இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரிக்கர் (Trigger)..!

படம்
  இது ஒரு   ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ்படம். படம் பார்க்கும் போது, அவ்வளவு பிரபலமான படமாக அறிந்திருக்கவில்லை. இருந்தாலும் படம் பார்க்க விறுப்பாக இருந்தது. படத்தின் கதை என்று பார்த்தால் அநாதைவிடுதிகளில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதாக கூறும் பெற்றோர், அக்குழந்தைகளை மேலும் நிறையப்பணத்திற்கு விற்றுவிடுகின்றார்கள்..! அதுமாத்திரமனறி, அவ்வாறு செய்யாவிட்டால் உயிருக்கே அச்சுறுத்தல் என்பதால் பெரிய ரவுடிக்கும்பலுக்குப் பயந்து, இவ்வாறு நடக்கின்றார்கள்..! அதேவேளை ஹீரோவின் அப்பாவும் இந்த குற்றச்செயலை அறிந்து, அதனை நிறுத்த முற்பட, அவரது வாழ்க்கையே தலைகீழாகிவிட்டது..!     தலையில் பட்ட அடியால் மறதி வந்து, அவருக்கு என்ன நடக்கின்றதே புரியாமல் திணறுகின்றார்..! சில சமயம், அவரையறியாமல் வீட்டைவிட்டு வெளியேறி ஏதோ ஒர் இடத்திற்குப் போய்விடுவார்..! அந்த இடம் பின்னர் ஹீரோவிற்கு ஒரு   துப்பாக இருக்கின்றது..!   இவ்வாறாக ஹீரோவும், அவரது தந்தையும் சேர்ந்து, ரௌடிக்கும்பலை அழித்து, குழந்தைகளைக் காப்பதாகப் படம் முடிகின்றது. இடையில் தன்யா ரவிச்சந்திரனுடன் காதலும், காப்பாற்...

புதிய நாள்.. மகிழ்வான செய்தி..!

படம்
    இன்று முதல்  அடுத்த ஞாயிறு வரை எமது மாணவர்களுக்கு இடைத்தவணை விடுதலை  (Mid Semester Vacation) விடப்பட்டுள்ளது. ஏற்கனவே படித்து, முடித்தமாணவர்களுக்கு பட்டமளிப்பு (18 th Convocation) இந்த வாரக்கடைசியில் நடைபெற இருக்கின்றது..! ஊழியர்கள் அது தொடர்பான வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்..! ஏனையவர்கள் ஒப்படை, இடைத்தவணைப்பரீட்சை, விடைதாள் திருத்தல், அது தொடர்பான இறுதிப்புள்ளிகளைத் தீர்மானித்தல், போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு எல்லோரும், சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்க, யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்நோய் தொற்றும் அதிகரித்துக்கொண்டு வரும் இந்த சூழலில், எமது ஊழியர்களும் மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்ற வேளை, பருவமழை வரத்தொடங்கியுள்ளது..!   அத்துடன் நேற்று முதல் நவராத்திரிப்பூஜையும் தொடங்கியுள்ளது. நேற்றைய பூஜை எமது நிறுவன நலன்புரிச்சங்கத்தினால் (Jaffna ATI Staff Welfare Society -JATISWS) நடாத்தப்பட்டது. என்னால், ஆசையிருந்தும், தூரம் காரணமாகப் போகமுடியவில்லை.   நேற்றுப்போக முதலில் நினைத்தேன். பின்னர், நேற்றுக்காலை வ...

கண் நோய்..!

