கல்வி வழிகாட்டி..!

 



யாழ் கச்சேரியால் ஒழுங்கு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டிக்கருத்தரங்கு ஒன்று இன்று வேலணையில் உள்ள மத்திய கல்லூரியில்  ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. நாட்டின் தற்போதைய சிக்கலான சூழலால் பலர் நாட்டைவிட்டு ஓடுவதால் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது..! அதுமாத்திரமன்றி, ஏனைய கல்வி நிறுவனங்களும் அவர்களது வழமையான எல்லைகள் தாண்டி, கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், பல கற்கைநெறிகளுக்குரிய கேள்வி குறைந்துள்ளது. மாணவர்கள் உயர் டிப்ளோமாக் கல்விகளைப் படிப்பதைவிட, நேரடியாக பட்டப்படிப்பை வழங்க பல நிறுவனங்கள் காசுக்குத் தயாராக உள்ளன. இப்படியான காரணங்கள் அரசின் இலவசத்திட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளன.  காசு கொடுத்துப் படித்தால் தான், நல்ல படிப்பு என்ற எண்ணம் மக்களிடம் வலுக்கின்றது..! இலவசத்திட்டங்களிலும் தரத்தைப் பற்றிக்கவலைப்படாமல், கடமைக்குச் செய்தால் போதும் என்ற மனநிலையில், அரச உயர் அமைப்புக்கள் இவற்றைக் கருதுவதால் இந்தநிலை வந்துள்ளது.



இதைத்தவிர, கருத்தரங்குக்கு வந்த மாணவர்களில் பலருக்கு இப்போது படிப்பதைவிட நேரடியாக வேலைக்குச் சென்றால், இன்னும் சிறப்பாக வாழமுடியும் என்ற எண்ணம் வலுவுன்றி வருகின்றது..! நாம் சென்ற இடத்தில் மீன்பிடி தொழில் மற்றும் விவசாயம் மூலம் அரச உத்தியோகங்களைவிட அதிகம் சாம்பாதிக்க முடிகின்றது. பிறகு என்ன செய்ய..?

எமது நிறுவனத்தில் இருந்து, நான்கு பேர், எமது வாகனத்தில் சென்று, மூன்று குழுவாகக் கருத்தரங்கை நடாத்தி எமது தொழில் வழிகாட்டலையும், எமது நிறுவனத்தில் உள்ள கற்கை நெறிகள் பற்றியும், வசதி வாய்ப்புகள் பற்றியும் தெரிவித்தோம்.

எம்மைப்போன்ற மேலும் சில கல்வி நிறுவனங்களும் வந்து, வழிகாட்டலை வழங்கினார்கள்.

மதியத்திற்கு இடையில், வழிகாட்டலைச் செய்து நிறுவனத்திற்கு திரும்பி இருந்தோம். நான் பணிப்பாளராக வந்தபின்னர் சென்ற முதல் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டல் செயலமர்வு இது தான்..!  எனக்கும் பிள்ளைகளுடன்  கதைத்தது மகிழ்வாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.

 


ஆ.கெ.கோகிலன்

19-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!