மாவீரன்..!

 



ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து, இதே பெயரில் ஒருபடம் வெளிவந்தது. அந்நேரம், யாழ்ப்பாணம்  ஒரு போர்க்களமாகவே இருந்தது..! பலாலியில் இருந்து ஆமி, இந்தப்படத்தை அடிக்கடி போடுவார்கள்..!

இந்த மாவீரன் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு சிறந்த, வித்தியசமான முறையில் கதைசொல்லும் படம்.

என்னுடைய வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் படம் நினைவிற்கு கொண்டுவந்தது ஆச்சரியம்.

அரசுக்காக, அமைச்சர் ஒருவர் ஏழைமக்கள் குடியிருக்கும் ஒரு சேரியைக் காலி பண்ணி, அடுக்குமாடிக்கட்டிடம் ஒன்றிற்கு மாற்ற, அந்தக்கட்டிடத்தின் குறைபாடுகளும், அதனைத் தீர்க்க முயலும் கதையின் நாயகனின் நிலையும், அதற்கு உதவும் ஒரு அசரீதிக்குரலும், அதன் ஊடாக எழும் வீரமும், பதிலாக வரும் சிக்கல்களும் படத்தை மிகவும் சுவாரசியமாக மாற்றியுள்ளது..!

சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஸ்கின், சுனில், பாலாஜி சக்திவேல், யோகிபாபு என எல்லோரும் தமது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தினர். ஏனைய தொழில்நுட்பங்களும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ”வண்ணாரப் பேட்டையிலே” எனத்தொடங்கும் பாடல் அருமையாக இருந்தது. இசை சிறப்பு.  விஜய்சேதுபதியின் குரல், படத்திற்கு மேலும் ஒரு பலமாக இருந்தது. பாரத் சங்கரின் இசையும், விது ஐயன்னாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது.

வில்லன்களுக்கு இடையே ஏற்படும் ஒருவித நட்பும், கட்டுப்படுத்தும் இயல்பும் சிறப்பாக இருந்தது. மடோன் அஷ்வினுடைய (Madonne Ashwin) இயக்கமும் எழுத்தும் சிறப்பாக அமைந்ததால், முதல்படமே வெற்றிப்படமாக அவருக்கு அமைந்துள்ளது.

இறுதி முடிவு பற்றிப் படத்தில் பல முறை சொன்னதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும்  சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு அது கவலை அளித்திருப்பதையும் மறுக்க முடியாது.

இருந்தாலும் இயக்குனர், தனது படத்தின் வெற்றிபற்றிய கவலையால், முடிவை மாற்றி, எழுத்தோட்டத்திற்கு, இடைவேளை வைத்து, அதற்கு அப்பால், இன்னொரு முடிவையும் வைத்து, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் மனங்களை குளிர்வித்துள்ளார். ஆம். சிவகார்த்திகேயன் உயிர் பிழைத்துள்ளார்..!

 


ஆ.கெ.கோகிலன்

30-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!