PT Sir..!

 



 “உடற்பயிற்சி ஜயா” என்ற தமிழைப் பயன்படுத்தினால் சற்று பழமையாகத் தெரியும் என்பதற்காக இவ்வாறு தலைப்பு வைத்தார்களோ தெரியவில்லை..!

கிப்பொப் தமிழா ஆதியின் படங்களும் ஏறக்குறைய விஜய் அன்ரனி படங்கள் போல் சற்று வேறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. பெரிய நடிகர்களின் படங்களின் சூத்திரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதால் என்னைப் போன்றவர்களுக்கு அவர்களின் படங்களில் ஈர்ப்பு குறைவு.

ஆனால் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள், வேறுபட்ட கதைக்களங்களில் நடிப்பதால் படம் சரியில்லாவிட்டாலும் ஏதோவோர் புதிய அனுபவம் கிடைத்த ஒரு நிறைவு இருக்கும். மாறாக பெரிய நடிகர்களின் படங்களுக்குப் போனால், எல்லாம் ஓரே மாதிரியாக இருப்பதால் வெறுப்புத் தான் வருகின்றது..!

இந்தப்படத்தின் கதை என்று பார்த்தால், பெண்களுக்கு ஏற்படும் தவறுகளுக்கு காரணம், பெற்றோர் மற்றும் சமூகம்..! “பொதுவாக மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்..?” என்ற  கோணத்தில் சிந்தித்து, தங்களுடைய தரங்களை, தங்களாகவே கீழே இறக்குகின்றார்கள்..! இது தவறு..! எந்தச் சூழலிலும் முன்னின்று போராடும் பெண்களைப் பாராட்டாமல் விட்டாலும், கொச்சைப்படுத்தக்கூடாது.

அவர்களின் உரிமைகளை அவர்கள் அனுபவிக்க வேண்டும். விருப்பமான வாழ்வை வாழ அவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும். குடும்பத்தின் செய்கையும், சமூகத்தின் செய்கையும் அவர்களை முடக்கும் போது, வேறுவழியில்லாமல் தற்கொலைக்கே செல்கின்றார்கள்..! இந்தப்படத்தில், கொலை அல்லது தற்கொலை செய்யப்பட்ட பெண், உயிரோடு வந்து சாட்சி சொல்லி, உண்யைமான காரணத்தைச் சொல்லும் போதே, நிலைமை, நீதிபதிக்கு விளங்குகின்றது. போலிச்சாட்சிகள், பணம் மற்றும் பதவி பலத்தால் எதையும் வாங்கலாம் என்ற கனவு எப்போதும் பலிக்காது என்ற உண்மையை உணர்த்தியுள்ள படம்.

பிரபு, தியாகராஜன் உட்பட அனைவரின் நடிப்பும் நன்றாக இருந்தது. படம் போரடிக்கவில்லை. தொழில்நுட்பங்களும் தரமாக இருந்தன.  கார்த்திக் வேணுகோபாலன் என்ற இயக்குனரும் படத்தை தொய்வில்லாமல் இயக்கி, ரசிக்கும்ப செய்துள்ளார்..!

 


ஆ.கெ.கோகிலன்

17-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!