ஓம் சாந்தி ஓம்..!
வெளிவந்து நீண்டகாலத்திற்குப் பிறகு இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும்
என்று எனக்குத் தோன்றியது. பார்த்தேன், மனதில் பதிந்துவிட்டது..!
இந்தியத் திரையுலகின் ஜம்புவான்கள் நிரம்பிய ஹிந்தித்திரையுலகத்தை
ஏறக்குறைய முற்றாகத் தரிசனம் செய்யக்கூடியதாக இருந்தது..! பிரபலமான ஸ்ரீதேவி, அமீர்கான், ஜாக்கிஷெராப், மாதுரிதீட்ஷித்
போன்ற ஒன்றிரண்டு முகங்களைத் தவிர அனைத்தையும் கண்டதே பெரிய நிறைவு..!
படத்தின் கதை நம்ப முடியாவிட்டாலும் மனதைதொடுவதாக அமைந்திருந்தது.
பிரபஞ்சத்துடன் தொடர்பு பட்டிருந்தது..! எது நினைக்கின்றாயோ, அதுவாகவே மாறுகின்றாய்
என்பதை உணர்தியது..!
வாழ்க்கை ஒரு வட்டம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்வு பட்டது
தான். இந்தபூமியில் பிறக்கும் அனைத்து உயிரும், முதலே பிறந்தது தான்..! என்ன..? எல்லாம்
திரும்பத்திரும்பச் சுழற்சி முறையில் வருகின்றன..!
இயற்கையைப் புரிந்தவர்களுக்கு மரணத்தைக்கண்டு பயம் வராது.
ஏனென்றால் மரணம் என்பது, உயிரின் நிலைமாற்ற உதவும் இயற்கையின் வரப்பிரசாதம்..! உயிர்ப்பில்
இருந்து, உயிரற்ற நிலைக்கான இயற்கையின் நிலைமாற்றச் செயற்பாடே மரணம்..!
துணைநடிகராக இருக்கும் சாரூக்கான், அவரது பரம்பரைப்பெயரால்,
பெரிய நடிகராக வரவாய்பில்லாமல் கஷ்டப்படுகின்றார்..!
ஓம் சாந்தி ஓம் என்ற திரைப்பட நாயகி, தீபிகா படுகோன் மீது காதல் வயப்படுகின்றார். அதைவெளிப்படுத்த
முன்னர், தீபிகா, அந்தப்படத்தின் தயாரிப்பாளர் மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்யக்கோருகின்றார்.
அத்துடன் கர்ப்பமாகவும் இருக்கின்றார். ஆனால் தயாரிப்பாளர் அதனை மறுத்து, படத்திற்காகப்
போடப்பட்ட செட்டிலே, காதலியை எரித்துக்கொல்கின்றார்..! அதேவேளை இவற்றைக் கண்டுணர்ந்த
சாரூக்கானும் இறக்கின்றார்..!
இறப்பு நடக்கும் வேளை, ஒரு பிறப்பும் நடக்கின்றது..! அங்கே
சாரூக்கான் மீண்டும் பிறந்து, ஓம் கபூர் என்ற பெயரில் புகழ்பெற்ற உச்ச நட்சத்திரமாக
மின்னுகின்றார்..!
தீபிகாவைக் கொன்ற தயாரிப்பாளரை பழிவாங்க, திரும்ப அதேபெயரில்
படம் எடுப்பதாகத்தொடங்கி, அவரை கொல்வதற்கும் தண்டிப்பதற்கும் திட்டங்கள் போட்டுச் செயற்பட,
உண்மையில் இறந்த தீபிகாவின் ஆவியும் வந்து,
அவனைத் தண்டித்துக்கொல்லுகின்றது..!
அதேவேளை இன்னோரு தீபிகா, நடிக்க வந்து, பின்னர் சாரூக்கானை
மணப்பதாகப் படம் முடிகின்றது.
மீளப்பிறக்கும் காட்சியும், பழைய தாய், மற்றும் நட்புக்களுடன்
ஏற்படும் தொடர்புகளும் படத்தில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன..!
பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு என அனைத்துத் தொழில்நுட்பங்களும்
தரம்..! அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
பராக் கான் என்ற பெண் இயக்குனர் இயக்க, சாரூக்கானின் மனைவி
கௌரிகான் தயாரித்து, அப்போதே பெருவெற்றியைச்
சுவைத்துள்ளனர்..!
ஆ.கெ.கோகிலன்
20-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக