பாயும் ஒளி நீ எனக்கு..!

 


 

பாரதியின் வரியை எடுத்து வைத்துக்கொண்டு, காதலையும், கடும் கோபத்தையும் வெளிப்படுத்தும், ஒளிகுறையும் போது குருடாகும் ஒருவனின் பழிவாங்கும் கதை தான் இந்தப்படத்தில் இருக்கின்றது.

இருந்தாலும் படம் போரடிக்காமல் செல்வதாக எனக்குப்பட்டது. பொதுவாக எனக்கு நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் மிகவும் பிடிக்கும். ஓவர் அக்சன்  (Over Action) என்று பலர் சொன்னாலும் அவரது படம் என்றால் எப்படியும் பார்த்து இருப்பேன். இல்லை என்றால் பார்ப்பேன். இந்தியாவில் இருந்த காலத்தில் அவரது படங்களைத் தேடி அலைந்து பார்த்து ரசித்த அனுபவம் இன்றுவரை மனதில் ஒரு மகிழ்வான தருணமாகப் பதிந்துள்ளது. அவருக்குப் பிறகு, அவரது மகன் பிரபுவின் படங்களும் பிடிக்கும்.  பிரபு நாயகனாக நடித்த எல்லாப்படங்களும் பார்த்துள்ளேன். தற்போது, அவரது மகன் விக்ரம் பிரபுவின் படங்களும் பிடிக்கும். இவருடைய அனைத்துப் படங்களும் பார்த்துள்ளேன். அந்த வகையில் இன்று இந்தப்படத்தைப் பார்த்தேன்.  படம் திரில்லாகவும், ஒரு காதல் கவிதை போன்றும் சென்றது. கடைசியில், வில்லனையும், அவனது கூட்டத்தையும் பொறிவைத்துப் பிடித்தது பழைய பல படங்களை நினைவிற்கு கொண்டுவந்தது. ஒரு மனிதனுக்கு, குறைபாடு இருக்கும் போது தான் மூளை இன்னும் நன்றாக வேலைசெய்யும். பார்வைக்குறைபாடு உள்ளவன், புத்தியைப் பயன்படுத்தி வென்றது வழமையான முடிவு என்பதால் பெரிய ஒரு திருப்தியை கொடுக்கவில்லை.

வாணிபோஜன் நாயகியாக நடித்துள்ளார். நாயகனுக்கு உதவும் வேலை அவருக்கு..!  அவர் தொடர்பான இன்னும் சில காட்சிகளை வைத்து, படத்திற்கு வலுச் சேர்த்திருக்கலாம்.  “டாலி” என்று சொல்லப்படும் கன்னட நாயகன் தனஞ்ஜெயா வில்லனாக நடித்துள்ளார். அவர், இறுதிக்காட்சியில் பொறியில் மட்டும்போது பாவமாக இருந்தது..! இன்னும் அந்தப் பாத்திரத்தை சிறப்பாகச் செய்து இருக்கலாம்.   வில்லனின் பலம், பெரிதாக இருந்தால் தான், கதாநாயகனை மதிக்க முடியும்.



கார்த்திக் அட்வெயிட் (Karthik Adwait) என்னும் புதியவர் எழுதி இயக்கித் தயாரித்துள்ளார். இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்பது எனது கருத்து.  இசை மற்றும் தொழில்நுட்பங்களும் சராசரியாகவே அமைந்திருந்தன. இன்னும் மெனக்கெடல் இருந்திருக்கலாம். நீண்ட காலத்திற்குப்பிறகு திவ்விய பாரதி நடித்த “நிலா பெண்ணே..” ஆனந்தை ஒரு சித்தப்பா கதாபாத்திரத்தில் பார்க்க கஷ்டமாக இருந்தது..! ஹீரோவாக வரவேண்டியவர் காணாமலே போய், தற்போது குணசித்திர நடிகராக திரும்பியுள்ளார்.

 


ஆ.கெ.கோகிலன்

20-09-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!