படம்
  கடும் வெப்பம் நிலவிய எமது பிரதேசத்தில் தற்போது தான் மழை பெய்கின்றது.   இந்தக்காலகட்டத்தில் பலருக்கு கண் சிவந்தும், அதற்குள் இருந்து, நீர் வழிந்தும், வெள்ளைநிற களி நிரம்பியும்   இருப்பதைப் பார்க்க   எனக்கு மிகக்கடினமாக இருக்கும். இருந்தாலும், சிலர் நோயின் தாக்கம் மற்றும் பரவல் பற்றிய அறிவு இல்லாமல் உலாவுவதையும் ஆட்களுடன் கதைப்பதையும் காணும் போது கவலையாக இருக்கும். அவ்வாறான நபர்கள் எமது அலுவலகத்திலும் இருந்தார்கள்..! சிலருக்கு, பொறுக்க முடியாமல் நானே வாய் திறந்து,   நோயை மாற்றிவிட்டு வாருங்கள் என்று சொல்லியுள்ளேன்..!   சில நேரம், நோய் இருந்தாலும் வேலைக்கு லீவு எடுக்க மனம் இல்லாமல் இருப்பவர்களும் உண்டு..! ஆனாலும், அப்படியான நபர்களின் அதீத அரச வீசுவாசம், சில நாட்களில் அலுவலகத்தையே மூடவைக்கும் என்பது பற்றிய அறிவு இருந்தால், ”எவ்வாறு நடக்க வேண்டும்..?” என்ற தெளிவு கிடைக்கும். இதே நிலமை வீட்டிலும் இருக்கின்றது. எனது மாமியார், அடிக்கடி மருத்துவமனை செய்து உடலைப் பரிசோதிப்பதும், கண்ணைப் பரிசோதிப்பதும் நடந்துவருகின்றது. அதனைக்குறையாகச் சொல்ல முடியாது..! அவரவர்...

மறுபிறப்பு..!

படம்
  நான், சின்ன வயதில் மதித்தும், பார்த்தும், அசைப்பட்ட எனது மாமாவின் மகன்,   எனது திருமணத்திற்குப் பிறகு குறிப்பாக   முதலாவது மகள் பிறந்த சில வருடங்களில் இறந்துவிட்டார்..! அவர் மூன்று மொழிகளிலும் அதிக புலமை வாய்ந்தவர்..! சின்ன வயதிலேயே ஆங்கில அகராதியைக் கரைத்துக்குடித்து, என்ன கேட்டாலும் அதுபற்றிச் சொல்லக்கூடிய அதீத திறமையுடன் இருந்தார்..! அவரது தாயும், தந்தையும் உயர்பதவிகளில் இருப்பதால் அது சாத்தியமானதா..? அல்லது அவருக்கு இறைவனின் கொடையா..? எனக்குத்தெரியாது. அவரது அந்த ஆற்றல் மீது, அதிக பொறாமை, எனக்கு இயல்பாகவே அந்த வயதில் வந்துவிட்டது..! ஆன்மீகக் கதைகளை மூன்று மொழிகளிலும் கூறி என்னைக் கடுப்பேற்றுவார்..! அப்போது என்னால் ஒரு மொழியில் கூட ஒரு கதையை ஒழுங்காகச் சொல்ல முடியாது.   இலங்கையின் தலைநகரிலுள்ள மிகப்பெரிய பாடசாலைகளில் படித்ததால் அது சாத்தியப்பட்டதா..? இல்லை மாமா மற்றும் மாமியின் அக்கறையால் வந்ததா..? இல்லை இயல்பாகவே தன்னை வளர்த்துக்கொண்டாரா என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை..!   இவ்வளவு திறமையான மச்சான், என்னைவிட ஆறு வயது குறைந்தவர்..! கொஞ்சக்க...

கோவில் நாள்..!

