லடாக்கில் மரதனோடிக் கின்னஸ் சாதனை..!
உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கின்றன. அவற்றில் சில இயற்கையின் கிருபையாலே அமைந்துவிடுவதுண்டு. சில மனித முயற்சிகளால் அமைவதுண்டு.
சில இடங்களில் இரண்டும் சேர்ந்து அமைவதும் உண்டு..! தற்போது குளிர்காலம் என்பதால் இந்திய அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள இந்தியச் சீனா எல்லைப் பிரதேசமான லடாக்கில் (Ladakh) இருக்கும் உலகிலே உயரமான ஏரி கடும் குளிரால் உறைந்துள்ளது..!
தற்போது -30 பாகை செல்சியஸ் வெப்பநிலை இருப்பதால், பங்கோங் சோ (Pangong Tso) என்ற 13,862 அடி உயரத்திலுள்ள அந்த ஏரி உறைந்துள்ளது (Frozen).
இயற்கையால் ஏற்பட்ட இந்தச்சூழலைப் பயன்படுத்தி, அப்பகுதி மக்கள், மரத்தான் ஓட்டத்தை வைத்துள்ளார்கள்.
21 கிலோமீற்றர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்துள்ளார்கள். 75 ஓட்ட வீரர்கள் இதில் கலந்துகொண்டு, இந்நிகழ்வைச் சிறப்பித்ததுடன், உலகிலே உயரமான இடத்தில், அதுவும் உறைந்த ஏரியின் மேல் நடந்த மரதனோட்டம் என்று உலகசாதனைப் புத்தகமான கின்னஸில் பதியப்படக் காரணமானார்கள் (Guinness World Record of Marathon). இந்தியாவில் பலரின் கவனத்திற்கு இச்செய்தி சென்றுள்ளது..!
ஆ.கெ.கோகிலன்
23-02-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக