உயிர்தப்பிய ஆடு..!

 


இன்று ஞாயிறு..! பல செத்தவீடுகளுக்குப் போய்வந்து, குளித்து, உண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கையில், ஏதேதோ குரல்கள் கேட்டன..! இடையிடையே ஆடு கத்தும் குரலும் கேட்டது. தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்துக்கொண்டு கேட்கையில், பக்கத்துவீட்டு பெண்பிள்ளை எனது பெயரைச்சொல்லி மாமா
  ஒருக்கா வாருங்கள்..! “ஆட்டுக்குட்டி கிணத்திற்குள் விழுந்துவிட்டது..!” என்றார்.  நானும், சாரத்துடன் இருந்ததால், உடனே ஜம்பருக்குள் மாறிக்கொண்டு ஓடினேன். ஏற்கனவே காலில் பிரச்சனைகள் இருக்கின்றன. ஓடும் போது செருப்புக்கள் கழரத்தொடங்கிவிட்டன. ஒருவாறு சமாளித்து, ஓடிச்சென்று கினத்தைப் பார்த்தேன். ஆடு அலறியபடி இருந்தது. வேறு பலரும் வந்திருந்தார்கள்..!  என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முயன்றேன். முன்பு பல முறை கிணற்றிற்குள் இறங்கி, சுத்தப்படுத்தியுள்ளேன்.  இருமுறை இறங்கி, சுத்தப்படுத்திவிட்டு, பின்னர் ஏறும்போது, சக்தியற்று, ஏறமுடியாமல் திணறி, வெளியாட்களின் உதவியுடன் ஏறிய வரலாறும் உண்டு. ஏன் எனது தற்போதைய வீட்டுக்கிணற்றில், இறங்கி அதனைக்கழுவிவிட்டு, ஏறமுடியாமல் தவிக்க, மனைவியின் தாயும், தந்தையும் இணைந்து நான் மேலே வர உதவினார்கள். எனக்கு உதவ அந்நேரம் வீட்டில் வேறோருவரும் இல்லை..!  இப்படியான வீர அனுபவங்கள் மூளைக்குள் வந்துபோனதால், எனது நிலையை உணர்ந்து, கிணற்றிற்குள் இறங்க முடியவில்லை.  ஒரு ஏணியைக்  கயிற்றில் கட்டிக் கிணற்றிற்குள் இறக்கினேன். சிக்குண்ட ஆட்டின் கயிற்றையும் அறுத்தேன். ஆடு ஏணியில் ஏற முயன்றது..! ஆனால் அதனால் முடியவில்லை. அதற்கு இடையில் மேலும் சிலர் உதவ வந்தார்கள்..! அதில் ஒருவர் உடனேயே கிணற்றிற்குள் இறங்கி, ஆட்டைப்பிடித்து முன்னிரு காலிலும் கட்டி மற்றப்பகுதியை மேலே தந்தார். அதனைப்பிடித்து இழுக்க ஆடு உயிரோடு வெளியே வந்தது..! கயிற்றைக் கழற்ற,  சந்தோசத்துடன் துள்ளிக்குதித்து ஓடியது..!  அந்த நபரும் ஏறினார். பின்னர் நான், ஏணியை தூக்கிவிட்டு, வெளிக்கிட, மேலும் சிலர் வந்தார்கள். அவர்களுடன் எனது கிணற்றிற்குள் இறங்கிய அனுபவங்களையும், மாமா, மாமியால் காப்பாற்றப்பட்டதையும், வேலைசெய்த மேசன் மற்றும் கூலியாட்கள் மூலம் காப்பாற்றப்பட்டதையும் சொல்லி, அதனால் தற்போது இறங்குவது பயம் என்றும் மற்றும் பயிற்சியும் இல்லை எனச்சொன்னேன்.

வயது போனாலும் தொடர்ந்து, செய்துவந்தால், அதனைச் செய்ய முடியும். இல்லை என்றால் விலத்துவது சிறந்தது, அல்லது மேலும் சிக்கலைத்தான் சந்திக்கவேண்டிவரும்.

 

ஆ.கெ.கோகிலன்

08-10-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!