படம்
  அண்மைக்காலமாக நான் கோவில் செல்வது குறைந்துவிட்டது..! அதற்கு முதல் காரணம், தமிழர் வரலாறு தொடர்பாகத் தேடும் போது தென்பட்டவைகள்..!   நாமும், சமூகமும் ஏமாற்றப்பட்டதற்கு கோவில் முக்கிய காரணமாக மாற்றப்பட்டுள்ளது என்பது தான்..! இது உண்மையில் ஆதியில் இருந்து வந்ததல்ல..!   இடையில் வந்தவர்களால் வந்தது..!   அதனால் இங்குள்ள மக்களை அடிமைகளாகவும், சிறுபாண்மை மக்கள் மாத்திரம், கடவுளின் தரகர்கள் போலவும் கருதப்பட்டு, வகுக்கப்பட்ட நடைமுறைகள் மக்களிடம் அதிக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, சாதாரண மனிதர்களுடன் பழகத் தடையாக ஏதோ ஒன்று, ஒவ்வொரு மனிதருக்குள்ளும், குறிப்பாக மூளைக்குள் புகுத்தப்பட்டுள்ளது..! தற்போது, கல்வி மற்றும் கலப்புப் புரட்சிகள் ஊடாக   அவை கொஞ்சம் கொஞ்சமாக நொருக்கப்பட்டாலும், இவ்வாறான செயல்களை கோவில்களில் வைத்துச் செய்தது, கடவுளே கோவிலில் இருப்பாரா என்ற ஓர் எண்ணத்தை எனக்குள் ஆழமாக ஏற்படுத்திவிட்டது..! பூஜைகளையும், சடங்குகளையும் பார்க்கும் போது, வியாபார தேவைகளுக்காக உலகம் மாற்றப்பட்டது போல், இங்கும் நடந்துள்ளது என்பதே என் அறிவிற்கு புலப்படுகின்றது..! நிம்மதி தரும்...

ஆதிரா பிறந்த நாள்..!

படம்
    எனக்கு ஒன்றுவிட்ட தம்பிகள் என்று பலர் இருக்கின்றாரகள்..! நிறையப் பேர் கனடாவில் தான் இருக்கின்றார்கள்..! சிலர் மட்டுமே இலங்கையில் இருக்கின்றார்கள். அதில் ஒருவருடைய ஒருவயது மகள் ஆதிரா..! அவளின் பிறந்த நாள் இன்று யாழ் ஜெ.ஹொட்டலில் வெகுவிமர்சையாக நடந்தது. நானும், மனைவியும், இரண்டாவது மகளும், தம்பியும், அவரது மகளும் என ஜந்துபேர் எனது காரிலே போனோம். முதலில் மூத்த மகளையும் கூட்டிச்செல்ல முனைந்தேன். அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை..? வரவில்லை..! தம்பியையும், மகளையும் கூட்டிச்செல்லட்டும் என்று சொல்லாமல், தானே வரவில்லை என்றுவிட்டாள்.   எனக்கும் கவலையாகவே இருந்தது. மூத்தவளை விட்டுச்செல்வது..! நான் கூட்டிச்செல்லவில்லை என்றால், தம்பியும், மகளும் வரவே வாய்ப்பில்லை. தம்பியின் பிள்ளைகள் வளர்ந்து வருவதால், சில சமயம் பெரியப்பா முன்பு போல் எங்கள் எல்லோரையும் காரில் கூட்டிப்போகவில்லை என்ற கவலையை அடிக்கடி வெளிப்படுத்துவதை அவதானித்து இருக்கின்றேன். அவர்களின் சூழலில் அது தற்போது முடியாமல் இருக்கின்றது.   என்னால் அவர்களின் எதிர்பார்ப்பை முற்றாகப் போக்க முடியவில்லை. முன்பு எ...

பேசும் இயற்கை..!

