பொருளாதார யுத்தம்..!





காலம் விரைவாகப்போய்விட்டது..! ஏறக்குறைய 6 வருடங்கள் யாழ்ப்பாணத்தின் உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் பணிப்பாளர் தரம் 2 மற்றும் 1 இல் கடமையாற்றிவிட்டேன். நான் நினைத்தே பார்க்கவில்லை யாழ்ப்பாணம் வருவேன் என்று..! எனது வாழ்க்கை,  திருகோணமலை உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் போய்கொண்டு இருந்தது. திடீரென உள்நாட்டு யுத்தம் முடிந்ததால் சொந்த இடத்திற்கு வரமுடிந்தது..!

தற்போது இன்னொரு வகையான யுத்தம்..!  ஆம் பொருளாதார யுத்தம்  என்று சொல்லக்கூடிய யாரையும் நோகமுயாத, எதிர்பார்க்காத ஒன்று கொரோனாவைத் தொடர்ந்து,  வந்து, வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கின்றது.

 கடந்த உள்நாட்டு யுத்தகாலம் போல் இந்தக்காலத்தையும் கடக்க மக்கள் அனைவரும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

நாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன..! எமது நிறுவனங்களைப் போன்ற பல அரச நிறுவனங்களும் திண்டாடிக்கொண்டு தான் இருக்கின்றன. குறைவான வளத்தில், எவ்வளவு நிறைவான வேலைகளைச் செய்யமுடியுமோ அந்தத்திசையில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ பயணிக்கவேண்டிய சூழல் பணியாற்றும் ஊழியர்களுக்கு உள்ளது..!

காலம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இந்தச்சூழலும் மாறும்..!  நம்புவோம்.. “நம்பிக்கை தான் வாழ்க்கை..!”

இன்று, எனது இடமாற்ற விண்ணப்பத்தை நிரப்ப முனைந்தேன். விரும்பும் நிலையம் என்று எதனைப்போடுவது என்பது தெரியாமல் நீண்ட நேரம் குழம்பினேன்.

ஒவ்வொரு, இடத்திலும் நன்மையும், தீமையும் உண்டு. அதேநேரம், அது பலரைப் பாதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கல்ல..!

இறுதியாக அந்த இடத்தை நிரப்பாமலே தலைமையகத்தின் முடிவுக்கே, விட்டுவிட்டேன். பொதுவாக எனது அனுபவத்தில் நான் தெரிவு செய்வதை விட, இயல்பாக எது வருகின்றதோ அது, எனக்கு நல்லதாகவே அமைவதுண்டு. அந்த வகையில் இதனையும் விட்டுவிட்டேன். “நடப்பது நடக்கவேண்டியது தான்..!” அதனை ஏற்க நாம் பழகவேண்டும்.

 

ஆ.கெ.கோகிலன்

04-10-2023.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!