சிறுவர் தினம்..!

 


முதலில் அனைத்துக் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் எனது சிறுவர் தின வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றேன்.

சர்வதேச சிறுவர் தினம்  (International Children's Day) ஜூன் 1ம் திகதி கொண்டாடப்படுகின்றது.  பல நாடுகள், இந்நாளைக் கொண்டாடுகின்றார்கள். பிரபஞ்ச சிறுவர் தினம் (Universal Children's Day) நவம்பர் 20ம் திகதி கொண்டாடப்படுகின்றது.  இதனையும் பல நாடுகள் கொண்டாடுகின்றார்கள். இந்த இரு நாட்களிலும் தான் உலகில் அதிக நாடுகள்  சிறுவர் தினம் கொண்டாடுகின்றார்கள்..! இலங்கையில் சிறுவர் தினம் ஒக்டோபர் 1ம் திகதி கொண்டாடப்படுகின்றது. இதே நாளில்  மத்திய அமெரிக்க நாடுகளான குவாத்தமாலா (Guatemala) மற்றும் எல் சல்வடோர் (El Salvador) என்ற வட அமெரிக்காவிலுள்ள மத்திய பிரதேச நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது..!



இந்தியாவில் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு (Jawaharlal Nehru) பிறந்த தினமான நவம்பர் 14இல் சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

நான் பிறந்த நாளில் தான் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடுகின்றார்கள். அதற்காக நான் ஒன்றும் இந்தியாவிற்கு செய்யவில்லை. எனக்கு இந்தியா உதவியுள்ளது..! ஆம்..! எனது முதலாவது பட்டப்படிப்பை அகதியாக இருந்து படிக்க உதவியது இந்தியா தான்..!

 

ஒரு ஆசிரியராக இருந்து  இந்தியாவின் ஜனாதிபதியாக வந்தவர்  சர்வேபள்ளி இராதாகிருஷ்னன் (Sarvepalli Radhakrishnan). அவரது பிறந்த தினமான செப்ரெம்பர் 05 இல்

ஆசிரியர் தினம் இந்தியாவில் கொண்டாடுகின்றார்கள்..!

எமது நாட்டில் ஒட்டோபர் 06 இல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.



மேலும் முக்கியமாக அனைத்து முதியவர்களுக்கும் எனது முதியோர் தின (International Day for Elders) வாழ்த்துக்கள் இன்று உரித்தாகட்டும்.

குறிப்பாக மனித உரிமைகளை பேணவும் வழங்கவும் இந்த நாளில் நாம் உறுதிபேண வேண்டும். இந்தவருட முதியோர் தினக்கருப்பொருளே முதியவர்களுக்கான மனித உரிமையை வழங்கவேண்டும் என்பதே..!

இவ்வாறாக உலக நாடுகளில் வெவ்வேறு தினங்களில்  இவ்வாறான தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அதனைப்போலவே சிறுவர் தினமும் கொண்டாடப்படுகின்றது..!

சரி சிறுவர் தினத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..? சிறுவர்களுக்கான உரிமைகள் (Rights) என்ன..? அவர்களை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்..? பழக வேண்டும்..?

அவர்களுக்கு நாம் வழங்க வேண்டிய நலன்புரிகள் (Welfare) அல்லது வசதி வாய்ப்புக்கள என்ன..? என்பது பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். அதனை வழங்க அனைத்து மனிதர்களும் தயாராக இருக்க வேண்டும்.

இன்றைய சிறுவர்கள் நாளைய இளைஞர்கள்..! அதுமாத்திரமல்ல வருங்காலத் தலைவர்கள்..!

சிறுவயதில் நான் கோவிலுக்குச் செல்வது வழக்கம். உண்மையைச் சொல்வதென்றால், பக்தியை விட, திருவிழாக்காரர்கள் தரும் பிரசாதத்திற்காக..!

ஆனால் அந்தப்பிரசாதமும், அந்த வாழ்வியல் முறையும் தான் இன்று என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்துள்ளது.

எனது சிறுவயதுக் கோவில் அனுபவங்களில் கற்பக்குணைப் பிள்ளையாரின் பங்கு அளப்பெரியது..! இந்த சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை இந்தப்பிள்ளையார் ஆலயமே ஏற்படுத்தியது. பிள்ளையாரின் அருளே, நான் இந்த நிலைக்கு வர பல காரணங்களில் ஒரு காரணம்  எனநினைக்கின்றேன்.

நான் இப்போது எனது நிறுவனத்தில் படிக்கும் அனைவரையும் எனது பிள்ளைகளாகவே நினைக்கின்றேன். இதில் பெருமை என்னவென்றால் என்னைவிட வயதில் கூடியவர்களும் என்னிடம் படித்துள்ளார்கள்..! தற்போது படிக்கின்றார்கள்.

ஆகவே இந்தக்காலத்தில் படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல..!  படிப்பு மாத்திரம் இருந்தால் போதாது. நல்ல பழக்க வழக்கங்களும் இருக்க வேண்டும். உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும். யாரையும் ஏமாற்றி நாம் வெற்றிபெறுவது என்பது நிலையான வெற்றி கிடையாது. உண்மையான வெற்றி என்பது, எமது உழைப்பினால் கிடைக்கும் உயர்வாகும்.

தற்போது நான் மாணவர்களுக்குச் சொல்வது, படிப்பதோடு இயலுமென்றால் சில தொழில்களிலும் கவனம் செலுத்துங்கள். படிப்பதால் பல மாணவர்கள் தன்நம்பிக்கை இன்றி, அரசு வேலைகளை எதிர்பார்த்து, அந்த வேலையில் போதிய சம்பளம் இல்லை என்பதால் திருப்தி இல்லாமல் வேலைசெய்வதுடன், தவறுகளிலும் ஈடுபட முனைகின்றார்கள். தன்நம்பிக்கை குன்றி அலைகின்றார்கள்..!  படிப்பதைக்காட்டிலும், தன்நம்பிக்கையுடன் வாழ்வில் பயணிப்பதே முக்கியமானது என நான் நினைக்கின்றேன்.

விரும்பிப் படியுங்கள். வெறுப்புடனும், வற்புறுத்தலாலும் படிப்பது பெரிய வெற்றியைத் தரும் என்று நான் நம்பவில்லை.

அன்பான பிள்ளைகளே செய்யும் தொழிலே தெய்வம். நாம் எந்தத்தொழில் செய்கின்றோம் என்பது முக்கியம் அல்ல. ஆனால் அந்தத்தொழிலை சிறப்பாகவும், உண்மையாகவும் செய்ய முனைய வேண்டும். அது தான் முக்கியம். ஒருவிடயம் என்னால் சொல்ல முடியும், பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும் தோல்வி நிச்சயம் வராது என்பது எனது வாழ்க்கை அனுபவம்..!

 

ஆ.கெ.கோகிலன்

01-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!