படம்
    பல நாட்களாக எனது சுவாமிப்படங்களுக்கு ஒரே மாதிரியான பூக்களே கிடைக்கின்றன..!   ஏன்..? எனத்தொடர்ந்து அவதானிக்கும்போது ஒரு விடயம் புரிந்தது. இப்போது  நடக்கும் வாழ்க்கையும் ஒரே மாதிரியாகவே போய்கொண்டிருக்கின்றது..! இனிப்பும் இல்லை..! உறைப்பும் இல்லை..! இன்று அலுவலகம் போகும் போதும், சலிப்புடனே சென்றேன். நான் எவ்வளவோ நல்லதை, நிறுவனத்திற்குச் செய்யலாம் என்றால், எல்லாம் மாறித்தலைகீழாகவே நடக்கின்றது.   இன்று, பயிற்சிப் பயிலுனர்களின் சேவையை நீடிக்கும் கடிதத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அலுவகலம் வந்தால் போன், இன்ரெநெட் ஒன்றும் வேலைசெய்யவில்லை. ரெலிக்கோம் தலைமையகத்திற்கும், யாழ் முகாமையாளரான தம்பி முறையான ஒருவருக்கும் சொன்னேன். சிறிது நேரத்திற்குள் வந்தார்கள்..! பிரச்சனை தீரவில்லை. பின்னர் 11.00 மணிக்கு சிரேஷ்ட முகாமையாளர் கூட்டம் ஜூம்செயலி மூலம் நடந்தது. அதில் என்னால் சரியாக இணைந்து கேட்கவும், எனது நிலையைக்கூறவும் முடியவில்லை. இன்றைக்கு என்று, பார்த்து, டிஜி என்னைக்கேட்டுள்ளார். ஆனால், இணையப்பிரச்சனையால் தெளிவாகப் பதில்சொல்ல முடியவில்லை. அட்மின் அறையிலுள்ள ...

தசரா..!

படம்
  தசராப் பண்டிகை வடஇந்தியாவில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அவர்களை பொறுத்தவரை இராவணனை அரக்கனாகவும், கெட்டவனாகவும், அவனை அழிப்பது அவர்களுக்கு மகிழ்வைத் தருவதாகவும் நீண்டகாலமாக  அவர்கள் தலைக்குள் புகுத்தப்பட்டுள்ளது..! இராவணனை அவர்கள் கெட்டவன் என்று சொன்னாலும்,   சிவபக்தன் என்றும், இசை வல்லுனன் என்றும்  மகாவீரன் என்றும்  சைவர்களால் கருதப்படுவதும் உண்டு..! இந்தப்படத்தைப்பொறுத்தவரை, நண்பனின் காதலை உணர்ந்த நண்பன், தன்னுடைய காதலை தியாகம் பண்ண நினைப்பதும், இதனை ஒரு கட்டத்தில் நண்பன் அறிந்து, சங்கடப்பட்டு, பின்னர் சாவதும், அதற்கு ஒரு கொடூரனின்   காமம் தான், காரணம் என்பதை அறிந்த நண்பன், அவனை அழிப்பதும், விதவைக்கு வாழ்வு கொடுப்பதுடன், தனது ஒருதலைக்காதலுக்கு முடிவு கொடுப்பதாகவும் கதை இருக்கின்றது. ஆனால் சொல்லப்பட்ட விதம் புதுமையாகவும், பல காட்சிகள் இரவிலே எடுக்கப்பட்டதாகவும், “சிலுக்கு” என்ற பழைய கவர்ச்சி நடிகை பெயரில் பார் நடத்துவதும், அதனூடாக மக்கள் பாதிப்படைவதும், நிலக்கரி அகழும் இடத்தில் காட்சிகள் வைத்ததும், அனைவரும் கரிபடிந்த தோற்றத்தில...

தாயின் மனநிலை..!

