தெரியா அழைப்புக்கள்..!

 

 


தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பிரச்சனைகள் பல வடிவங்களில் வரலாம்..! உலகே கையில் வந்ததால், பிரச்சனைகளும் உலகெங்கிலும் இருந்து  எம்மை அண்டலாம்..! இதனால், விழிப்பாக இருக்க வேண்டியது நாம் அனைவரதும் கடமை.

அது மாத்திரமன்றி, தகவல் தொழில்நுட்ப சாதனங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும். வசதிகளும், வாய்ப்புக்களும் இருக்கின்றது என்பதற்காக எல்லாவற்றையும் பயன்படுத்த நினைத்தால், உலகிலுள்ள குற்ற வலைகளில்  நாம் சிக்கவேண்டி வரும்..! அதில் இருந்து, மீள்வருவது சிரமான விடயமாகவும், தேவையற்ற வேறு பிரச்சனைகளில் மாட்டுவதற்கும் வாய்ப்புண்டு.

இந்தக்காலத்தில் பணம் என்பதற்கு மட்டும், மதிப்பு கூடுவதால் எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதுமென்ற நினைப்பு தற்போது பலரிடம் வருகின்றது..! இந்த எண்ணமே தற்போதைய பெரும் ஆபத்துக்களுக்கான ஆரம்பக்காரணம்..! யாரோ ஒருவர் பணம் கொடுப்பார் என்றால், எதையும் செய்யும் உணர்வற்ற, அறிவற்ற கைக்கூலிகள் உலகெங்கும் மலிந்து இருக்கின்றார்கள்..! அவர்களுக்கு இப்படியான சிக்கல்கள் வரும்போது மட்டும் தான், அவர்களால் உண்மையான பாதிப்புக்களை உணர முடியும்..! அது வரை அவர்கள் அனைவரும் கொடிய விலங்குகளுக்கு சமமானவர்களே..!

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால், பணத்தால் ஆயுளையும், ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் ஒரு நாளும் வாங்க முடியாது. அது புரியும் போது, அந்த விலங்குகளின் ஆயுள்களும் முடிந்திருக்கும்..! அற்ப ஜீவிகளின் அநியாய செயற்பாடுகளால், உலகம் பெரிதும் துன்பப்படுகின்றது..! என்ன செய்ய..?

சரியான கல்வியும், அன்பான உறவுகளும், ஆரோக்கியமான வாழ்வியலும் எல்லா நாடுகளிலும் கிடைக்குமாயின், அற்ப ஜீவன்களின் தோற்றங்கள் மட்டுப்படுத்தப்படும்..!  அதுவரை, நுளம்புகள் போல் பெருகி, பலரின் இரத்தத்தைக் குடித்து, எங்காவது மாட்டுப்படும்போது அடிபட்டுச் சாவும். அவ்வளவு தான் அவற்றின் வாழ்க்கை..!

நேற்று இரவு, மகளிடம் சாப்பிட வரச்சொல்ல, ஒரு போன்கோல் அடிக்கடி வந்து தொல்லைப்படுத்துகின்றது என்றார்..! போனைத் தரச்சொன்னேன். “தந்தார்..!” மறுமுனையில் வேறுமாவட்டத்தைச் சேர்ந்த, பேச்சுமோழியில் தமிழர் எனத்தெரிந்த ஒருவர், “நீங்கள் ஏன் போன் எடுத்தீர்கள் என்று கேட்டார்..!” நான் சொன்னேன் “நீங்கள் தான் தொடர்ந்து எடுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்..!  ஏன்  எடுக்கின்றீர்கள்..?” என்றேன். மறுமுனையில் “நீங்கள் எடுத்ததால் தான் எடுக்கின்றேன்..!” என்றார்..! பேச்சு வளர்ந்தது..! தவறான அழைப்பு இனி அழைக்க வேண்டாம் என்று சொல்ல, எனக்கு முதலில் அழைத்தவர், “தனது தங்கை, அண்ணா பற்றியெல்லாம் கதைத்தார்..” என்று சொன்னார். சரி “அவர் கதைக்கலாம்..” நான் சொல்கின்றேன் “இனிக்கதைக்க வேண்டாம்..” என்றுசொல்ல.. அவர் குரலை உயர்த்த, எனக்கும் கோபம் மண்டையில், ஏற  20 வயதிற்கு போய்விட்டேன். தூசணங்கள் வாயில் பறந்தன..! சண்டை செய்வதற்கான முறுக்கு உடலில் வந்துவிட்டது..! வந்தால், மண்டையை அடித்து உடைத்து, தூக்கி எறிந்துவிடுவேன் என்று பேசிக்கொண்டு வையட போனை -மவனே எனச்சொல்லிப் போனை வைத்துவிட்டு, மகளிடம் சொன்னேன்.. “போன்கள் மூலம் நடக்கும் குற்றச்செயல்கள் பற்றி..!”

