தென்னை மற்றும் பனை..!



தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியுள்ள சூழலில்,  வரவு கூடாத நிலையில் செலவை கூட்டும் விதமாக நடப்பது ஆபத்தானது. நம்மை  சிக்கலுக்குள் மாட்டிவிடும். இதனைப்  புரிந்துகொண்டு சிக்கன வாழ்வியலை வீட்டிலும் வெளியிலும் கடைப்பிடிக்க நான் முயல்வதுண்டு. முற்றாகக் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், இயன்ற அளவிலாவது கடைப்பிடிக்க நினைப்பது வழமை. அந்த வகையில் பல நாட்களாக விழுந்த தேங்காய்கள் காய்ந்து கொப்பறாக்களாக மாறிவிட்டன. இதன் காரணமாக இடையிடையே, உடற்பயிற்சி போல் சில தேங்காய்களை உரிப்பது வழக்கம். அந்தவகையில் ஒரு தேங்காயை உரிக்கும் போது, முளைவந்து மரமாக  வேண்டியதை ஏறக்குறைய முழுமையாக உரித்துவிட்டேன். இருந்தாலும் மனதில் அது ஒரு உயிர் என்ற எண்ணம் வந்ததும், மனைவியிடம் ஒரு சணல் கயிறு வாங்கி, திரும்பப் பொச்சுக்களை வைத்துக்கட்டி, ஒரு குழிவெட்டி, அந்த இளம் தென்னங்கன்றை நட்டு தண்ணீரும் விட்டுவிட்டேன். அதனால் மிகப்பெரிய ஒரு நிம்மதி வந்தது..! தாவரமோ, சூழலில் இருக்கும் அனைத்தும் நமக்கு ஏதோ செய்துகொண்டு தான் இருக்கின்றன..! நாம் தான் சில வேளைகளில் சூழலை மறந்து மிகப்பெரிய அநியாயங்களை சூழலுக்கும் ஏன் பூமிக்கும் செய்துவிடுகின்றோம். அறியாமையால் நடந்தால் மன்னிக்கலாம். வேண்டும் என்று செய்தால் என்ன செய்வது..? தடுத்துத்தான் ஆகவேண்டும்.



மேலும் மனைவி  பனங்காய் பணியாரம் சுட இரு பணம்பழங்களை எடுத்து வைத்திருந்தார். நேரமின்மை காரணமாக சில நாட்கள் தாமதமாக்கி, அவற்றை பயன்படுத்த நினைத்துள்ளார். ஆனால் அதற்குள் சின்ன வண்டுகள் வர ஆரம்பித்துவிட்டன. அதனால் அந்த இரு பனம்பழங்களும் கழிவு தொட்டிக்குள் வந்து இருந்தன.

எனது வீட்டு வளவில் ஒரு பனை மரமும் இல்லை..! எமது மூதாதையர் நட்ட மரங்களை வெட்டிக் காசாக்கியும், நாமும் பயன்படுத்தியும் இருக்கின்றோம். ஆனால் ஒரு பனை மரம் கூட நாம் நடவில்லை.

எனவே அந்த வண்டுபிடித்த பழங்களைப்பிரிக்க ஐந்து  விதைகள் இருந்தன. அவற்றையும் அடிவளவில் போதிய இடைவெளிவிட்டு, நட்டு தண்ணீர் விட்டேன்.

என்ன என்று தெரியவில்லை..! இன்று தென்னையும், பனையும் நடக்கூடிய சூழலை இயற்கை அமைத்துத்தந்தது..!

மனதிற்கும் ஆறுதல் கிடைத்தது..!

 

ஆ.கெ.கோகிலன்

01-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!