படம்
    ஒரு குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் என மிகச்சந்தோசமாக இருந்தார்கள். தந்தையார் எல்லா விடயத்தையும் தாயிடமே விட்டுவிட்டார்..! தாய் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும் உதவியாக இருப்பதே, அவரின் கடமையாக இருக்கின்றது..! அதே நேரம் பிள்ளைகளையும், தத்தமது கால்களில் நிற்பதற்கு, எப்பவுமே தன்னம்பிக்கையான சம்பவங்களையும், கதைகளையும் சொல்லி, அவர்களின் மனங்களை திடப்படுத்துவார்..! இருவரின் இவ்வாறான கவனிப்பால் பிள்ளைகள் நன்றாக வளர்ந்தார்கள். நல்ல பதவி நிலைக்கும் வந்தார்கள்..! அதற்கு ஏற்ப தங்களுக்குரிய வாழ்க்கையையும், அதற்கேற்ற துணையையும் தெரிய முயன்றார்கள்..! தந்தை அதற்குப் பெரும் உறுதுணையாகவே இருந்தார்..! தாயாரும் உறுதுணையாக இருப்பது போல் தான் இருந்தார்..! இருபெண்களும் தமக்குப்பிடித்த வாழ்க்கைத்துணையுடன் வீட்டிற்கு வந்தார்கள். தந்தையார் அவர்களைப் பாராட்டி, அந்த மருமக்களுடனும் அன்பாகப் பழகினார்..! முயன்றும், தாயாரால் அவர்களுடன் அன்பாகப் பழக முடியவில்லை. சிறுவயதில் இருந்தே, தனது கணவரை விட பிள்ளைகளே தன்கூட இருப்பார்கள் என்று நினைத்தவர், தற்போது பிள்ளைகள் தங்கள் வழ...

மற்றவர்களின் விருப்பம்..!

படம்
    சிறுவயதில் இருந்து எனது இயல்புகள் வித்தியாசமானவை.   பொதுவாக எல்லாக்கலைகளையும், பார்த்து அதைப்போல் செய்வது எனக்குப் பிடிக்கும்..!   எனக்கு சமைக்க, தைக்க, மற்றும் பூமாலை கோர்க்க எனப்பல பெண்களின் வேலை தெரியும். பெண்கள் பாடசாலையில் படித்ததால், வந்த இயல்பா   என்று தெரியவில்லை.   இன்றுவரை தொடர்கின்றது.   பெண்கள் பாடசாலையில் ஆண்கள் நீண்ட காலம் படிக்க முடியாது. என்னையும் மூன்றாம் வகுப்பிற்குப் பின்னர் அனுமதிக்கவில்லை.   அதன் பிறகு கலவன் பாடசாலைகளிலே இறுதிவரை படித்துள்ளேன். அது ஒரு நடுநிலையான மனநிலையைச் சின்ன வயதிலே தந்துவிட்டது. நான் ஆண், பெண் இருவரையும் சமநிலையில் வைத்துப் பார்ப்பதே வழக்கம். அது தான் எனக்கு, பெண் பிள்ளைகள் கிடைக்கவும் காரணமாக அமைந்திருக்கலாம். இயற்கையின் விருப்பமாகவும் இருக்கலாம். எனது உயர்ந்த, அகண்ட, கருமையான தேகம் பொதுவாகப் பலரைப் பயப்படுத்தும். சின்னவயதில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, தேவையற்ற விடயங்களிலும் ஈடுபட்டுள்ளேன். காலம் தந்த பாடம், பின்னர் எல்லாம்   மாறிவிட்டது..!   எல்லோரும் விரும்பக்கூடிய வகையில் தவறுகள...

உயிர்தப்பிய ஆடு..!

