நாட்டு நடப்புக்கள்..!
தேர்தல் முடிந்த அடுத்த நாள், நான் திருகோணமலையிலுள்ள எனது அலுவலகம் போவதற்கு, பஸ் புக் பண்ண, குறித்த இணையத்தளத்திற்குச் சென்றேன். வழமையாக நான் செல்லும் பஸ் அன்று ஓடவில்லை..! பின்னர் இரவு 7.00 இற்கு செல்லும் பஸ்ஸினை புக்பண்ணினேன். தேர்தல் முடிவு வந்தாலும், 2ம், 3ம் வாக்குகளைக் கணக்கிடத் தொடங்க, செய்திகளும் ஒருமாதிரி அப்படி இப்படி என்று சொல்ல, ஊடரங்கும் தளர்த்தப்பட்டதா அல்லது இல்லையா என்ற குழப்பத்துடன் போக, நானும் பஸ் நடத்துனர், புக்கிங் அலுவலகம் எனத்தேடிப் போனெடுத்தால், ஒன்றுக்கும் பதில் இல்லை.
இறுதியாக பஸ்ஸிற்கு புக்பண்ணிய பணத்தை இழக்க வேண்டி வந்தது.
அது தொடர்பாகப் பதில் சொல்ல வேண்டியவர்களும் அழைப்புக்களை எடுக்காமல் இருந்தால், நான்
என்ன செய்ய..?
திங்கட்கிழமை அரசு விடுமுறை என்று செய்தி ஊடகங்கள் அறிவித்ததால்,
எனக்கும் ஊரடங்கு நேரத்தில் பிரயாணம் செய்ய விரும்பம் வரவில்லை. ஒருவாறு திங்கள் பயணமின்றிக்கடந்தது..!
இம்மாதம் ஆரம்பித்ததில் இருந்து அதிக பயணங்கள் வந்துகொண்டிருந்தன..!
திங்கள் காலை எழுந்ததும் பஸ் புக்கிங்கை செய்ய குறித்த இணையத்தளத்திற்குச்
செல்ல, நான் போகும் பஸ்களின் சேவை காட்டப்படவில்லை..! பின்னர் யாழ் பஸ் நிலையத்திற்கு
தொலைபேசி எடுத்து கேட்டேன். இன்றைக்கு திருகோணமலைக்கு
பஸ்கள் போகுமா..? என..! இன்னும் நிலைமை சீராகவில்லை என்றார் ஒருவர்..!
ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு வந்து மக்கள் பலர் ஆரவாரப்பட,
மேலும் மக்கள் சிலர், பதட்டப்பட, அதிரடி நடவடிக்கைகள் தொடங்கின..! அடிபட்டவன், கஷ்டங்களைப்
பார்த்தவன் கையில் பதவி போனால் தான், அனைவருக்கும் நல்லது. அனைவரும் முக்கியம் என்று செயற்பட வேண்டும். விதிமுறைகளைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும். தவறுகளுக்கு, விசாரணைகளூடாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
வினைத்திறன், பயனுறுதி, விளைதிறன் அனைத்தும் ஒவ்வொரு விடயத்திலும் அலசி ஆராயப்பட வேண்டும்.
அவ்வாறு நடந்தால், நிச்சயம் நாடு முன்னேறும். இலங்கை நாடு, ஒரு குழந்தை அல்ல..! இலங்கை
மாதா, நிச்சயம் சிரிப்பாள்..! மகிழுவாள்..!
இந்தத் தேர்தல் முடிவால், நாட்டின் தலையெழுத்து மாறியது..!
முறைமை மாறியது..! சுதந்திரத்திற்குப் பின்னர், இடதுசாரி ஆட்சி தொடங்கியுள்ளது..! பார்ப்போம்..!
நன்மை தொடர்ந்தால், இலங்கை மாதா சிரிப்பாள்..! இல்லை என்றால் மீண்டும் சீறுவாள்..!
இப்படியாக, நாட்டின் போக்குச்செல்ல, எனது நேற்றைய பயணம் தவறியது..!
இரவு பஸ்ஸில் புக் பண்ணாமல் திருகோணமலை வரை நின்றுபோவது என்பது, எனது தற்போதைய உடல்
நிலைக்கு ஒத்துவராது..! பயணத்தின் இடையில் கொஞ்ச நேரமாவது இருக்க வேண்டும்.
முதல் நாள் புக்பண்ணி, ஊரடங்கு என்று போகவில்லை.
இரண்டாம் நாள் புக்பண்ணவே இல்லை..!
அதனால், நின்றுபோகப்பயந்து பஸ்நிலையமே போகவில்லை. புக் பண்ணிய காசை திரும்ப எடுக்கவோ அல்லது இன்னொரு
நாளைக்கு மாற்றவோ பல முறை முயன்றும் முடியவில்லை..! அரசின் கவனத்திற்கு இதனைக்கொண்டுவர வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
அது மாத்திரமன்றி, அரசின் பணத்தை நாம் எடுத்தால் தவறு என்பது போல், அரசும் அப்பாவி
மக்களின் பணத்தை எடுத்தால், அதுவும் தவறு தான்..! அதற்கான வழிமுறைகளில் உள்ள குறைகளைச்
சரிசெய்ய வேண்டும். இல்லையாயின் அரசின் தவறுகளும் தொடரும்.
3ம் நாளான இன்று, காலையிலே புக்கிங் செய்ய முனைந்தால், நேற்றைய
நிலைமையே தொடர்ந்தது..! எப்படியாவது இன்று போகவேண்டும்..? இல்லை என்றால் காரிலாவது
போகவேண்டும் என்ற முடிவோடு, வழமைபோல் பதில் ஏற்பாடுகளைச் செய்து, தலைமையகத்திற்கும்
அறிவித்துவிட்டு, மீண்டும் பஸ் புக் பண்ண முனைந்தேன். நல்ல வேளை..!
பஸ் இருந்தது..! புக் பண்ணினேன்.
தேர்தலுக்கு மறுநாள், நான் மதிக்கும் மாமாவிடம், இன்று இரவு
திருமலை போக புக் பண்ணியுள்ளேன் என்று சொல்ல, அவர் “இரண்டு நாளைக்குப்பிறகு..!” போகச்சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே நிலைமை எனக்கு அமைகின்றது.
அனுபவம், இயற்கையுடனான தொடர்பு இரண்டும் சேர்ந்து, இயற்கை
அனுபவத்தினூடாகப் பேசும். அது தான் எனக்குப் புலப்படுகின்றது..!
வழமையாக நான் புக்பண்ணி பஸ்ஸில் போனாலும், பலருக்கு இடையிடையே
எழுந்து நின்று, இடம் கொடுக்கின்றனான்..! ஆனால் என்னால் அப்படி யாரையும் நம்பிப்போக
முடியவில்லை.
நம்ப நட.. நம்பி நடவாதே..!
நடப்பது அனைத்தும் நன்மைக்கே..!
இரண்டும் உலகிலுள்ள பலரின் அனுபவத் தொகுப்பு..!
ஆ.கெ.கோகிலன்
24-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக