தசரா..!

 




தசராப் பண்டிகை வடஇந்தியாவில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அவர்களை பொறுத்தவரை இராவணனை அரக்கனாகவும், கெட்டவனாகவும், அவனை அழிப்பது அவர்களுக்கு மகிழ்வைத் தருவதாகவும் நீண்டகாலமாக  அவர்கள் தலைக்குள் புகுத்தப்பட்டுள்ளது..! இராவணனை அவர்கள் கெட்டவன் என்று சொன்னாலும்,   சிவபக்தன் என்றும், இசை வல்லுனன் என்றும்  மகாவீரன் என்றும்  சைவர்களால் கருதப்படுவதும் உண்டு..!

இந்தப்படத்தைப்பொறுத்தவரை, நண்பனின் காதலை உணர்ந்த நண்பன், தன்னுடைய காதலை தியாகம் பண்ண நினைப்பதும், இதனை ஒரு கட்டத்தில் நண்பன் அறிந்து, சங்கடப்பட்டு, பின்னர் சாவதும், அதற்கு ஒரு கொடூரனின்  காமம் தான், காரணம் என்பதை அறிந்த நண்பன், அவனை அழிப்பதும், விதவைக்கு வாழ்வு கொடுப்பதுடன், தனது ஒருதலைக்காதலுக்கு முடிவு கொடுப்பதாகவும் கதை இருக்கின்றது.

ஆனால் சொல்லப்பட்ட விதம் புதுமையாகவும், பல காட்சிகள் இரவிலே எடுக்கப்பட்டதாகவும், “சிலுக்கு” என்ற பழைய கவர்ச்சி நடிகை பெயரில் பார் நடத்துவதும், அதனூடாக மக்கள் பாதிப்படைவதும், நிலக்கரி அகழும் இடத்தில் காட்சிகள் வைத்ததும், அனைவரும் கரிபடிந்த தோற்றத்தில், சாதரணமாக இருப்பதும், அதற்குள் ஒரு சாதியப்பிரச்சனை, அரசியல் என எல்லா உணர்வுகளுக்கும் தீனி கொடுத்துள்ளார் இயக்குனர்..!

நானி, தீக்சித் செட்டி (Dheekshith Shetty) சமுத்திரக்கனி,  சைன் ரோம்  சாக்கோ (Shine Tom Chacko)

 மற்றும் கீர்த்தி சுரேஸ் என எல்லோரது நடிப்பும் சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது.  சந்தோஷ் நாராயனின் பாடல்கள், இசையும்  மேலும் சிறப்பாக இருந்தது. இருந்தாலும்,  ஒரு ஒட்டாத தன்மை படத்தில் இருந்ததை சொல்லத்தான் வேண்டும்.  “டப்பிங்“ (dubbing)  படம் என்பதால் அவ்வாறு இருந்ததா என்பது தெரியவில்லை.  அந்த ஒட்டாத தன்மையைப் போக்கவும், நிஜத்தை தொடவும் பல காட்சிகள் வைக்கப்பட்டதாகக் தெரிகின்றது.

பலரின் கதையாக்கத்தை, திரைக்கதையமைத்து  சிறிகாந்த் ஓடெலா (Srikanth Odela) என்பவர் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார். கே.ஜி.எப் கலர் தெரிந்தாலும், முதல் படத்திலேயே  முத்திரை பதித்துள்ளார் என்று சொல்லலாம்.

 


ஆ.கே.கோகிலன்

09-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!