படம்
  இன்று ஞாயிறு..! பல செத்தவீடுகளுக்குப் போய்வந்து, குளித்து, உண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கையில், ஏதேதோ குரல்கள் கேட்டன..! இடையிடையே ஆடு கத்தும் குரலும் கேட்டது. தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்துக்கொண்டு கேட்கையில், பக்கத்துவீட்டு பெண்பிள்ளை எனது பெயரைச்சொல்லி மாமா   ஒருக்கா வாருங்கள்..! “ஆட்டுக்குட்டி கிணத்திற்குள் விழுந்துவிட்டது..!” என்றார்.   நானும், சாரத்துடன் இருந்ததால், உடனே ஜம்பருக்குள் மாறிக்கொண்டு ஓடினேன். ஏற்கனவே காலில் பிரச்சனைகள் இருக்கின்றன. ஓடும் போது செருப்புக்கள் கழரத்தொடங்கிவிட்டன. ஒருவாறு சமாளித்து, ஓடிச்சென்று கினத்தைப் பார்த்தேன். ஆடு அலறியபடி இருந்தது. வேறு பலரும் வந்திருந்தார்கள்..!   என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முயன்றேன். முன்பு பல முறை கிணற்றிற்குள் இறங்கி, சுத்தப்படுத்தியுள்ளேன்.   இருமுறை இறங்கி, சுத்தப்படுத்திவிட்டு, பின்னர் ஏறும்போது, சக்தியற்று, ஏறமுடியாமல் திணறி, வெளியாட்களின் உதவியுடன் ஏறிய வரலாறும் உண்டு. ஏன் எனது தற்போதைய வீட்டுக்கிணற்றில், இறங்கி அதனைக்கழுவிவிட்டு, ஏறமுடியாமல் தவிக்க, மனைவியின் தாயும், தந்தையும் ...

கறுவாக் கண்டு (Cinnamon Plant)..!

படம்
    நாட்டின் காலநிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன..! சில பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன..!  இன்னும் சில பகுதிகளை வெயில் வாட்டுகின்றது..! பொதுவாக சூழல் தொடர்பான ஆய்வாளர்கள் வலியுறுத்துவது ”மரங்களை நட்டு, சூழலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதைத் தான்..” நாமும் மரங்களை வளர்ப்போம், வீட்டையும் நாட்டையும் காப்போம். இயற்கை பற்றிய உண்மையான புரிதல் இல்லாமல், சில உயிர்கள் வாழப் பல உயிர்கள் பலியாவது, மிகவும் வேதனைமிக்கது..! பல நாடுகள், இதனை நன்கு புரிந்துகொண்டிருந்தும், யுத்தத்தில் இறங்குவது வரும்காலம் என்பது தொடர்பாகப் பயம் வருகின்றது. யுத்தங்களால் என்றும் முடிவு வராது. பழிவாங்கல், என்பது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் தொடரும். எனவே, பயனற்ற யுத்தங்களைச் செய்வதைக்காட்டிலும், தோற்றுப்போயாவது உலக மக்களை நிம்மதியாக வாழ வைப்பது, பெரும் பயனை உலகிற்கு வழங்கும். இவ்வாறு உலகச்சூழல் இருக்க, இன்று நான் லீவு எடுத்துக்கொண்டு, எமது உறவினர் ஒருவர் மரணமடைந்து, அவரது 31வது நாள் நிகழ்வில் கலந்துகொண்டு, கல்வெட்டிலுள்ள மரணமானவரின் வரலாற்றையும், நன்றி நவிலலையும் வாசித்ததுடன் மதிய உண...

மரண ஓட்டம்..!

படம்
  ஒரு அம்புலன்ஸ் அலறியடித்துக்கொண்டு வைத்தியசாலை நோக்கி ஓடியது..! அதற்குள் ஒருவர் மரணத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்தார்..! அருகிலுள்ள மருத்துவ ஊழியர்கள் அவருக்கு குளுக்கோஸ் மற்றும் சேலைன் (saline) ஏற்றிக்கொண்டிருந்தார்கள்..! அவருக்கு என்ன நடந்தது தெரியுமா..? மரணத்தை நெருங்குபவரும் ஒரு அம்புலன்ஸ் சாரதி..!   இன்னொரு மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உயிரைக் காக்க, தன்னுடைய உயிரைப்பற்றிக்கவலைப்   படாமல் அதிவேகத்தில் வைத்தியசாலை நோக்கிச் செல்லும்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால், படுகாயமடைந்து, தற்போது மரண தேவனிடம் செல்கின்றார்..! ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர்,   ஒரு அழைப்பு, “குறித்த ரெயில்வே கேட்டிற்கு உடனடியாக வரவும்” என வந்தது..! அதிவேகத்தில் ஓடிவந்த ரெயின் இடித்ததில், அதிவேகமாக கேட்டைக்கடக்க முயற்சித்த சுகாதார ஊழியர் தூக்கியெறியப்பட்டார். அவர், ஒரு அவசர மருத்துவ சேவைக்காக விரைந்து வைத்தியசாலைக்கு செல்லும்போது, விதிமுறைகளைக்கவனிக்காமல், சேவையை மாத்திரம் மனத்தில் வைத்து ஓடியதால், வந்த நிலை தான் இந்த எதிர்பாராத விபத்து..! இரத்த வெள்ளத்தில் இருந்தவரை, த...

