இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யசோதா..!

படம்
    வாடகைத்தாய்  (Surrogacy)   தொடர்பான படம் என்ற எண்ணத்தில் படம் பார்க்க உட்கார்ந்தேன்.  ஆனால் படம் வேறுதிசையில் பயணித்து, ஆச்சரியப்படுத்தியது.  நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமணம் செய்து சில மாதங்களில் இரட்டைக்குழந்தைகள்  பெற்றதாகவும், அவை வாடகைத்தாயின் உதவியுடனே பிறந்ததாகவும் தெரிவித்தார்கள். இந்தக்கதை, அந்தசெய்தி பரவிய சந்தர்ப்பத்திலே இப்படமும் வெளிவந்தது.  அதனாலேயே அந்த எண்ணத்துடன் படம் பார்த்தால் படம் வேறுமாதிரி இருந்தது.  அழகுக்காக குழந்தைகளை உருவாக்கி, அவற்றின் திசுக்களை எடுத்து அழகுச்சிகிச்சை செய்து பெரும் பணம் சம்பாதிக்கும் சட்டவிரோதக்கும்பலை கண்டுபிடித்து அழிப்பதே படத்தின் கதை. சமந்தா ஒரு கதாநாயகி மாத்திரம் அல்லாமல் கதாநாயகனாகவும்  அசத்தியிருந்தார். உன்னி முகுந்தன் (Unni Mukundan),  சரத்குமார் வரலஷ்மி, சம்பத், ராவோரமேஷ் (Rao Ramesh) , முரளி சர்மா (Murali Sharma) போன்ற பலர் நடித்திருந்தார்கள். விறு விறுப்புடன், திகிலாகப் படத்தைக்கொண்டுசென்றாரகள்.  சமந்தா பொலிஸ் ரெயினிங் எடுத்தவர் என்று தெரிந்ததும் படம் இன்னும் சூடுபிடித்தது. நம்ப முடியாத பல காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டுள்ள

ஒரு வருட நிறைவு..!

படம்
France, Eiffel Tower lit up in blue and yellow to mark anniversary of Russia-Ukraine  conflict நல்ல சந்தோசமான நிகழ்வுகளின் ஒரு வருட நிறைவு என்பது மகிழ்ச்சிக்குரியது. இன்று உக்ரேன்-ரஷ்யா சண்டை தொடங்கி ஒரு வருடம் முடிந்துவிட்டது. என்னைப்பொறுத்தவரை இதனைப்பற்றிக்கதைக்க ஒன்றுமில்லை. ஒரு சண்டை முழு உலகத்தையும் பாதிக்கின்றது. அமைதிக்கான வழிகளைத்தேடிப் பயணிக்க தடையாக இருப்பது, தற்போதைய மனிதர்களின் சுயநல எண்ணங்களே..! Opera House are illuminated with the colors of Ukraine's national flag உலகின் பல நாடுகள் உக்ரேனுக்கு மறைமுகமாக பல உதவிகளைச் செய்வதுடன், உக்ரேனைத் தூண்டிக்கொண்டிருக்கின்றது. வெளிப்படையாக இந்தப்போரை வெறுத்தாலும், இந்நாடுகளிலுள்ள சிலர், தமது ஆயுத உற்பத்திகள், போர் விமான உற்பத்திகள் என்பவற்றினை, உதவிகள் என்ற பெயர்களுடாக  தமது உற்பத்திகளை விற்று பணம் சம்பாதிக்கின்றார்கள். Liberty Statue இது ஒரு புறம் என்றால் இன்னும் சில நாடுகள் நடுநிலையில் இருப்பது போல் நடித்து, தமது நாட்டின் நலத்தையும் பொருளாதாரத்தையும் இச்சமயத்தில் அதிகரித்து, உலக வல்லரசுப்போட்டியில் குதிக்கின்றார்கள்..!  Serbia

பப்லி பௌன்சர் (Babli Bouncer)

