இயற்கை தந்த வலி..!
இறைவன் சிலருக்கு உயர் பதவிகளைக் கொடுப்பது அவர்களது திறமைகளைக்
காட்டிலும், சமூகம், மக்கள், நாடு, மற்றும் உலகம் தொடர்பான ஒரு நியாயமான பார்வை அவர்களுக்கு
இருப்பதே என்பது எனது எண்ணம். அந்த வகையில் தான் நானும் தற்போதுள்ள பதவிக்கு வந்துள்ளேன்.
பணம் சம்பாதிப்பதோ அல்லது சில அதிகார வலுவுள்ள மக்களின் நட்பைப் பேணுவதோ எனது நோக்கம்
கிடையாது. நான் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. என்னால் இயன்றவரை யாருக்கும் தீங்கு
செய்யாமலும், யாராவது தீங்கு செய்தால், இலாவகமாக அதில் இருந்து தப்பித்து, எனது வாழ்க்கைப்பயணத்தை
தொடரவே விரும்புவேன். யாருக்கும் பழிப்பழி செய்ய எனக்கு விருப்பமில்லை. அந்த வழியில்
செல்பவர்களுக்குத் தெரியும் அதற்கு முடிவே இல்லை என்பது..!
ஆதலால், இயற்கையைப் பாதிக்காக, இறைவனுக்கு பிடித்த மாதிரி வாழ்வதே எனது விரும்பம். நேற்று இயற்கையைப் பாதுகாக்க, குறிப்பாக கடும் வறட்சியால் வாடியுள்ள தாவரங்களுக்கு நீர் விட்டுக்கொண்டிருக்க, பல தேனிகளோ அல்லது குளவிகளோ தெரியாது, கண்பார்வை குறைவு, கடித்துவலியை ஏற்படுத்தின..! கை, இடுப்பு, முதுகில் தடம் பதித்தன. கண்ணாடி அணியாததால், அவை என்ன மாதிரியான பூச்சிகள் என்பதைத் தெளிவாகக் காணமுடியவில்லை. மனைவி சொன்னார் ”அவை தேனிக்களாகத்தான் இருக்க வேண்டும் என்று..! ஏனெனில் அருகில் தேனிக்கூடு இருப்பதாக..!”
இரவு கை நன்றாக வீங்கி என்னால் படுக்க முடியாத அளவிற்கு வலி
இருந்தது. அந்த நேரம் மனம் என்னை நோக்கி ஒரு கேள்வி கேட்டது..! ” அது, எமது ஊழியர்களுக்கு
ஏதாவது, மாணவர் சேர்ப்பில் சலுகைசெய்ய விதியிருக்கா என்பது தான்..?” கீழேயிருந்தும்,
மேலேயிருந்தும் இது தொடர்பாக அழுத்தம் அதிகமாக இருந்தது. நான் சரியான முறையையே பின்பற்றுகின்றேன்
என்ற மனவுறுதியுடன் நான் இருக்க, சிலர் நீங்கள்
செய்யலாம் என்று என்னை, ஒரு வித சங்கடத்தில் தள்ளினார்கள்..! எல்லோருக்கும் சம நீதி
என்ற கொள்கையிலே தான் நான் அதிகம் பற்றுக்கொண்டவன். ஆனால், அவர்கள் கேட்பதைச் செய்தால்
கொள்கையை மீறியதற்குச் சமமாகப்பட்டது. அதனால் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.
இது தொடர்பாக பலருக்கு வருத்தம் இருக்கலாம். அந்த வருத்தம், இவ்வாறாக வந்த வலியாக எனக்கு
பல மணிநேரம் இருக்கின்றது. நான் தவறுசெய்யவில்லை. ஆனால் செய்யச்சொல்வதும் நீதியானது
அல்ல. ஆனால் அதனைச் செய்ய ஒரு வழியுண்டு. அது
என்னுடன் சம்பந்தப்பட்டது அல்ல..! புரியவைக்க முயன்றேன். புரிந்தார்களோ தெரியவில்லை. உறவினர் என்றாலும்,
ஏன் பெற்ற குழந்தை என்றாலும், அவர்களுக்காக நீதி தவறினால், தெய்வம் தண்டிக்கும் என்ற
ஒருவித பயமும், இயற்கைக்கு அது ஒரு துரோகம் என்ற நினைப்பும், எனக்கு எப்போதும் உண்டு.
வலியைச் சுமந்தாலும், இயற்கையினதும், இறைவனினதும் ஆசியை வேண்டவே
மனம் உறுதிபூண்டுள்ளது என்பது மட்டும் நிச்சயம்..!
ஆ.கெ.கோகிலன்
07-09-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக