சரஸ்வதி மண்டபம்..!

 


 

இன்று இந்திய அரசின் உதவியுடன் கட்டிய கலாசார மண்டபம் மக்கள் பாவனைக்கு கையளிக்க இந்திய அமைச்சரும், வேறு சில இந்திய உயர் அதிகாரிகளும், இலங்கை ஜனாதிபதி, மற்றும் சில இலங்கை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்

எனப்பலரும் வந்திருந்தார்கள்.


நான்  காலை 9.00 மணிக்கே சென்றுவிட்டேன். அங்கே கடும் சோதனைகள் நடந்தன. எல்லாவற்றையும் சோதித்தார்கள். பின்னர் உள்ளே விட்டார்கள். உள்ளேயும் எமக்கான இருக்கைகள் சரியான முறையில் ஒதுக்கப்படவில்லை. ஏதோவோர் இடத்தில் போய் இருந்தேன். அது அவ்வளவு பொருத்தமான இடமாகத் தெரியவில்லை. பின்னர், கிளிநொச்சிப் பொறியியல் பீட டீன் இருந்த இடத்திற்கு அருகில் இடமிருந்தது.  அவரை எனக்கு முதலே தெரியுமென்பதால் அங்கே அவருடன் இருந்தேன். அவர்களுடன் இருந்ததால் ஆன்மீகம் மற்றும் man-matter போன்ற விடயங்களில் brain storming செய்தோம்.

 எமக்கு முன்னால் மோகன் வைத்தியா என்ற ஒரு இந்தியப்பாடகரும் இருந்தார். அவருக்கு எங்களை  யார் என்று  தெரிந்ததோ தெரியாது..? ஆனால் சங்கடப்பட்டு இருந்ததாக உணர்ந்தேன்.

என்னைப்பொறுத்தவரை மண்டபம் சரியாகப் பேணப்படவில்லை என்று தோன்றியது. இருந்தாலும் இவ்வளவு செலவு செய்து இதனைக்கட்டியிருக்கின்றார்கள்.  அது மக்களுக்குப் பயன்பட்டால் சந்தேசம் தான். சும்மா வீம்புக்குப் பூட்டி வைத்திருப்பதில் பலனில்லை.

11.30இற்கு முக்கியமான உரைகள் முடிந்து நன்றியுரையும் முடிந்தது. வெளிக்கிடலாம் எனவிருக்க, மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு கலைநிகழ்ச்சிகள் என்றார்கள். வேறுவழியின்றி, இருந்து ரசித்தேன். சிங்கள கலைஞர்கள்  செய்த நிகழ்வுகள் புதுமையாகவும் ரசிக்கும்படியும் இருந்தது. தமிழில் இன்னும் பயிற்சியும், சரியான குழுத்தெரிவும் தேவை  என்பது புரிந்தது. இப்போது தான் மண்டபம் வந்துள்ளது. இனிவரும் காலங்களில் எமது சிறந்த படைப்புக்களும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இந்த மண்டபத்திற்கு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ”சரஸ்வதி மண்டபம் ” எனப்பெயர் சூட்டினார். எனக்கும் அது பொருத்தமான பெயராக இருந்தது.  அத்துடன் அவரது ஆட்சி சிறப்பானதாக இருக்கவும், கடந்தகாலத் தவறுகள் ஏற்படாமல் நாட்டைப் பாதுகாக்கவும் வேண்டப்பட்டது. நானும் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். மக்களின் வாக்குகள் இல்லாமல், காலத்தாலும், இயற்கையாலும் வழங்கப்பட்ட வாய்ப்பு அது. அவர் அதனைச் சரியாக பயன்படுத்தினால், அவர்  இலங்கைச் சரித்திரத்தில்  நிலைத்து நிற்கலாம்..!

 


ஆ.கெ.கோகிலன்

11-02-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!