படம்
  நடிகை தமன்னா நடித்த ஒரு இந்திப்படத்தின் தமிழாக்கத்தை பார்த்தேன்.   எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு நம்பிக்கை தரும் நல்ல படமாக இருக்கும் என்று..! ஒவ்வொரு பெண்ணும் பார்க்கவேண்டிய படம் என்று இதனைச்சொல்லலாம். எல்லோருக்கும் படிக்க வாய்ப்போ அல்லது அதன்மேல் ஆர்வமோ வருவதில்லை. சிலருக்குத் தான்   அது அமையும். இந்தக்கதையில்   கிராமத்தில் எதையும் பற்றிக்கவலைப்படாத, தந்தையார் பழக்கும் மல்யுத்தம் தெரிந்த நாயகிக்கு படிப்பு வரவில்லை.   ஆனால் வயலும் வாழ்வும், விளையாட்டும் என்று இருந்த பெண்ணைக் கல்யாணம் செய்யச்சிலர் பெண் கேட்டுவர, அதை நிராகரித்து, தனக்குப்பிடித்த ஒருவனை மணந்து வாழ ஆசைப்பட்டு, டெல்லி சென்று ஹொட்டல் ஒன்றில் பௌன்சராக வேலைசெய்கின்றாள். அந்த சமயத்தில் அவளின் வேலை, செயற்பாடுகள் பிடிக்காததால், விரும்பியவன் நாயகியை நோகடிக்க, காதலை விடுத்து, தனது தகுதிகளை வளர்த்துக்கொள்கின்றாள். நல்லதுகளைச் செய்கின்றாள். சமூகத்தால் அங்கீகாரம் கிடைத்து, மாநில முதல்வரால் அவளைப் பாராட்டும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றாள்.  நாயகியின் காதலை முதலில் ஏற்காதவன் திரும்பவர, அவனில் ஆர்வம் காட்டாமல், தன்னைப்போல் பல பெண்பௌ

சுடுகாற்று விநியோகம்..!

படம்
A plant providing heating for the people of Yakutsk in Siberia releases smoke into the air as dusk falls.  எமது நாட்டில் சூரியன் வஞ்சகம் பார்க்காமல் இருப்பதால் நாமெல்லாம் மிக ஆரோக்கியமாகவும், எங்கும் போய்வரக்கூடிய வகையில், சூழலும் கிடைக்க வரம்பெற்றவர்கள்.  அதேநேரம், இந்த உலகில் ஒரு சாரார் வருடத்தில் அதிக நாட்கள் குளிரிலேயே வாழவேண்டிய சூழலில்இருக்கின்றார்கள். அவர்களைப் பார்க்க நல்ல அழகாககவும், நிறமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதாகத்தோன்றும். அவர்களின் வாழ்க்கை முறையை நேரில் பார்த்தால் தான் புரியும்  அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள்..! -60 அல்லது -70 பாகை செல்ஸியஸ் வெப்பநிலையில் கூட வாழ்பவர்கள் அவர்கள்..! தமது உறைவிடங்களுக்குள்  குளிரைத்தாங்க எத்தனையோ வழிமுறைகளைச் செய்யவேண்டியுள்ளது. பல வித கம்பளி ஆடைகளை அணியவேண்டியுள்ளது. கொழுப்பான உணவுகளை அதிகம் எடுக்கவேண்டியுள்ளது.  தண்ணீருக்குச் சிரமப்பட வேண்டியுள்ளது. உருகிய பகுதிகளுக்குச் சென்று நீர் எடுக்க வேண்டியுள்ளது. இல்லை என்றால் பனிக்கட்டிகளை உருக்கி நீராக்க வேண்டி இருக்கும். அவர்களின் வாழ்வியலும் போராட்டமானதே..! இப்படியான இடங்களில் வசிப்பவ

லடாக்கில் மரதனோடிக் கின்னஸ் சாதனை..!

படம்
  உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கின்றன. அவற்றில் சில இயற்கையின் கிருபையாலே அமைந்துவிடுவதுண்டு. சில மனித முயற்சிகளால் அமைவதுண்டு.  சில இடங்களில் இரண்டும் சேர்ந்து அமைவதும் உண்டு..! தற்போது குளிர்காலம் என்பதால் இந்திய அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள இந்தியச் சீனா எல்லைப் பிரதேசமான லடாக்கில் (Ladakh) இருக்கும் உலகிலே உயரமான ஏரி கடும் குளிரால் உறைந்துள்ளது..!   தற்போது -30 பாகை செல்சியஸ் வெப்பநிலை இருப்பதால், பங்கோங் சோ    ( Pangong Tso )   என்ற  13,862 அடி உயரத்திலுள்ள அந்த ஏரி  உறைந்துள்ளது ( Frozen ) .    இயற்கையால் ஏற்பட்ட இந்தச்சூழலைப் பயன்படுத்தி, அப்பகுதி மக்கள், மரத்தான் ஓட்டத்தை வைத்துள்ளார்கள். 21 கிலோமீற்றர்  தூரத்தை 4 மணி நேரத்தில்  கடந்துள்ளார்கள். 75 ஓட்ட வீரர்கள் இதில் கலந்துகொண்டு, இந்நிகழ்வைச் சிறப்பித்ததுடன், உலகிலே உயரமான இடத்தில், அதுவும் உறைந்த ஏரியின் மேல் நடந்த மரதனோட்டம் என்று  உலகசாதனைப் புத்தகமான கின்னஸில் பதியப்படக் காரணமானார்கள் ( Guinness World Record of Marathon ) . இந்தியாவில் பலரின் கவனத்திற்கு இச்செய்தி சென்றுள்ளது..! ஆ.கெ.கோகிலன் 23-02-2023.

குலுகுலு..!

படம்
  யூடியூபில் ஒரு சமயம் பார்க்கும் போது குறைந்த நேரத்தில் அதிகம் பேர் பார்த்த ஒரு ட்ரைய்லராக ( Trailer ) இந்தப்படத்தின் ட்ரைய்லர் இருந்தது..! குறிப்பாக அந்த ட்ரைய்லரில் நடிகர் சந்தானம் வித்தியசமாக நடித்திருந்தார்.   அதனாலே அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் படம் வெளிவந்து மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறாததால் அந்த ஆவலும் குறைந்துவிட்டது. இந்தநிலையில் இந்தப்படத்தின் டிவிடியை வாங்கி, பல நாட்களாக பார்க்க மனமில்லாமல் வைத்திருந்தேன். நேற்று ஒரு எண்ணம் வர பார்க்க முனைந்தேன். எழுத்தோட்டம் தொடங்க முன்னரே வெறுத்துவிட்டது. பின்னர் தொடர்ந்து பார்க்காமல் படுத்துவிட்டேன்.  இன்று எப்படியாவது பார்த்து முடித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு அமர்ந்தேன்.   படம் நகரும் விதமே புதிதாக இருந்தது..! இதுவரை எந்தத் தமிழ் படத்திலும் பார்க்காத கதைசொல்லும் பாணி ஒன்று புரிந்தது. பல இடங்களில் புதுமையான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. வித்தியாசமாக இருப்பதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனை எல்லாம் செய்து இருந்தார்கள். படத்தின் கதை என்று பார்த்தால், கூகுள் என்று அழைக்கப்படுகின்ற ஒருவனின் வாழ

தோடம்பழத் திருவிழா..!

படம்
  உலகில் பல்வேறுபட்ட கொண்டாட்டங்கள் நடக்கின்றன..! இவை அந்நாடுகளின் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப அமைகின்றன.   ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் அப்படியான ஒரு விழா .   ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்றது. உலகில் ஏற்பட்ட அசாதாரண சூழல்   காரணமாக கடந்த 3 வருடங்கள் இவ்விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை.   இந்தவருடம் பெப்ரவரி 18 இல் இந்தவிழா நடந்துள்ளது. ஐவ்ரியாவின் கானிவேல் (The Carnival of Ivrea) என்று அழைக்கும் இவ்விழா, வடக்கு இத்தாலியின் ஒரு நகரமான ஐவ்ரியாவில் நடைபெறும் ஒரு திருவிழா .   இதனை தோடம்பழங்கள் (Oranges)   எறியும் போர் என்றும் அழைக்கப்படும் . ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்களிடையே தோடம்பழங்களை வீசி எறிந்து விளையாடும் பாரம்பரியமிக்க இந்த விளையாட்டை, இத்தாலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் மக்கள் நடாத்துகின்றார்கள்.   தோடம்பழப் போர் , (War of the Oranges -1801) , என்பது போர்த்துக்கல்லுக்கு எதிராக பிரான்சிற்கும் ஸ்பெயினுக்கும்   ஏற்பட்ட சிறிய முரண்பாட்டால்(Brief Conflict) வந்தது. 1800 ம் ஆண்டில் , பிரான்சின் அரசியல் மற்றும் பொருளாதார விரிவாக்கத

நிகரகுவா தீவிலுள்ள விமானப்பாதை..!

படம்
  வீதி மற்றும் விமான ஓடுபாதை  உலகில் வளரும் சில நாடுகள், இருக்கும் வளங்களை உச்சமாகப் பயன்படுத்த பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றது.   ஒரு காப்பெற் வீதியை (Carpet Road) அமைக்க மிகுந்த செலவாகும். அதேபோல் ஒரு விமான ஓடுபாதையை அமைக்கவும் அதிக செலவாகும். நிகரகுவா இரண்டும் குறைவாக பயன்படும் சூழலில் ஒரு வீதியினையே விமான ஓடுபாதையாகவும், மக்களின் பொதுவான போக்குவரத்து வீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றது..! ஒமிரேபே தீவு இவ்வாறு ஒரு வீதியையே இரண்டு வழியிலும் பயன்படுத்தக்கூடியவாறு நடவடிக்கை எடுத்திருப்பது நிகரகுவா (Nicaragua)  அரசு. குறிப்பாக ஒமிரேபே  (Ometepe) என்ற ஏரியின் நடுவிலுள்ள தீவிலே இப்படியான வசதியுள்ளது. ஒமிரேபே தீவு மேலும் இத்தீவில் இரண்டு எரிமலைகள் உள்ளன. இருந்தாலும் இந்தத்தீவில் மக்கள் வசிக்கின்றார்கள்..!   இந்நாட்டில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் பிரதேசங்களில் இதுவும் ஒன்று.  ஒமிரேபே என்ற தீவு உருவாவதற்கு காரணமே இந்த இரு எரிமலைகளின் வெடிப்புகள் தான். எரிமலை வெடிப்பால் வெளித்தள்ளப்பட்ட பாறைக்குழம்புகளே இறுகிப்பின்னாட்களில் ஒரு தீவாகவே மாறிவிட்டது. அத்துடன் ஏறக்குறைய 30இற்கும் அதி

கடாவர்..!

படம்
  இந்தப்பெயரே புதுமையானதாக இருந்தது..! மருத்துவம் படிப்பவர்களுக்கு இது அறிமுகமான பெயர். மருத்துவப்படிப்பிற்காக வழங்கப்படும் இறந்த உடல் தான் கடாவர் (Cadaver). சில மனிதர்கள் இருக்கும் போது பயன்படாவிட்டாலும் இறந்தபின்னர்  உலகிற்கு பயன்படுவதும் இறைவனின் விருப்பமே..! மருத்துவ உலகம் வியாபார உலகத்துடன் நெருங்கியதால் வந்த விளைவு மருத்துவ வியாபாரம்..! உலகை ஆட்டிப்படைக்கும் ஒரு பெரிய விடயத்தை, ஒரு அழகான காதல் கதைக்குள் புகுத்தி, அருமையாகத் திரைக்கதை அமைத்து படத்தை கண்கொட்டாது பார்க்கும்படி செய்துள்ளார் மலையாள இயக்குனர் அனூப் எஸ் பனிக்கர் (Anoop S Panicker).    அதேபோல் படத்தில் பணிபுரிந்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். குறிப்பாக   பிணவறையில் ( Mortuary ) உடற்கூராய்வு (P ostmortem ) செய்யும் மருத்துவராக ( Pathologist ) வந்த அமலா போலின் (Amala Paul) நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. அவரின் உடல்மொழியும், கண்கள் சொல்லும் காவியமும் மனதில் தைத்தது. கண்களால் தகவல் கடத்தும் ஒரு நுட்பத்தை இதுவரை நான் எந்தத்தமிழ் படத்திலும் பார்க்கவில்லை. இதற்கே ஒரு சலூட் வைக்கலாம் இயக்குனருக்கு..! என்னை

துணிவு..!

படம்
  தற்போதைய சூழலில் நிதி நிறுவனங்களினதும், வங்கிகளினதும் நிலைப்பாடு மிகப்பயங்கரமாக இருக்கின்றது என்பது யாருமே ஏற்றுக்கொள்ளத் தயங்கும் ஒரு உண்மை தான்..!  இதனை அடிப்படையாகக் கொண்டு, மக்களிடம்    பணத்தைக் கொள்ளையடிக்கும் வங்கியில் இருந்து, அந்தப்பணத்தை திரும்ப எடுக்கும் ஒரு விறுவிறுப்பான முயற்சியாகப் படம் உள்ளது.   No Guts, No Glory   என்ற   Tag உடன்  படம் துடங்குகின்றது.   தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே சண்டை தான்..!   எல்லாம் ஒரு அளவுக்குள்   இருக்க வேண்டும்.   என்னால் தொடர்ந்து படத்தைப்பார்க்க முடியவில்லை.  நல்லவேளை தியேட்டர் போகவில்லை. இல்லை என்றால் ரிக்கெட் காசு வீண்..! வீடியோவில் படத்தைப் பார்த்ததால், அதிக சண்டைகள்   படத்தை வெறுக்கச்செய்து, வேண்டாம், எழும்பலாம்.. என்னும் தறுவாயிலே, படத்தின் கதை புரிந்தது..!    பின்னர் படம் ஓரளவு பார்க்கக்கூடியதாக இருந்தது. நரைத்த தலையுடன் அஜித்தை அட்டகாசம் செய்ய வைத்திருக்கின்றார் இயக்குனர். பல இடங்களில் நல்லா இருக்கின்றது. சில இடங்களில் கடுப்பாகவும் இருக்கின்றது. படமே முழுக்கச் சண்டையாக இருப்பதால், சண்டைப்பிரியர்களுக்கு படம் பிடிக்கலாம். என்னைப்போன

அல்காட்ராஸ் சிறை (Alcatraz Prison)

படம்
  ஒரு மனிதன் தனியாக ஜன்னலே இல்லாத ஒரு அறைக்குள் அடைபட்டு இருப்பதே ஒரு தண்டனை என்றால், இன்னும் அதிக தண்டனை என்னவென்றால், வெளியே தலைகாட்ட முடியாதபடி மற்றவர்களால் பூட்டப்பட்ட அறைக்குள் இருப்பது..!    கைதியாக சிறையில் இருப்பவர்களை நினைக்கும் போதே மனம் பதைபதைக்கின்றது.   அதுவும் இருண்ட சிறைக்குள் இருப்பது என்பது மிகப்பெரிய தண்டனை.   அறிவு இருப்பதாலே இது தண்டனையாகத் தெரிகின்றது. வெளியில் இருக்கும்    சுதந்தரம்,  வெளிச்சம் என்பவற்றை நினைக்க எமது அறிவே காரணம். அதுவே எம்மை அழுத்தும்..! வருத்தும்..! அது மிகவும் வேதனையான ஒரு விடயமாக இருக்கும். இந்த அறிவு இல்லை என்றால் எங்கு அடைத்தாலும் கவலையில்லை. ஒரு சாதாரண விலங்குபோல் இருக்க   வேண்டியது தான். இருந்தாலும் சில விலங்குகளே அடைத்து வைக்கும்போது அதற்கு வீரியமும் கோபமும் கூடுகின்றது. அப்படி என்றால் மனிதனுக்கு..? வீடியோ ஒன்றில் அல்காட்ராஸ் என்ற ஒரு தனித்தீவிலுள்ள சிறைச்சாலையைப் பார்த்தேன். அது இப்போது ஒரு சுற்றுலாத்தலமாக இருக்கின்றது..! முன்பு எத்தனையோ கைதிகள் அங்கு சிறைவைக்கப்பட்டு இருந்தார்கள். சிலர் விடுவிக்கப்பட்டார்கள். பலர் அங்கேயே மாண்டுள்ளார்க

வாரிசு..!

படம்
  மாஸ் நடிகர்கள் என்றால் இப்படியான பெயர்களிலும் படங்கள் வரவேண்டும் போல் இருக்கின்றது. ரஜினிக்கு ஒரு “அடுத்த வாரிசு..!” அதேபோல் இளையதளபதி விஜய்க்கு  ஒரு “வாரிசு..!” நிறைய ரசிகர்களைக்கொண்ட விஜய்க்கு படங்களின் கதைகள் தற்போது சரியாக அமையவில்லையோ தெரியவில்லை. பொறுமையாக இருந்து பார்க்க, பல இடங்களில் சிரமமாக இருக்கின்றது..!   நல்ல வேளை நான் தியேட்டர் போய் பார்க்கவில்லை. போய் இருந்தால் நொந்திருப்பேன்.   அப்படிப் படத்தை எடுத்து வைத்திருக்கின்றார்கள். இவ்வளவு நடிகர்களை போட்டு வீணடித்தது மாதிரியே எனக்கு இருந்தது. நடிகர் விஜய்க்கு நன்றாகப் பாடவும், ஆடவும் வரும் என்பது தமிழ்நாட்டிற்குத் தெரியும். அதைத்தாண்டி நல்ல கதைகளுள்ள, காலத்திற்குத் தேவையான யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தால் அவரின் ரசிகர்கள் தாண்டி மற்றவர்களும் பார்க்கலாம்.   படம் வசூல்ரீதியில் வெற்றிபெற விஜயின் ரசிகர்கள் பார்த்தாலே போதும். ஆனால் ஒரு படம் எந்த ஊடகத்தில் எப்போது பார்த்தாலும் ஏதாவது நல்ல தாக்கங்களை ஏற்படுத்தினால், அது தான் சிறந்த படம் என்பது எனது நிலைப்பாடு. இந்தப்படத்தில் இருக்கும் மையக்கரு உண்மையில் நல்லதே