அமெரிக்கன் கோனர்..!

 



 பல நாட்களுக்கு முன்னரே எமது நிறுவனத்தில் படித்த பழைய மாணவி ஒருவர், எமது தற்போதைய மாணவர்களுக்கான ஒரு செயலமர்வுக்கு அனுமதி கேட்டார். அதனைத் துறைத்தலைவரிடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்யச்சொன்னேன். கால ஓட்டம், விரைவாக அந்த நாளைக்கொண்டுவந்தது..! திட்டமிடல்களில் சிறு குழப்பங்கள் இருந்தாலும், நாட்டுநிலமைகளையும், பொருளாதார நிலைமைகளையும், திருவிழாக்காலங்களையும் காரணம் காட்டி, இயன்றளவு சங்கடங்கள் இல்லாமல் செயலமர்வை நடாத்தி முடித்தோம்..!

செயலமர்வுக்கு முன்னர் என்னை சந்திக்க, அரை மணித்தியால நேரம் ஒதுக்கித்தர முதலே அனுமதி கேட்டார்கள். நானும் கொடுத்தேன். சரியாக நானும், அவர்களும் குறித்த நேரத்தில் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.  வந்தவர்கள் எல்லோரும் அமெரிக்கா நாட்டுத் தூதரகத்துடன் தொடர்புபட்டவர்கள்.  எமக்கும், எமது மாணவர்களுக்கும் இலவசமாக கருத்தரங்குகள் செய்ய விரும்பியவர்கள். இருந்தாலும், அவர்கள் எமக்குச் செய்வது நன்மை செய்வது போன்ற ஒரு தீமை என்பதை எத்தனைபேர்கள் புரிவார்களோ தெரியாது. பல இலவசங்களுக்குப் பின்னால், பல வணிகங்களும், வஞ்சகங்களும், வாழ்க்கை அழிப்புக்களும் இருப்பது எனக்குத் தெரியாமல் அல்ல. ஆனால் அதனைக்கதைப்பதால் பெரிய பலன் ஒன்றும் தற்போது கிடையாது. நாடே அவர்களில் கையில் மாட்டி நசுங்கும்போது, நான் மட்டும் எப்படியாவது வெளியேறி என்ன செய்வது..?  வந்த அமெரிக்கப் பெண்மணியிடம், சேவைகளுக்கு நன்றி சொல்லி, உங்களைப் போன்றவர்கள் அமெரிக்க அரசிடம் உக்ரேன்- ரஷ்யா யுத்தத்திற்கு உதவுவதை நிறுத்த அழுத்தம் கொடுக்கவேண்டும் எனச்சொன்னேன். என்னை எடுத்ததும் ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, அவரும் உண்மையை புரிந்துகொண்டது போல் தலையசைத்தார்.  எனக்கும் தெரியும் அவரால் மாத்திரம் நடந்துமுடிந்துவிடக்கூடிய காரியமல்ல அது..! அனைவரையும் அழிக்கக் காத்திருக்கும் அணுகுண்டு போன்றதே இந்தப்போர்..! அவர்களுடன் வந்த இன்னோரு நபரும் அந்தக்கருத்திற்கு உடன்பட்டுத் தலையசைத்தார்..! பின்னர், அவர்கள் தாம் செய்யும்  சேவைகள் பற்றிச்சொல்ல, துறைத்தலைவரும் உள்ளே வர ஒருவாறு உலக அரசியலைவிட்டு வெளியேவந்தேன்.  அதன் பின்னர் அவர்கள் வந்த நோக்கம் நிறைவேற வழியைத் திறந்துவிட்டேன்.

 

ஆ.கெ.கோகிலன்

13-09-2023.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!