ஆதிரா பிறந்த நாள்..!

 


 


எனக்கு ஒன்றுவிட்ட தம்பிகள் என்று பலர் இருக்கின்றாரகள்..! நிறையப் பேர் கனடாவில் தான் இருக்கின்றார்கள்..! சிலர் மட்டுமே இலங்கையில் இருக்கின்றார்கள். அதில் ஒருவருடைய ஒருவயது மகள் ஆதிரா..! அவளின் பிறந்த நாள் இன்று யாழ் ஜெ.ஹொட்டலில் வெகுவிமர்சையாக நடந்தது.

நானும், மனைவியும், இரண்டாவது மகளும், தம்பியும், அவரது மகளும் என ஜந்துபேர் எனது காரிலே போனோம்.

முதலில் மூத்த மகளையும் கூட்டிச்செல்ல முனைந்தேன். அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை..? வரவில்லை..! தம்பியையும், மகளையும் கூட்டிச்செல்லட்டும் என்று சொல்லாமல், தானே வரவில்லை என்றுவிட்டாள். 

எனக்கும் கவலையாகவே இருந்தது. மூத்தவளை விட்டுச்செல்வது..! நான் கூட்டிச்செல்லவில்லை என்றால், தம்பியும், மகளும் வரவே வாய்ப்பில்லை.

தம்பியின் பிள்ளைகள் வளர்ந்து வருவதால், சில சமயம் பெரியப்பா முன்பு போல் எங்கள் எல்லோரையும் காரில் கூட்டிப்போகவில்லை என்ற கவலையை அடிக்கடி வெளிப்படுத்துவதை அவதானித்து இருக்கின்றேன். அவர்களின் சூழலில் அது தற்போது முடியாமல் இருக்கின்றது.  என்னால் அவர்களின் எதிர்பார்ப்பை முற்றாகப் போக்க முடியவில்லை. முன்பு எல்லோரையும் அடைத்துகொண்டு போகக்கூடியதாக இருந்தது. இப்போது அது முடியவில்லை. அதனால் சிலரை விட்டுவிட்டுப் போகவேண்டிய நிலைவந்துள்ளது.

பார்ப்போம்..! வசதியைப் பொறுத்து, இருக்கும் காரை விற்று, ஒரு பெரிய  வான் வாங்கலாம் என்று நினைக்கின்றேன். 

ஒன்றுவிட்ட தம்பி மகளது பிறந்த நாள் கொண்டாட்டம் ஹொட்டலில் நடந்ததால் நல்ல கூட்டம் இருந்தது. 7.30மணிக்குள்ளே எல்லோரும் உண்ணத்தொடங்கிவிட்டார்கள்..! நாமும், மச்சான் மற்றும் அவர் மனைவியும் என எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு, எமது அன்பளிப்பையும் செலுத்திக்கொண்டு, சாப்பாட்டு வரிசைக்குச் சென்றோம். பரவாயில்லை..! நல்ல கூட்டம் என்றாலும், எமக்கும் விரைவாக உணவு பெறக்கூடியதாக இருந்தது.  வாங்கித் உண்டுவிட்டு, சிறிதுநேரம் சின்னம்மாவுடன் கதைத்துவிட்டு, தம்பியிடமும் சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.  வரும்போது சில படங்களை மகள்கள் எடுத்தார்கள். நமக்கு, வயிறு முட்டியதால், கஷ்டமாக இருந்தது..! ஒருவாறு, தம்பியையும், மகளையும் அம்மாவீட்டில் இறக்கிவிட்டு வீடுவரும்போது, விஜய் தொலைக்காட்சியில் பிக்பொக்ஸ் தொடங்கியது..! பின்னர், பொழுது அதனுடன் கழிந்தது.

 

ஆ.கெ.கோகிலன்.

10-10-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!