மரண பீதி..!

படம்
  நேற்று ஈஸ்ரேலிற்கும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்குமான உக்கிரமான போர் தொடங்கி, உலகெங்கும் பீதியை கிளப்பி வருகின்றது. இரு பகுதிகளிலும் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன..! இன்னும் உக்கிரமாகப் போர் நடைபெறுவதால் உண்மையான இறப்பு எண்ணிக்கைகளைக் கூறுவது கடினம். இது இவ்வாறு இருக்க, உக்கிரேன்-ரஷ்யா யுத்தமும் நீண்டுகொண்டே செல்கின்றது..! மேற்குலக நாடுகள் மறைமுகமாக உக்கிரேனுக்கு உதவி செய்வதாகக் கூறி ரஷ்யாவுடன் சண்டை   போடுகின்றது. ரஷ்யாவிற்கும் இது புரிந்து தான் இருக்கின்றது..! இந்தியாவும், மேற்குலக நாடுகளுக்கு ஆதரவாக செயற்படுவதால், நிச்சயம் சீனா எதிரான நிலைப்பாட்டை   தான் எடுக்கும். உலகில்   பெரும்பாலான கிறிஸ்தவ நாடுகளும், யுத நாடுகளும் ஒரு பக்கம் வர, மீதமுள்ள முஸ்லீம் நாடுகள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ ரஷ்யா மற்றும் சீனாவுடன் கூட்டுச்சேரவேண்டிய சூழல் தோன்றுகின்றது..! இதனால் 3வது உலகப்போர் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..! இப்படியாக உலக அரசியல் சூழல் யுத்தமேகங்களால் மூடியிருக்க,   அண்மையில்   எமது உறவுகள்   மூன்று பேர் இறந்துவிட்டார்கள்..! அவர்கள் மூவரையும...

எலிடோன் பால் மா..!

படம்
    இந்தப் பெயரே புதுமையாக இருக்கின்றது..!  எனது தாயார் வீட்டிற்கு முன்னாலுள்ள ஒரு அக்காவை நான் “எலியக்கா“ என்றே அழைப்பதுண்டு..! நேற்றுவரை ஏன்..? அவ்வாறு அவரை அழைக்கின்றீர்கள் என  யாரும் கேட்கவில்லை. நானும் அறியவில்லை..! சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலவே நாம் வளர்ந்துள்ளோம்..! உறவும், ஊரும், நட்பும் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கின்றோம். சிலரே, மிகவும் விழிப்பாக ஒவ்வொரு விடயத்தையும் அலசி ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துவார்கள். நான் இது நாள் வரை பெற்றோர் சொல்லித்தந்ததைக் கேள்வி கேட்கவில்லை. ஆனால் இன்று அப்படியான ஒரு சூழல் வந்தது..! எனது   புதிய வீட்டிற்கு கம்பி வேலைகளைத் தலைமையேற்றுச் செய்த எனது உறவினர் ஒருவர் இறந்து, இன்று ஒருவருடம் முடிந்து, அவருடைய ஆண்டுத்திவசம் வந்தது. என்னை அழைத்திருந்தார்கள்.   ஊரையும், உறவையும் மதித்துச் சென்றேன். நகரின் முக்கிய தலைகள் சிலவற்றையும்   அங்கே கண்டு கதைத்தேன். என்னைவிடச்சின்னவர்களான அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினேன். அது மாத்திரமன்றி, என்னால் ஊருக்குப் பெருமை என்று ஒருவர் சொல்ல, மனதிற்குள் ஒரு இனம்புரியாத ச...

