சுடுதண்ணீர் கீற்றர்..!
நரம்பு வருத்தம்,
குளியலுக்கு என்னை குளிர் தண்ணீர் தவிர்த்து சுடுதண்ணீருக்கு மாற்றியது..! பொதுவாக
எனக்கு பச்சைத் தண்ணீர் குளியலே பிடிக்கும். வயது போக, பிடித்தாலும் செய்யமுடியாத சூழல்
வாய்ப்பது வழமை தான். எனக்கும் அவ்வாறே நிகழ்ந்தது..! இப்ப இருக்கும் இலத்திரனியல் பொருட்களின் ஆயுட்காலம்
என்பது ஒன்று இரண்டு வருடங்கள் தான். அதற்கு ஒப்பாகப் போன வருடமே குளியலறைச் சுடுதண்ணீர் கீற்றர்
பழுதாகிவிட்டது. சிறு பிழை தான் என்று புரிகின்றது.
ஆனால் அதனை திருத்த சரியான ஆள் கிடைக்கவில்லை. ஒருவருடத்திற்கு மேலாக பயன்படுத்த முடியாமல்
தவித்தேன். பின்னர் நிரந்தரப் பச்சைத்தண்ணீர் குளியலே தஞ்சம் எனவந்துவிட்டேன். நோயும் சிறிது சிறிதாக எனது கட்டுப்பாட்டுக்குள்
வந்துகொண்டிருக்கின்றது.
இந்தநிலையில் எனது அலுவலக ஊழியர் ஒருவர் “எனது வீட்டுக்கு முன்பாகவே ஒருவர் இருக்கின்றார்,
அவரிடம் கேட்டுப்பாருங்கள், அவர் அதனைத் திருத்தக்கூடியவர் ”என்று சொல்லித்தூண்டினார்.
அதற்கேற்ப, அவரைத்தொடர்பு கொண்டு, திருத்தக்கேட்க சில நாட்களில் ரூபா.1400 உடன் இயங்கப்பண்ணியுள்ளார்.
பொருளாதார சிக்கலில் பொருட்களின் விலைகள் அதிகமாகியுள்ள இந்தக்காலத்தில் இவ்வாறான வழியில்
செயற்பட்டே செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
எல்லாம் புதிதாக வாங்க வேண்டும் என்றால் இந்தக்காலச்சூழல் அதற்கு உதவாது என்பது பொதுவான மக்களின் கருத்து.
பொதுவாக இது இனிச்சரிவராது என்ற நினைப்பில் இருக்கச் சரிவந்தது
ஒரு ஆச்சரியமான விடயமே..! தேடி அலைந்தபோதும் ஆள் கிடைக்கவில்லை. வேண்டாம் என்று இருக்க
வலியே சரிவந்துள்ளது..!
வாழ்க்கையே இப்படித்தான்..! சாப்பிட ஆசையிருந்தால் உணவு இருக்காது.
உணவு இருந்தால், சாப்பிட ஆசையிருக்காது..! அவ்வளவு தான்.
ஆ.கெ.கோகிலன்
09-09-2023
கருத்துகள்
கருத்துரையிடுக