“அறிமுகமில்லாத ஆட்கள் கதைத்தால், அல்லது அழைப்பை எடுத்தால், இயன்றவரை தவிர்க்கவும். தவறான முறையில் கதைத்தால், அவர்களுக்கு விளக்கம் கொடுக்கத்தேவையில்லை..” எனச்சொல்ல,  தொடர்ந்தும் றிங் சத்தம் வந்தால், சைலனட் மோட்டிற்கு மாற்றிவிடவும் அல்லது ஓஃப் பண்ணவும் சொன்னேன். இல்லை என்றால், போன் பற்றரியை கழற்றி விடலாம்.. அல்லது  சிம்மை கழற்றிவிடலாம்..  பல வழிகள் உண்டு.  ஒன்றிற்கும் பயப்படக்கூடாது. தவறுகள் செய்யாமல், இருக்கும்போது யாராவது வெருட்டினால் எதற்கும் பயப்படக்கூடாது. தவறு செய்தால், பலனை அனுபவிக்க வேண்டியது தான்.

மகளும் என்னுடன் பல விதங்களில், வாதாடினார்..! முகம் தெரியாத மனிதர்களில், யார் நல்லவர்..? அல்லது யார் கெட்டவர்..? என்பதை நாம் அறிவது கடினம். தொடர்பைத் தவிர்ப்பதே நல்லது. தேவையில்லாமல் சிக்கலில் மாட்டி, பணத்தைப் பறிகொடுத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள்..! பாலியல் துஷ்பிரயோகங்களில் மாட்டியவர்கள் இருக்கின்றார்..! குடும்பங்கள் சிதையக் காரணமானவர்கள் இருக்கின்றார்கள்..!

இவ்வாறாகப் பல வழிகளில், ஏமாற்றும் பேர்வழிகள், இணையத்திலும், இலத்திரனியல் பாவனைகளூடாகவும் வர தயாராகவே இருக்கின்றார்கள்..! மக்கள் விழிப்புடன், அவர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

தேவையோடு, தொடர்பை ஏற்படுத்துங்கள்.  வசதிகள் இருக்கின்றது என்பதற்காக சிக்கலில் மாட்டாதீர்கள்..! என்று  சொல்லி, மகளின் சிம்மைக் கழற்றி, எனது மேசையில் வைத்தேன்.

அத்துடன், பழைய தாத்தாவின் சிம் நம்பரில் இருந்து அழைப்பு வந்ததால் தான், மகள் எடுத்ததாகச் சொன்னார்.

சிலசமயம் தொலைதொடர்பு நிலையங்கள், ஒரே நம்பரை ஆரம்பத்தில் ஒருவருக்கும், பின்னர் பணக்கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் அதே இலக்கத்தை வேறோர் நபருக்கும் கொடுப்பது என்பது பல இடங்களில் நடந்துள்ளது. அவ்வாறு நடக்கும் போதும், இவ்வாறான பிரச்சனைகள் எற்படும்..!

எல்லாவற்றிற்கும் விழிப்பே பிரதானம்..!


ஆ.கெ.கோகிலன்

21-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!