சுத்தல்..!

 



இன்று காலை, யாரில் முழித்தேனோ தெரியவில்லை, ஒரே பிரச்சனைகளாக வந்துகொண்டிருக்கின்றன. அலுவலக ஊழியர்களின் எல்லா விதமான பிரச்சனைகளையும் என்னிடம் தெரிவிக்கும்போது, அதற்கு தீர்வை அளிக்கக்கூடிய திறனுடன் நான் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் சில சமயம் நானே பிரச்சனைகளுடன் வருவேன். அங்கும் பிரச்சனைகள் வர இரண்டும் சேர்ந்து பெரும் பிரச்சனைகளாக வர, சூழலே போர்களமாகும். சூழ இருப்பவர்களும் சங்கடப்பட நேரிடும்.

இன்றும் சூழல், என்னைக் கத்தவைத்துவிட்டது. நான் யாரையும் ஏசக்கூடாது என்று நினைத்து, மிக அமைதியாக இருப்பது வழக்கம். அதையும் தாண்டி சில நிகழ்வுகள் என்மேல் பழிகளாக வரும்போது, கோபம் சத்தமாக வெளியேறுகின்றது..! அதனால் தற்போது கூட்டங்களே வைக்க மனம் வருவதில்லை..! யாரையும் ஏமாற்றும் எண்ணத்தில், இந்தத் தொழிலில் இருப்பது ஒருவருக்கும் அழகல்ல. கல்வித் தொழில் என்பது சமூகத்தில் நீதி நியாயங்களை நிலைநிறுத்துவதற்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கல்விக்குரிய மரியாதையும் கிடைக்கும். கல்வியாளர்கள், ஏமாற்றுப் பேர்வழிகளாக, வியாபாரிகள் போல் இருந்தால், எதிர்க்காலம் ஏமாற்றம் மிக்கதாகவே இருக்கமுடியும்.

சிலர், நல்லவர்கள் போல் நல்லெண்ணத்தை ஏற்படுத்த என்னிடம் நடிப்பதும், வெளியில் என்னை ஏமாற்றுவதும், அதுபற்றி எனக்குத் ஒன்றும் தெரியாது என்பது போல் திரிவதும் வேதனையளிக்கின்றது. நம்பிக்கையை ஏற்படுத்த, கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தினால் நிச்சயம் முன்னேற்றம் என்பது இருந்தேயாகவேண்டும். மாறாக நம்பிக்கைத்துரோகம் செய்தால் அவர்களை ஏற்பதும், மன்னிப்பதும் கடினம். அப்படியான மனிதர்களை முன்னுக்குக் கொண்டுவர எந்த தலைவர்களும் முன்வரமாட்டார்கள். பண்பு என்பது பதவிகளுக்கு முக்கியம். அது அரச பதவியாக இருந்தால் என்ன..? தனியார் பதவியாக இருந்தால் என்ன..? பண்பு ஒருவரிடத்தில் இல்லை என்றால் வேறு என்ன சொல்ல..?

நான் பெரிய பண்புடன் இருக்கவில்லை. ஆனால் இந்தத் தொழிலுக்கு வந்தபின்னர், அந்தப் பண்புகளைப் பெறமுயல்கின்றேன். மற்றவர்களையும் முயலச் சொல்கின்றேன். இதனூடாக வெற்றியையும், நிம்மதியான வாழ்வினையும் இலகுவாக அடையலாம் என்பது எனது கணிப்பு.

 

ஆ.கெ.கோகிலன்

15-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!