கறுவாக் கண்டு (Cinnamon Plant)..!

 

 

நாட்டின் காலநிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன..! சில பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன..!  இன்னும் சில பகுதிகளை வெயில் வாட்டுகின்றது..!

பொதுவாக சூழல் தொடர்பான ஆய்வாளர்கள் வலியுறுத்துவது ”மரங்களை நட்டு, சூழலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதைத் தான்..”

நாமும் மரங்களை வளர்ப்போம், வீட்டையும் நாட்டையும் காப்போம்.

இயற்கை பற்றிய உண்மையான புரிதல் இல்லாமல், சில உயிர்கள் வாழப் பல உயிர்கள் பலியாவது, மிகவும் வேதனைமிக்கது..! பல நாடுகள், இதனை நன்கு புரிந்துகொண்டிருந்தும், யுத்தத்தில் இறங்குவது வரும்காலம் என்பது தொடர்பாகப் பயம் வருகின்றது. யுத்தங்களால் என்றும் முடிவு வராது. பழிவாங்கல், என்பது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் தொடரும்.

எனவே, பயனற்ற யுத்தங்களைச் செய்வதைக்காட்டிலும், தோற்றுப்போயாவது உலக மக்களை நிம்மதியாக வாழ வைப்பது, பெரும் பயனை உலகிற்கு வழங்கும்.

இவ்வாறு உலகச்சூழல் இருக்க, இன்று நான் லீவு எடுத்துக்கொண்டு, எமது உறவினர் ஒருவர் மரணமடைந்து, அவரது 31வது நாள் நிகழ்வில் கலந்துகொண்டு, கல்வெட்டிலுள்ள மரணமானவரின் வரலாற்றையும், நன்றி நவிலலையும் வாசித்ததுடன் மதிய உணவையும் பழம், வடை மற்றும் பாயசத்துடன் உண்டு, வரும்போது தந்த பரிசில்களையும் வாங்கிக்கொண்டு வந்தேன்.

அதில் முக்கியமான ஒரு பரிசு, மரக்கன்று..! அது, இதுவரை எனது வீட்டில்  இல்லாத, எமது சூழலில் வளருமா என்பதைப்பற்றி தெரியாத கண்டு..? ஆம் கறுவாக்கண்டு..!

 எனக்கும், சூழலைப் பசுமையாக வைத்திருக்க விருப்பம். சில பூச்சிகள் மற்றும் மசுக்குட்டிகளின் பரம்பல், எம்மையும், அயலையும் வேதனைக்குள் தள்ளும் என்பதால், அதிகம் வளர்ப்பதைத்  தவிர்த்து வருகின்றேன்.

பரிசு தந்த இறந்தவரின் வீட்டுப் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால், சிறப்பாகக் கிரிகைகளைச் செய்தார்கள்.

உணவும், பரிசும் மேலும் சிறப்பாக இருந்தன..!  முன்னின்று செய்த அனைவருக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டு, வீடு வந்தேன்.

பறிப்பதைக்காட்டிலும் கொடுப்பதால் வரும் சந்தோசம் அளவிட முடியாதது..!

அதுவே சந்ததிகளுக்கான  சந்தோசச் சேமிப்பு..!

 


ஆ.கெ.கோகிலன்

09-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!