இணைய உதவிக்கூட்டம்..!

படம்
  கொரோனா வந்ததும்  முழு உலகமும் முடங்கியது..! தகவல் தொழில்நுட்பத்துறை இதனை சரியான முறையில் பயன்படுத்தி புதிய வாழ்வியல் முறையைக் கண்டுபிடித்தது..! அதுவரை அலுவலம் சென்று வந்தவர்கள், வீட்டிலிருந்தே வேலைசெய்யும் வாய்ப்பும் வந்தது..!  இலங்கையில் கூட பல நிறுவனங்கள் இந்த முறைக்கு மாறினார்கள்..! நாமும் மாறினோம்..! மாணவர்கள் வீடுகளில் இருந்தே படித்தார்கள்..! இப்படியான தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்காக, பெரும்தொகைப் பணத்தை, செயலி தயாரிக்கும் மென்பொருள் நிறுவனங்கள் கோரின..!   இது மாத்திரமன்றி, கொரோனாவிற்கான மருந்துகள், சிகிச்சைகள் எனவும் பெரும்தொகைப்பணத்தை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கோரின..! கொஞ்ச நாட்களில் உலகின் பொருளாதாரங்களில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் வந்துவிட்டன..! பல நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ந்து இன்றுவரை தவித்துவருகின்றன..! அந்தவகையில் எமது நாடும் மாட்டிக்கொண்டது..! தற்போது   கொரோனாக் காலம் கடந்தாலும், பொருளாதாரச்சிக்கல் தொடர்கின்றது. மக்களின் வாழ்க்கைத்தரம் கீழ் இறங்கியுள்ளது. கொரோனாவிற்கு முன்னுள்ள சூழலுக்குப் போவது கடினமாகவே இருக்கின்றது. சில நிறுவனங்கள...

மிரள்..!

படம்
  பரத் மற்றும் வாணிபோஜன் நாயகன் நாயகியாக நடித்த இந்தப்படத்தின் கதை, கூட அண்ணன் போன்று பழகும் ஒருவன், தனது தங்கை போன்றவளின் அழகில் மயங்கி, அவளைப்பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றான்..! இதனால் ஏற்படும் மனக்குழப்பத்தால் தவிக்கின்றாள். முதலில் கணவனால் அந்தப் பிரச்சனையைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பும் போது, அவனுக்கு உண்மை புரிகின்றது..! மனைவியையும், குழந்தையும் அழைத்துக்கொண்டு, ஊருக்குச் சென்று, அவர்களின் குலசாமிக் கோவிலில் படையல் என்ற பேரில் பூஜையும், ஆடுவெட்டி விருந்தும் வைத்துவிட்டு, இறுதியில் அண்ணன் என்று பழகிய தன் நண்பனை, தன்   மனைவி மூலமே கொல்கின்றான். அதுமாத்திரமன்றி, அதற்கு உதவியாகவும் பலமாகவும் கூட இருக்கின்றான். படத்தைப் பார்க்கும்போது கதை கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. இறுதியில் இந்தக்குழப்பங்கள்   தெளிவுபடுத்தப்படுகின்றன..! கொலை செய்யப்பட்ட கோணம், கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது..! பரத்தின் பல படங்கள், நீண்ட நாட்களாகவே மக்களிடம் போதிய கவனம் பெறவில்லை..! ஆரம்பத்தில் நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவருடைய வளர்ச்சி, இடையில...