்
மூச்சு நின்றுவிட்டது..! மருத்துவரை அழைத்தும், அவர் பதிலளிக்கவில்லை. வேறுவழியின்றி,
நான் நினைத்தது போல், கோவில் செல்லவேண்டிய சூழல் வந்தது. ஒருவாறு, நாம் எல்லோரும் சென்றுவந்துவிட்டோம்.
இருந்தாலும் CCTV கமெரா வேலைசெய்யவில்லை என்றால், அதனை வைத்திருப்பதில் பயனில்லை. இன்று, எனது மாணவரான CCTV கமெரா மருத்துவரை அழைத்தேன்..!
அவர் வரும்போதே சொன்னார்..! ”குறைந்தது ரூபா.7000.00
செலவாகும் என்று..!” சரி பரவாயில்லை, வந்து பாரும் என்றேன். UPS இன்
Battery பழுதாகிவிட்டது. புதிய
Battery வாங்க வேண்டும் என்றும், தான் இன்றுவந்து பார்க்கின்றேன் என்றும் சொன்னார்.
இன்று லீவு நாள் என்பதால் நானும், இரண்டாவது மகளும் வீடுகழுவ தொடங்கினோம். அந்தவேலை
முடியாமல் இழுபட்டுக்கொண்டு சென்றது. மதியத்தை நெருங்கும் தருணம் மாணவர் வந்தார். Battery ஐ மாற்றினார். எல்லாம் வேலைசெய்வதை உறுதிப்படுத்தி,
சொன்ன பணத்திற்கு கொஞ்சம் குறைவாக வாங்கிச் சென்றார்..! பரவாயில்லை. CCTV இப்போது வேலைசெய்யத்
தொடங்கியது. என்ன செய்ய..? உலகத்தோடு கொஞ்சமாவது ஒட்டியோட வேண்டியுள்ளதே..!
அவர் சென்றும், எமது வேலை முடிய மாலை 2.00மணி தாண்டிவிட்டது..! ஒருவாறு இன்று எடுத்த லீவைப் பயன்படுத்தி ஒரு சில
முக்கியமான வீட்டுவேலைகளைச் செய்து முடித்தேன்.
ஆ.கெ.கோகிலன்
30-08-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக