சனி வேலை..!
நீண்ட நாட்களுக்குப் பிறகு வார இறுதியில் வேலைசெய்ய நினைத்தேன். அதுவும்
பல தடவைகள் இழுபட்டு வந்து, இன்று தான், அதுவும் ஒரு நாள் தான் செய்ய முடிந்தது..!
வரும் வாரம் தேர்தல் வருவதால்,
பல மாற்றங்கள் நாட்டில் ஏற்பட வாய்ப்புண்டு. எமது தார்மீக ஜனநாயக்க கடமையை ஆற்றவேண்டிய
தேவையும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் உண்டு.
நானும் அந்தக்கடமையாற்ற வார கிழமை முழுக்க யாழிலே நிற்கத் தீர்மானித்துள்ளேன்.
இந்த சமயத்தில் எமது நிறுவன வெள்ளிவிழா கடமைகளையும், பாடவிதானக் கடமைகளையும் தவறாது செய்யவேண்டியது எமது பொறுப்பு.
அந்த வகையில் காலை மரம் நடுகையை எமது நிறுவனத்தில் கணக்கியல் மாணவர்களைக்கொண்டு நடாத்தினோம். அதேபோல் வெள்ளிவிழாவை முன்னிட்டு அதிஷ்டஇலாபச்சீட்டினையும்
விற்கத் தொடங்கினோம். வேறும் பல நியாயமான வழிகளில்
பணம் சேர்க்கவும், பொருட்கள் சேர்க்கவும், தேவையானவர்களுக்கு அவற்கை கொடுத்து உதவவும்
தொடங்கியுள்ளோம். அதுமாத்திரமன்றி, அதற்கான பொறுப்புக்கூறலையும், கூற அனைத்தையும் முறையாகப்
பின்பற்ற, இருக்கும் எமது குறைவான ஆளணிகளைப் பயன்படுத்தி, எவ்வளவு நிறைவாகச் செய்யமுடியுமோ
அவ்வளவு நிறைவாகச் செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்கள் பலரை நாட்டைவிட்டு
ஓட வைத்துள்ளன..! வெளிநாடுகளில் உள்ள வேதனங்கள், எமது நாட்டோடு ஒப்பிடும் போது, ஓரளவு
கூடவாக இருப்பதாகச் சொல்கின்றார்கள். சில வளர்ச்சியடைந்த நாடுகளில் அவ்வாறு இருக்கலாம்.
சில நாடுகள் எங்களுடைய நாடுகளை விட சற்று பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு இருக்கலாம்.
எமது நாடுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்தால் சற்று, சமாளிக்க
முடியும் என்பது எனது கருத்து. இருந்தாலும் எல்லோருக்கும் வேலைகள் கிடைக்கின்றன என்பது
கேள்விக்குறி..! சில சமயம் நான், வீட்டில் நிற்கும்போது உடற்பயிற்சி என்ற போர்வையில்
பல வீட்டு வளவு வேலைகளைச் செய்வேன். உண்மையில் அதன் நோக்கம், செலவைக் கட்டுப்படுத்துவது
தான். அதுமாத்திரமன்றி, ஆரோக்கியத்தையும் கூட்டிக்கொள்வது. ஆனால் எல்லா வேலைகளையும்
நாம் செய்ய முடியாது. ஆனால், செய்யக்கூடிய வேலைகளைச் செய்யாமல், நாம் செய்யாம், ஆட்களுக்குக்
கூலிகொடுத்துச் செய்ய நினைப்பது தான் ஆரம்ப முதலாளித்துவ நிலை. எமக்குப் பணம் தேவைபடும்.
அதேநேரம் சோம்பேறித்தனமும், சொகுசும் கூட வரும்..! எமது நாட்டில் வாழ்பவர்களுக்கு,
இப்படி இருப்பது என்பது ஆரோக்கிய, பொருளாதாரக் கேடாகவே அமையும்.
எமது நிறுவன 25ஆவது வருட நிறைவை முன்னிட்டு, மக்களுக்கு, சமூகத்திற்கு
உதவும் சேவைகள் செய்ய நினைக்க, எமது நிறுவனத்திலேயே பல சேவைகள் செய்யவேண்டியுள்ளது
என்றார்கள். நானும் அதனை ஆமோதித்து, நாம் யார்..? நிறுவனம் எங்கே உள்ளது..?
எமது நிறுவனமும், நாமும் சமூகத்தின் அங்கம் தான். பிரித்துப்பார்க்க
முடியாது. எமது நிறுவனத்தில் தேவையிருப்பதையும், அதனை மிகக்குறைவான நிதியுடன் முடிக்க
முடியுமாயின் நானும் அதற்கு அனுமதி வழங்குவேன்.
அவ்வாறான அனுமதியை, மரம் நடுவதற்கு, எமது கணக்கியல் துறை மாணவர்களுக்கும் வழங்கினேன்.
பொதுவாக நிறுவனத்திற்கு வெளியே செய்ய நினைத்தாலும்,
உள்ளுக்குள் தேவையிருக்கும் போது செய்யும்
சேவையும் என்னைப்பொறுத்தவரை சமூகசேவை தான்.
சில பணக்காரர்கள் அருகில் கஷ்டப்படும் உறவுகளுக்கு உதவ மாட்டார்கள்.
ஆனால் கோவிலுக்கு கொடுப்பார்கள். கேட்டால், அது புண்ணியம் என்று சொல்வார்கள்..! நானும்
ஏற்றுக்கொள்கின்றேன். கோவிலுக்கு மாத்திரமல்ல, கஷ்டப்படும் உறவுகளுக்கும், அயலுக்கும்
கொடுப்பதும் புண்ணியம் தான். அதேபோல் வெளியே
செய்வது தான் சேவை அல்ல..! தேவையிருந்தால் உள்ளே செய்வதும் சேவை தான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை மைதான உடற்பயிற்சியைச்
செய்ய முடிந்தது. அதனால் உடல் ஆரோக்கியமாக இருந்தது. மனம் நினைத்ததை, நிறைவேற்ற முடிந்தது.
ஆ.கே.கோகிலன்
14-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக