மரண ஓட்டம்..!
ஒரு அம்புலன்ஸ் அலறியடித்துக்கொண்டு வைத்தியசாலை நோக்கி ஓடியது..!
அதற்குள் ஒருவர் மரணத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்தார்..!
அருகிலுள்ள மருத்துவ ஊழியர்கள் அவருக்கு குளுக்கோஸ் மற்றும் சேலைன் (saline) ஏற்றிக்கொண்டிருந்தார்கள்..!
அவருக்கு என்ன நடந்தது தெரியுமா..?
மரணத்தை நெருங்குபவரும் ஒரு அம்புலன்ஸ் சாரதி..! இன்னொரு மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உயிரைக்
காக்க, தன்னுடைய உயிரைப்பற்றிக்கவலைப் படாமல்
அதிவேகத்தில் வைத்தியசாலை நோக்கிச் செல்லும்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால், படுகாயமடைந்து,
தற்போது மரண தேவனிடம் செல்கின்றார்..!
ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், ஒரு அழைப்பு, “குறித்த ரெயில்வே கேட்டிற்கு உடனடியாக
வரவும்” என வந்தது..!
அதிவேகத்தில் ஓடிவந்த ரெயின் இடித்ததில், அதிவேகமாக கேட்டைக்கடக்க
முயற்சித்த சுகாதார ஊழியர் தூக்கியெறியப்பட்டார். அவர், ஒரு அவசர மருத்துவ சேவைக்காக
விரைந்து வைத்தியசாலைக்கு செல்லும்போது, விதிமுறைகளைக்கவனிக்காமல், சேவையை மாத்திரம்
மனத்தில் வைத்து ஓடியதால், வந்த நிலை தான் இந்த எதிர்பாராத விபத்து..!
இரத்த வெள்ளத்தில் இருந்தவரை, தூக்கிச் செல்ல வந்தது, ஒரு
அம்புலன்ஸ்..! அதிக ரத்தப்போக்கு, அதிக காயங்கள்
இருந்தாலும், முச்சும், இதயத்துடிப்பும் இருந்துகொண்டே இருந்தது..! உடனே அந்த அன்புலன்ஸில்
ஏற்றிக்கொண்டு செல்லும்போது, அம்புலன்ஸூக்குள் இருந்த ஒரு மருத்துவ ஊழியர், இதயத்துடிப்பு
குறைவாக இருப்பதாகவும், விரைவாக அன்புலன்ஸை செலுத்தவும் என வலியுறுத்தினார். அதனைக்கேட்ட
அன்புலன்ஸ் சாரதி விரைவாக ஓட எதிர்பாராமல், அன்புலன்ஸ், ஒரு டிப்பர் (tipper) ரக பெரிய
வாகனத்துடன் மோதி, விபத்து ஏற்படுகின்றது..!
அந்த விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியால் அன்புலன்ஸ்ஸில் உயிருக்குப்போராடிக்கொண்டு
இருந்தவரின் உயிர் பறந்தது..! மரணம் அவரை ஆட்கொண்டது..! அதுமாத்திரமல்ல அந்த அம்புலன்ஸ் , சாரதியும் படுகாயமடைந்து, இருந்த
மருத்துவர்களும், மருத்துவமனை செல்வதற்காக இன்னோர் அன்புலஸ்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு
கொண்டுசெல்லப்படுகின்றார்கள்..!
சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னர் இணைபிரியாத நண்பர்களான இருவர் மருத்துவமனையில்
வேலைக்கு வருகின்றார்கள்..! அதில் ஒருவர் சுகாதார ஊழியர். இன்னோருவர் அன்புலனஸ் சாரதி.
இருவரும் ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்குள் ஏதோ முற்பிறப்புத் தொடர்புபோல் அவ்வளவு ஒற்றுமைகள்..!
ஒரு சமயம் இருவரும் பேசிக்கொள்ளும்போது, ஒருவர் மற்றவரை பார்த்துச் சொல்கின்றார் “மச்சான், நீ இல்லை என்றால் இந்த உலகே வேஸ்ரடா என்று..!”
இவ்வாறு இருந்தவர்களைக் காலம் பிரித்து, வெவ்வேறு
மருத்துவ மனைகளில் கொண்டுவந்து நிறுத்துகின்றது..!
தற்போது, அன்புலன்ஸ் சாரதியைக் கொண்டுவந்த அன்புலன்ஸ் வைத்தியசாலையை
நெருங்க, அவரது இதயமும் முற்றாக நிற்கின்றது..!
காலம், ஏழுவருடங்களுக்குப்பிறகு, நண்பர்கள் இருவரையும் மரணத்தில்
ஒன்றாக இணைக்கின்றது..!
உடலைக்கழற்றிவிட்டு,
இரு உயிர்களும் காற்றோடு கலந்து நட்பைத் தொடர்கின்றார்கள்..!
ஆ.கெ.கோகிலன்
08-10-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக