சகுந்தலம்..!
துஷ்யந்தன் மற்றும் சகுந்தலை காதலை உலகே அறியும்…! நான் கூடப் பல தடவைகள் அந்தக்கதையை கேட்டுள்ளேன். நாடகங்களில் பார்த்துள்ளேன். நடிகர் திலகம் சிவாஜி மற்றும் பிரபு நடித்த ராஜரிஷி என்ற படத்தில் கூடப் பார்த்துள்ளேன். அந்தகால நாடகத்தில் அல்லது சினிமாவில் கணினியும், அதன் வரைகலை வளர்ச்சியும் ஏற்படவில்லை. தனியாக கமெரா நுட்பங்களை மட்டும் பயன்படுத்திக் காட்சிகளை மெருகூட்டினார்கள். அதுமாத்திரமன்றி, நிறைய உழைப்பையும், நேரத்தையும், பணத்தையும் கொடுத்து, பல செட்டுக்கள் போட்டு, காட்சிகளைப் பிரமாண்டமாக மாற்றினார்கள்..! ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஒரு கணினி போதும் வித்தைகள் காட்ட..! கணினி வரைகலையில் கணினிப் பண்ணைகளே பயன்படுகின்றன..! பல ஆயிரம் வரைகலைஞர்கள் இரவுபகலாக உழைக்கின்றார்கள்..! இந்தப்படத்தில் அப்படிப்பட்டவர்களின் பங்களிப்பு அதிகமுள்ளது..! அவர்களுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக்கொண்டு, கதையை ஆராய்ந்தால், சில காட்சிகளில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. சகுந்தலா, வனவிலங்குகளைப் பெயர்கொண்டு அழைத்த வாழ்வியல் முறையில் இருந்து, முன்பு எப்படி இயற்...