ரிக்கர் (Trigger)..!
இது ஒரு ஆங்கிலப்
பெயர் கொண்ட தமிழ்படம். படம் பார்க்கும் போது, அவ்வளவு பிரபலமான படமாக அறிந்திருக்கவில்லை.
இருந்தாலும் படம் பார்க்க விறுப்பாக இருந்தது.
படத்தின் கதை என்று பார்த்தால் அநாதைவிடுதிகளில் இருந்து
குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதாக கூறும் பெற்றோர், அக்குழந்தைகளை மேலும் நிறையப்பணத்திற்கு
விற்றுவிடுகின்றார்கள்..! அதுமாத்திரமனறி, அவ்வாறு செய்யாவிட்டால் உயிருக்கே அச்சுறுத்தல்
என்பதால் பெரிய ரவுடிக்கும்பலுக்குப் பயந்து, இவ்வாறு நடக்கின்றார்கள்..!
அதேவேளை ஹீரோவின் அப்பாவும் இந்த குற்றச்செயலை அறிந்து, அதனை
நிறுத்த முற்பட, அவரது வாழ்க்கையே தலைகீழாகிவிட்டது..! தலையில்
பட்ட அடியால் மறதி வந்து, அவருக்கு என்ன நடக்கின்றதே புரியாமல் திணறுகின்றார்..! சில
சமயம், அவரையறியாமல் வீட்டைவிட்டு வெளியேறி ஏதோ ஒர் இடத்திற்குப் போய்விடுவார்..! அந்த
இடம் பின்னர் ஹீரோவிற்கு ஒரு துப்பாக இருக்கின்றது..!
இவ்வாறாக ஹீரோவும், அவரது தந்தையும் சேர்ந்து,
ரௌடிக்கும்பலை அழித்து, குழந்தைகளைக் காப்பதாகப் படம் முடிகின்றது.
இடையில் தன்யா ரவிச்சந்திரனுடன் காதலும், காப்பாற்றலும் என
வழமையான நாயகியாக, ஹீரோவிற்கு சில காட்சிகளில் உதவியதோடு அவரது சேவை முடிகின்றது.
அருண்பாண்டியன் ஹீரோவற்கு
அப்பாவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சீதா நடித்துள்ளார். சின்னி ஜெயந்தின் நடிப்பும் மனதில் நிற்குமளவிற்கு
அமைந்திருந்தது. இவ்வாறாகப் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பங்கள் பரவாயில்லை. படத்தின் பாடல், இசை என்பவற்றை ஜிப்ரான் சிறப்பாகக் கொடுத்துள்ளார். சாம் அன்ரன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். படம்
பார்க்கலாம். எனக்கு போரடிக்கவில்லை..!
ஆ.கெ.கோகிலன்
12-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக