மிரள்..!
பரத் மற்றும் வாணிபோஜன் நாயகன் நாயகியாக நடித்த இந்தப்படத்தின் கதை, கூட அண்ணன் போன்று பழகும் ஒருவன், தனது தங்கை போன்றவளின் அழகில் மயங்கி, அவளைப்பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றான்..! இதனால் ஏற்படும் மனக்குழப்பத்தால் தவிக்கின்றாள். முதலில் கணவனால் அந்தப் பிரச்சனையைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பும் போது, அவனுக்கு உண்மை புரிகின்றது..!
மனைவியையும், குழந்தையும் அழைத்துக்கொண்டு, ஊருக்குச் சென்று,
அவர்களின் குலசாமிக் கோவிலில் படையல் என்ற பேரில் பூஜையும், ஆடுவெட்டி விருந்தும் வைத்துவிட்டு,
இறுதியில் அண்ணன் என்று பழகிய தன் நண்பனை, தன் மனைவி மூலமே கொல்கின்றான். அதுமாத்திரமன்றி, அதற்கு
உதவியாகவும் பலமாகவும் கூட இருக்கின்றான்.
படத்தைப் பார்க்கும்போது கதை கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.
இறுதியில் இந்தக்குழப்பங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன..!
கொலை செய்யப்பட்ட கோணம், கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது..! பரத்தின் பல படங்கள், நீண்ட
நாட்களாகவே மக்களிடம் போதிய கவனம் பெறவில்லை..! ஆரம்பத்தில் நன்றாகச் சென்றுகொண்டிருந்த
அவருடைய வளர்ச்சி, இடையில் நின்றுவிட்டது.
இந்தப்படத்தில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருந்தது. அதேபோல்
வாணி போஜனும் சிறப்பாக நடித்திருந்தார். ஏனைய கதாபாத்திரங்களும் குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார்,
மீரா கிருஷ்ணன், மற்றும் வில்லனாக வந்த ராஜ்குமார் போன்றவர்களும் நன்றாக நடித்து இருந்தார்கள்.
படம் தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பாகவும், திரில்லாவும் இருந்தது..!
குறிப்பாக படத்தின் இசையும், ஒளிப்பதிவும் நன்றாக இருந்தன..! ஏனைய தொழில்நுட்பங்களும் பரவாயில்லை.
படத்தின் திரைக்கதையை இன்னும் தரமாகவும், குழப்பமில்லாமலும்
எடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
நான் பென்ரைவ் மூலம், தொலைக்காட்சியில் பார்த்தபடியால்,
இருமுறை பார்த்து, கதையைப் புரிந்துகொண்டேன். ஒரே தடவையில் கதையைப் புரிவது, கொஞ்சம்
கடினம். குழப்பமாக இருக்கும். படத்தை எம்.சக்திவேல் என்பவர் இயக்கியிருந்தார். படத்தைக்
குடும்பத்துடன் பார்க்கலாம்.
ஆ.கெ.கோகிலன்
05-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக